திரைப்படவிழாக்கள்

«Visions du Réel» சர்வதேச நியோன் திரைப்பட விழாவின்  செஸ்டெர்ஸ் தங்கக்காசு (Sesterce d’Or) விருதினை «Taste of Cement» எனும் சிரியத் திரைப்படம்  தட்டிச் சென்றது.

இயக்குனர் சியாத் கல்தும் (Ziad Kalthoum) இன் நெறியாள்கையில் உருவான இத்திரைப்படம் சுமார் 20 முழுநீள ஆவணத் திரைப்படங்களுடன் போட்டியிட்டு வெற்றியீட்டியது.

தமது சொந்த நாட்டில் வீடுகள் குண்டுவீச்சில் தரைமட்டமாகிக் கொண்டிருக்க லிபனானின் தலைநகர் பேய்ரூத்தில் வானுயரும் கட்டிடப் பணியில் ஜீவிக்கும் சிரிய அகதித் தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றியது இத்திரைப்படம். «இத்திரைப்படத்தின் காட்சிவடிவமைப்பில் கையாளப்பட்டிருக்கும் மொழியியல் மிகச் சக்தி வாய்ந்தது» என்கின்றனர் நடுவர் குழுவினர்.

Grand Angle பிரிவில் Prix du Public, பொதுமக்களின் தெரிவாக வெற்றி பெற்றது «In Loco Parantis» எனும் அயர்லாந்து திரைப்படம்.  அயர்லாந்தில் பொதுவாக குழந்தைகளுக்கான உணடுறை பள்ளி (Boarding School) கிடையாது.  கடைசியாக எஞ்சியிருக்கும் ஒன்றே ஒன்று,  கெல்ஸ் எனும் சிரிய கிராமத்தில் உள்ளது. அங்கு 40 வருடங்களுக்கு மேலாக ஆசிரியர்களாக பணிபுரியும் John மற்றும் Amanda எனும் வயோதிப தம்பதியினரையும், அங்கு பயிலும் குழந்தைகளையும் தொடர்கிறது கமெரா. பள்ளிக் கல்வியை எவ்வளது மகிழ்ச்சிகரமாகவும், சுவாரஷ்யமாகவும் கொண்டு செல்ல முடியும் என்பதற்கு இந்த திரைப்படம் நல்லதொரு உதாரணம். உலகின் அனைத்து பள்ளிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டிய ஒரு திரைப்படம் என்கின்றனர் பொதுமக்கள்.

சுவிற்சர்லாந்து படைப்புக்களில் சிறந்த  முழு நீளத் திரைப்படமாக Yamina Zoutat இன் «Retour au Palais» தெரிவானது. பாரிஸின் நீதிமன்ற வளாகத்தில் குற்றப் பத்திரிகை நிருபராக பணிபுரியும் Yamina Zoutat, அவ்வளாகத்தை தனது கமெராவின் ஊடாக தொடர்ந்து படமாக்கியுள்ளார். பரிசு பெரும் தருணத்தில், உணர்ச்சிகரமாக பேசிய Yamina Zoutat «உண்மையைச் சொல்லப் போனால், நிஜம், கற்பனையிலும் பார்க்க ஆச்சரியமானது, பயங்கரமானது» என்றார்.

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த நியோன் சர்வதேச ஆவணத் திரைப்பட விழாவில் முதல் முறையாக 40,000 க்கு மேற்பட்ட திரை ரசிகர்கள் பிரசன்னமாகியுள்ளனர். இவ்விழாவில் சுமார் 55 நாடுகளைச் சேர்ந்த ஆவணத் திரைப்படங்கள் கலந்து கொண்டன. இந்த வருடத்துடன் ஓய்வு பெறும் இத்திரைப்பட விழாவில் கலை இயக்குனர் Luciano Barisone க்கு நேற்றைய பரிசு விழாவில் மிக நீண்ட நேர கரகோசத்துடன் பிரியாவிடை வழங்கப்பட்டது. கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் அப்பதவியை அவர் பொறுப்பேற்ற போது, பெரும்பாலும் ஐரோப்பிய திரைப்படங்களையே இத்திரைப்பட விழாவில் காணக்கிடைத்தது.  அதனை பெருமளவில் வியாபித்து, ஏனைய ஆபிரிக்க, ஆசிய, தென் அமெரிக்க திரைப்படங்களுக்கும், அதற்கான அங்கீகாரத்தை கொடுத்து இங்கு காட்சிக்கு கொண்டு வருவதில் Luciano Barisone க்கு மிக முக்கிய பங்கு உண்டு. 

அடுத்த வருடம் முதல்,  சுவிஸ்/பிரான்ஸ் பூர்வீகம் கொண்ட Emilie Bujès (36) புதிய கலை இயக்குனராக பொறுப்பேற்கிறார். 2012 முதல் Vision du Réel திரைப்பட தெரிவுக் குழுவில் இடம்பெற்றுள்ள இவர் இதுவரை மேலதிக கலை இயக்குனராகவும் செயற்பட்டு வந்தார். எதிர்வரும் காலங்களில்  வேர்ச்சுவல் ரியாலிட்டி, அனிமேஷன் டாக்குமெண்டரி ஆகிய புதிய தொழில்நுட்பங்களுடன், இளைஞர்களை மேலும் ஆவணத்திரை உலகில் கொண்டு வரும் முயற்சியில் தனது பணி தொடரும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுளார்.

Taste of Cement : Trailer 

In Locos Parantis : Trailer 

 

- 4தமிழ்மீடியாவுக்காக நியோனிலிருந்து ஸாரா

 

கதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

சிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்