திரைப்படவிழாக்கள்
Typography

'8-வது சென்னை சர்வதேச ஆவணம் மற்றும் குறும்பட விழாவில்' எத்திராஜ் கல்லூரி அரங்கத்தில் தேவரடியார் இன் சதிர்-த லைப்&ஆர்ட் ஆஃப் முத்துகண்ணம்மாள்' என்ற மிக அபூர்வமான ஆவணப்படம் திரையிடப்பட்டது.

'தேவரடியார்கள்' பத்தாம் நூற்றாண்டிலிருந்து சமூகத்தில் மிக முக்கியமான உயர்ந்த இடத்தில் இருந்தார்கள். அந்த சமூகத்தின் கடைசி விழுது 'முத்து கண்ணம்மாள்'. 85 வயது தாண்டி வாழ்ந்து கொண்டு 'தேவரடியார்' சமூகத்தின் நேரடி சாட்சியாக இந்த ஆவணப்படத்தில் தனது குரலை, ஆடலை பதிவு செய்திருக்கிறார். இந்த வயதிலும் சுழன்று ஆடுகிறார். பாடல் வரிகளை மறக்காமல் பாடுகிறார்.

பாடிக்கொண்டு ஆடுவதுதான் 'சதிர்' எனும் கலை. 'சதிர்' எனும் கலையை முழுமையாக கற்று பாடி ஆட முடியாத ஒரு சமூகம், ஆடுவதை மட்டும் மேற்கொண்டு 'பரத நாட்டியம்' என்ற பெயரில் அபகரித்ததை மிக மென்மையாக பதிவு செய்திருக்கிறது. காரணம் இந்த ஆவணப்படத்தை தயாரித்தது இந்திய அரசின் அங்கமான 'பிலிம் டிவிசன்'.

பரதக்கலைதான் தமிழகத்தின் தொன்மம் என்று வரலாறு திரிக்கப்பட்டு வரலாற்று நூல்கள் எழுதப்பட்டு இருக்கின்றன. திரித்து எழுதப்பட்ட வரலாற்றை சுட்டிக்காட்டியதால் இந்த ஆவணப்படம் மிக முக்கியமானது. வழுவூர் இராமையா பிள்ளையின் வாரிசு மிகக்கோபமாக 'சதிர் கலையை' களவாடிய கள்வர்களை அடையாளம் காட்டுகிறார். '1947ல் மத்திய அரசு தேவரடியார் முறையை தடை செய்தது' என்ற ஒற்றை வரியில் கடந்து செல்கிறது இந்த ஆவணப்படம்.

'தேவரடியார் இன் சதிர்-த லைப்&ஆர்ட் ஆஃப் முத்துகண்ணம்மாள்' என்ற ஆவணப்படம் மிக முக்கியமான உரையாடலை துவக்கி இருக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்