திரைப்படவிழாக்கள்

நேற்று முன் தினம் (06.08.2014) 67வது லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவின் முதல்நாள் ஆரம்பத்தின் போது, அதன் தலைவர் மார்க்கோ சோலாரி, படைப்பாக்கச் சுதந்திரத்துடனும், தனித்துவத்துடனும், அவ்விழா தொடரும் எனத் தனதுரையில் உறுதிபடத் தெரிவித்திருந்தார். அந்தக் கூற்றினை வலுப்படுத்துவதாக இருந்தது, நேற்று இரண்டாம் நாள் பியாற்சா கிரான்டே பெருந்திரையில்,  காட்சிப்படுத்தப்பட்ட முதலாவது திரைப்படமான டான்சிங் அரப்ஸ் ( Dancing Arabs  ).

விடுமுறைக் காலமும், சிறப்பான கால நிலையும் கூடிவர, சுற்றுலாப் பயணிகளாலும், சினிமா ஆர்வலர்களாலும், லோகார்ணோ நிறைந்திருக்கின்றது.

காட்சிப்படுத்தல்கள், கருத்தாடல்கள், சந்திப்புக்கள், என எல்லா இடங்களிலும் சினிமா எனும் கலைரசனை மிகுந்திருக்கும் இச் சூழலில், பிற்பகல் சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் உள்நாட்டு விவகார அலுவல்கள் அமைச்சகத் தலைவர் அலைன் பெற்செற் Alain Berset(Head of Federal Department of Home Affairs), கலாச்சார அலுவல்கள் அமைப்பின் தலைவர் இஸபெல்லா Isabelle Chassot (Headmistress of the Federal Office of Culture), சினிமாத்துறையின் தலைவர் இவோ கும்மெர்  Ivo Kummer (Head of the Cinema section of the Federal Office of Culture), ஆகியோர் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இச் சந்திப்பில் சுவிற்சர்லாந்தின் சினிமாத்துறை தொடர்பான வளர்ச்சிப் போக்குகள் குறித்த திருப்தியினையும், நம்பிக்கையினையும் மூவரும் வெளிப்படுத்தினார்கள். லேகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவிற்கான அரச உதவிகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இரவு 9.30 மணிக்கு பியாற்சா கிரான்டே பெருமுற்றத்தின் பேரரங்கில் புகழ்பெற்ற நடிகர் ஆர்மின் முல்லருக்கு Armin Mueller-Stah வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டான்சிங் அரப்ஸ் கலைஞர்கள் அரங்கில் கௌரவிக்கப்பட்டார்கள். படத்தின் இயக்குனர் ஏரன் றிகில்ஸ் (Eran Riklis) உடன் படத்தின் நாயகன் மற்றும் முக்கிய பாத்திரங்களில் வரும் இரு நடிகைகள் மேடைக்கு வந்திருந்தார்கள்.

அவர்களது கௌரவிப்பினைத் தொடர்ந்து, முதன்முறையாகத் திரையேறியது டான்சிங் அரப்ஸ். லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படப்படும் படங்களின்  முதற்திரையிடல் என்பதாலும், முக்கியத்துவம் பெறுகின்றது. அதனை படைப்பாளர்கள் தமக்குக் கிடைக்கும் அங்கீகாரமாகவும், பெருமையாகவும் கருதுகிறார்கள்.

Dancing Arabs டான்சிங் அரப்ஸ் இன்றைய சூழலில் முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு திரைப்படமாகக் காணலாம். சர்வதேச ஊடககங்கள் அனைத்திலும் இன்று முக்கியத்துவம் தரும் விவகாரம், இஷ்ரேல் காசா பிரச்சனையாகும். இந்தச் சூழல்தான் டான்சிங் அரபாஸ் படத்தின் கதைக்களம். இப் படத்தின் இயக்குனர் ஏரன் றிகில்ஸ் (Eran Riklis) ஒரு இஸ்ரேலியர். ஜெருசேலத்தில் பிறந்து டெல்அவிவில் கல்வி கற்றவர். ஏற்கனவே இவரது Syrian Bride (2004),  The Human Ressurces Manager (2010) ஆகிய படங்கள், லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த படங்களென மக்கள் விருது பெற்றிருக்கின்றன.

அரபு இளைஞன் ஒருவனுக்கு ஜெருசேலத்தில் உயர் கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது.அந்த வாய்ப்பு ஏற்படுத்தும் உறவுகளும், சிக்கல்களும்தான் டான்சிங் அரபாஸ் கதை. மனித உணர்வுகளை மையப்படுத்துகையில் அரசியல் பின்னோக்கிப் போவதும், ஆழமான அன்பும், நேசிப்பும், அர்த்தமுள்ளவையாக அமைவதும்தான் இயல்பு என்பதை மிக அழகாகச் சொல்லிச் செல்லும் கதையும், காட்சிகளும்.

இத் திரைப்படத்தைப் பார்க்கையில், அன்மையில் தமிழ்ப்பரப்பில் பெரும் சர்ச்சைக்குள்ளாகிய சிங்கள இயக்குனர் பிரசன்ன விதானகேயும், அவரது 'பிறகு... ' With You Without You படமும் நினைவுக்கு வந்தன. அந்த ஒப்பீட்டின்வழி சொல்வதானால் இன்னுமொரு பிரசன்ன விதானகே ஏரன் றிகில்ஸ் எனலாம். அந்தவகையில் இத்திரைப்படத்தின் நுன்னரசியல் என்னவென்று அரசியலாளர்கள் ஆராயலாம், அறிக்கையிடலாம். ஆனால் ஒரு படைப்பாளி தன்னுணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் தருணங்களில், மானுடம் நேசிக்கும் மக்கள் அதனைக் கொண்டாடுகின்றார்கள். நேற்றைய இரவு லோகார்ணோவில் டான்சிங் அரப்ஸை மக்கள் கொண்டாடினார்கள்.

-4தமிழ்மீடியாவிற்காக: லோகார்ணோவிலிருந்து 4தமிழ்மீடியாவின் சிறப்புச் செய்தியாளர்கள்.

Photos: Kirthana

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

தமிழ் சினிமாவில் தரை லோக்கல் வேடங்களில் நடித்து முன்னுக்கு வந்தவர் ஜீவா. இவர் தற்போது 1983-ல் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையில் பெற வரலாற்றை படமாக்கிவரும் ‘83’ என்ற இந்திப் படத்தில் 11 இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நடிக்கிறார்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

எந்தவொரு சாக்லேட்டையும் விரும்பாதவர்களுக்கிடையில் மிகக் குறைவானவர்களாக இருந்தாலும், இனிப்பு விருந்து தங்களுக்கு பிடித்தது என்று பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

தமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.

எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.