2016 ம் ஆண்டு லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவில் பார்த்த தென் கொரியப் படம் Tunnel (சுரங்கம்). நீங்கள் எவ்வளவு காலம் வாழ முடியும்? எனும் கேள்வியை படம் திரையில் ஒடும் மணித்துளிளில் நம் மனதுக்குள் தோற்றுவிக்கும் ஒரு படம்.
கொரிய இயக்குனர் கிம் சியோங்-ஹுன் Kim Seong-hun இயக்கத்தில், Ha Jung-woo ஹா ஜங்-வூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க 10 ஆகஸ்ட் 2016 அன்று வெளியிடப்பட்ட இப் படத்தின் முதல் திரையிடலை, லோகார்னோ பெருமுற்றத்தின் பிரம்மாண்டத் திறந்த வெளித்திரையில் பார்த்திருந்தோம். அன்றைய நாட்களில் எழுதியிருக்க வேண்டிய விமர்சனம் ஏனோ தவறிப் போய்விட்டது. ஆனாலும் கொரோனா முடிகத்தில் சிக்கியிருக்கும் இந்த நாட்களில் யூட்டியூப்பில் இந்தப் படத்தை மீளவும் பார்க்க முடிந்தது.
சாதாரண குடும்ப மனிதரான ஜங்-சூ ஈ ஒரு சுரங்கப் பாதைவழியே காரில் செல்கையில், சுரங்கப்பாதை இடிந்து விழுவதில் ஆரம்பமாகிறது கதை. சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொள்ளும் அவரது இயங்கு தளமும, வளமும் மிகச் குறைவானதாகிவிடுகிறது.
மிகக் குறைந்த சிக்னல் அளவுடனாள ஒரு செல்போன் மட்டுமே அவருக்கான வெளி உலகத் தொடர் இணைப்பாக மாறுகிறது. அதனைச் சூறையாடும் ஊடக வெறியில் தொடங்கி, மகளுக்காக வேண்டிய ஒற்றைக் கேக், மற்றும் கையிருப்பிலுள் சொற்பளவிலான தண்ணீருடன் தொங்கும் அவரது வாழ்வுக்கான போராட்டத்தில், காட்டப்படும் மனிதாபிமானம், மற்றும் அரசாங்க அதிகாரிகளின் விளம்பரத்திற்கான விருப்பம், அவசரகால மீட்புக் குழுவும், அதன் தலைவரும், ஜங்-சூவை நாட்டின் ஆதரவுடன் மீட்க ப் போராடுவது என்பதனை சுவாரசியமான திரைக்தையாக நகர்த்திச் செல்கின்றார் இயக்குனர்.
ஒரு சிறிய பகுதிக்குள்ளான காட்சிச் சட்டகத்திற்குள் நின்று கொண்டு, சூழலின் சிரமத்தை ஆபத்தை நிறைவாகக் கொண்டுவருபர் கதையின் நாயகன் எனில், எவளியே உள்ள குளறுபடிகளையெல்லாம் வெளிப்படுத்தும் பாத்திரம், மீட்புக்குழுத் தலைவரினது. அரங்காற்றுப் பயிசிபெற்ற 51 வயதான Oh Dal-su ஓ தல் சூ வின் நடிப்பில் பார்வையாளனுக்கு மிக நெருக்கமாக வருகிறது அப்பாத்திரம்.
தனிமனிதளது வாழ்வில் அரச இயந்திரம், ஊடகப் பரபரப்பு, அரசியல்வாதிகளின் ஈகோ, என்பன செலுத்தக் கூடிய அதிகார ஆளுமைகள் அனைத்துடனுமான கதைப் பின்னலுடன் மக்கள் நீதி பேசும் படமாகக் காணமுடியும்.
முழுப்படத்தினையும் காண ;
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்