ஆவணத் திரைப்படங்களுக்கு உலகளவில் மிகப்பிரபலமானது நியோன் சர்வதேச ஆவணத் திரைப்பட விழா. நீங்கள் ஆவணத் திரைப்படங்களின் மிகப்பெரிய ஆர்வலரா ? புனைவுத் திரைப்படங்களை விட உலக நடப்புக்களுடன் ஒட்டிச் செல்லும் யதார்த்த சினிமாக்கள், அதில் உட்புகுத்தப்படும், அழகான சினிமாக கிரியேட்டிவ் காட்சிகளுடன் உங்களால் இலகுவாக ஒன்றிப் போக முடிகிறதா? இத்திரைப்பட விழா உங்களுக்கானது.
சுவிற்சர்லாந்தில் வருடந்தோறும் நடைபெற்று வரும் இத்திரைப்பட விழா, இம்முறை கொரோனோ வைரஸ் தொற்று மற்றும் ஐந்து பேருக்கு மேல் பொது இடத்தில் கூடத் தடை எனும் காரணிகளால், நடைபெறாமல் போகக் கூடிய சாத்தியத்தில் இருந்தது. ஆனால் கடைசி நேர முயற்சியால், முற்றும் முழுதாக இத்திரைப்பட விழாவை ஆன்லைனில் இலவசமாக காணும் வசதியை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆங்கில, பிரெஞ்சு மொழிகளில் படங்களுக்கான Subtitles கள் இடம்பெற்றுள்ளன. முதல் 500 பேருக்கு ஒரு படத்தை 24மணி நேரம் பார்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய தளத்தில் உங்கள் மின் அஞ்சலுடன் ஒரு இணைப்பை தொடங்கினீர்கள் எனில் இந்த படங்களை இலவசமாக பார்வையிடலாம். மே 2ம் திகதி வரை இந்த இலவச இணைப்பு தொடர்கிறது. அதோடுபுகழ்பெற்ற பெண் திரைப்பட வியலாளர் Claire Denis, ஆஸ்கார் விருது பெற்ற பிரேசில் இயக்குனர் Petra Costa, சுவிஸ் கனேசிய திரைப்பட வியலாளர் Peter Mettler ஆகியோரின் பிரத்தியேக திரைப்படங்களும், ஆன்லைன் வகுப்பு பயிற்சிப் பட்டறைகளும் இடம்பெறுகின்றன.
இணைப்பு :https://www.visionsdureel.ch/en
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்