திரைப்படவிழாக்கள்

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

இயக்குனர் Francesca Mazzoleni இயக்கத்தில் உருவான இந்த ஆவணத் திரைப்படம், இத்தாலியின் ரோம் புற நகர்ப்பகுதிகளில் ஒன்றான Idroscalo di Ostia எனும் கடலோரக் கிராமத்தையும், அக்கிராமத்தின் கடைசி சில நூறு மக்களையும் சுற்றி, ஒன்றரை மணி நேரம் சுழல்கிறது.

தென்னிந்திய சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜீத் நடித்த " சிட்டிஷன்" படத்தில் அத்திப்பட்டி எனும் கடலோரக் கிராமம் அழிந்து போவது குறித்த ஒரு புனைவுக் கதை பேசப்பட்டிருக்கும். ஆனால் ஐரோப்பிய நாடான இத்தாலியில் அழிந்து போகக் கூடிய நிலையில் இருக்கும் கடற்கிராமம் ஒன்றின் உண்மைக் கதைதான் Punta Sacra.

Punta Sacra என்றால், இத்தாலிய மொழியில், புனிதப் புள்ளி என அர்த்தமாம். அவ்வாறான ஒரு கடலும் கரையும் சேரும் ஒரு புள்ளியில் அமைந்துள்ள கடலோரக் கிராமத்தில், கடலின் நீர்மட்டத்தின் உயர்வு ஒருபுறம், சட்டவிரோத குடியிருப்பு பகுதி எனக் கூறி அரசின் வீடு அகற்றும் திட்டம் மறுபுறம். இரண்டுக்கும் இடையில் தங்கள் வீடுகள் சின்னாபின்னமாகத் தொடங்க, ஒரு பகுதி மக்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேறிவிடுகின்றனர்.

எஞ்சியவர்கள் இது தான் எங்கள் வேர், எங்கள் ஆதிநிலம் என்ற பிடிப்பாலும், அதை தமது பிள்ளைகளுக்கும் கடத்துவத்தற்காகவும், அங்கே தொடர்ந்து வசித்து வருகின்றனர். அவர்களது பதின்ம வயது பிள்ளைகளும் அந்த கடலும், கடல் சார்ந்த நெல்லை நிலத்துடன் ஒருவித இனம் புரியாத பிணைப்பை கொண்டிருக்கின்றனர். தமது குடும்பம், தமது விழாக்கள், தமது எதிர்கால அபிலாசைகள், தமது பதின்ம வயதுக் காதல் என அனைத்தையும் இக்கடலைச் சுற்றியே நகர்த்துகின்றனர்.

அதை Francesca வின் கமெரா மிக லாவகமாக, யதார்த்தபூர்வமாக படம்பிடித்திருக்கிறது. அதற்கேற்ற அழகான இசைக்கோர்வை. drone மூலம் படம்பிடிக்க அக்கிராமத்தின் கடல் எல்லைகளும், நள்ளிரவும், விடிவெள்ளியும், அந்திமாலையும் படத்தின் எடிட்டிங்குக்கு கூடுதல் பலம்.

தாய், தந்தை, கடல், இயற்கை, விதி என பல கட்டங்களில் எடிட்டிங் நகர்கிறது. ஆனால் எந்தவொரு Voice Over உம் இல்லாமலே படத்தை புரிந்துகொள்ளக் கூடியதாகவும், அவர்களது தனிமைப்படுத்தப்பட்ட உலகத்திற்குள் புகுந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது.

சுவிற்சர்லாந்தின் கூட்டாட்சித் தலைவி சிமோனெத்தா சோமரூகா இன்று தனது 60 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

« 7 வருடங்களாக இக்கிராம மக்களுடன் பழகியிருக்கின்றேன். ஒவ்வொரு கிரிஸ்துமஸ் விடுமுறைக்கும் அவர்கள் வீடுகளுக்கு சென்று அவர்களுடன் கொண்டாடி வருகின்றேன். நான் படம்பிடிக்க தொடங்குகையில், அவர்களது இயல்பான வாழ்க்கை மாத்திரம் அல்லாது, கமெராவுக்கு ஏற்ப நான் செய்யச்சொன்னவற்றையும், அவர்கள் செய்வதையும் கூட படம்பிடித்திருக்கின்றேன். ஆனால் அவையும் அவர்களது பிரதிபலிப்பே » என்கிறார் Francesca Mazzoleni.

யுத்தம், இயற்கைப் பேரிடர், இன, மதக் கலவரம் என பல காரணங்களால் சொந்த நிலத்தை இடம்பெயர்பவர்கள் மத்தியில், அங்கு தொடர்ந்து வாழ்வதையே எதிர்ப்போராட்டமாக கருதி வாழும் இம்மக்களை படம்பிடித்த Punta Sacra ஆவணத்திரைப்படம், கொரோனோவால் பாதிக்கப்பட்ட இத்தாலிக்கும், இத்தாலியின் சினிமாத் துறைக்கும் ஒரு புது வெளிச்சம்.

நடிப்புக்கும், உண்மைக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு : முடிந்தால் இந்த திரைப்படத்தில் அதை கண்டுபிடியுங்கள் !

Punta Sacra எனும் புனிதப் புள்ளியாக . இந்தப்படத்தில் வரும் Ostia கிராமத்திற்கும், அதன் எல்லைப்புறம் ஒன்று கடலோடு சேரும் இடத்தின் மையப்புள்ளியிலேயே தனது வீட்டைக் கொண்டிருக்கிறது ஒரு குடும்பம். அக்குடும்பத்தின் இரு பிள்ளைகள் படத்தின் கடைசிக் காட்சியில் தமக்குள் உரையாடிக் கொள்வர்கள்.

அன்னக்கிளிக்கு வயது 44 !

அதில் ஒருத்தி, « இன்னமும் 10 வருடங்களில் இந்த Punta Sacra வின் பெயர் பேசப்படுமா அல்லது நாம் எல்லோரும் அழிந்துவிடுவோமா » என மற்றவளிடம் கேட்பாள். அதற்கு மற்றவள், ஆம் என்பாள், பிறகு சற்று தயங்கிவிட்டு இல்லை, இல்லை. புதிய பரிணாமத்தில் மீண்டும் பிறப்பு எடுப்போம் என்பாள்.

இந்தப்படமும், இதன் வெற்றி அடையாளமும், அவர்கள் புதிய பரிமாணத்தில் மீண்டும் பிறந்துவிட்டார்கள் என்பதற்கு சான்று.

வீரம்மாவும், Protée வும் !

படத்தின் VOD (video on demande) இன்னமும் வெளியாகவில்லை. ஆனால் இந்த இணைப்பை Bookmark செய்துகொள்ளுங்கள். VOD வெளிவந்ததும் இணையத்திலேயே பார்வையிடலாம். : http://vod.cnc.fr/title/d6685d69-b78a-4b78-a57d-6364e90964bc

படத்தை பற்றி மேலதிக தகவலுக்கு : https://www.visionsdureel.ch/en/2020/film/punta-sacra

- 4தமிழ்மீடியாவுக்காக : ஸாரா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா பெருந்தொற்று ஒரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.

"வேம்பி..!"

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.