திரைப்படவிழாக்கள்

இம்முறை லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவிருந்த ஆஸ்கார் விருது பெற்ற போலந்து இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி இறுதி தருணத்தில் விழாவில் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது லோகார்னோ திரைப்பட விழா ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

'Chinatown', 'The Pianist" போன்ற மாபெரும் இரு சினிமா காவியங்களைப் படைத்தவர் ரோமன் போலன்ஸ்கி (Roman Polanski). Venis in Fur எனும் அவருடைய புதிய படைப்பு, இன்று (வியாழக்கிழமை) பியாற்சே கிராண்டே திறந்தவெளி அரங்கில் காட்சிக்கு வருவதுடன், லொகார்னோ திரைப்பட விழா ஏற்பாட்டாளர்களால் இவ்வருடத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியும் கௌரவிக்கப்படவிருந்தார். அதோடு இன்று லொகார்னோ Summer Academy பயிற்சிப் பட்டறையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவருடைய திரை உருவாக்கப் பாணி மாஸ்டர் கிளாஸ் எனும் பயிற்சிக் கருத்தரங்கிலும் Roman Polanski கலந்து கொள்ளவிருந்தார்.

ஆனால் கடந்த இரு நாட்களில் போலன்ஸ்கியின் சினிமா படைப்புக்களுக்கும், அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேண்டுமென்றே முடிச்சுப்போடப்பட்டு எதிர்ப்புக்கள் எழுந்தன.

சுமார் 40 வருடங்களுக்கு முன்பு, ஓர் 18 வயதுக்குட்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது அமெரிக்காவில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அமெரிக்காவிற்கு சென்றால் இவ்வழக்கில் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம். இந்நிலையில் சுவிற்சர்லாந்தின் முக்கிய ஆளும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சுவிஸ் ஊடகங்களிலிருந்து கூட போலன்ஸ்கிக்கு  திடீர் எதிர்ப்பு வரத் தொடங்கியது. அவர் ஒரு Pedophile (பருவ வயதினர் மீது பாலியல் ஈர்ப்பு கொண்டவர்). அவரை லொகார்னோ திரைப்பட விழாவுக்கு அழைத்து கௌரவிக்கக் கூடாது என்பதே அவர்களுடைய வாதம். மீறி போலன்ஸ்கியை அழைத்து கௌரவப்படுத்தினால், ஆளும் கட்சிக்கு ஆதரவு தரும் எவரும் லொகார்னோ திரைப்படவிழாவில் கலந்து கொள்ளக் கூடாது என அக்கட்சி பகிரங்கமாகவே மிரட்டியது.

முன்னதாக கடந்த 2011 இல் சூரிச் திரைப்பட விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட போது எதிர்ப்புக்களை மீறி அவர் கலந்துகொண்டு அவருடைய சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தார். ஆனால் அதற்கு முன்னர் 2009 இல் அவர் சுவிற்சர்லாந்துக்கு அதே சூரிச் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்த போது கைது செய்யப்பட்டிருந்தார். எனினும் இம்முறை பிரான்ஸும், சுவிற்சர்லாந்தும் அவரை கைது செய்ய மாட்டோம் என அறிவித்திருந்தன.  ஆனால் தான் கலந்து கொள்ளக் கூடாது என வலுத்து வரும் எதிர்ப்பை அடுத்து, போலன்ஸி தானாகவே இவ்விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என அறிவித்துவிட்டார்.

இதையடுத்து லொகார்னோ திரைப்பட விழாவின் கலை இயக்குனர் கார்லோ சாட்ரியன் பெரும் கவலை வெளியிட்டுள்ளதுடன், திரைப்பட விழா என்பது அனைவரும் சந்திக்கும் இடம். சுதந்திரத்திற்கான இடம், போலன்ஸ்கி ஒரு பெடோஃபில் அல்ல. ஒரு கலைஞர் தன்னை வெளிப்படுத்த முடியாதிருப்பது கவலை அளிக்கிறது. நான் லொகார்னோ திரைப்பட விழாவின் கலை இயக்குனராக பணிபுரியத் தொடங்கியதிலிருந்து, எனது முதல் இருண்ட நாள் இதுவாகும் எனக் கூறியுள்ளார்.

போலன்ஸ்கி நேரடியாக கலந்து கொள்ளாவிடினும், ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்ட அவரது இன்றைய மாஸ்டர் கிளாஸ் பயிற்சிப் பட்டறையை எப்படியும் நடத்திவிட கார்லோஸ் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

- 4தமிழ்மீடியாவுக்காக லொகார்னோவிலிருந்து சிறப்புச் செய்தியாளர்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

மலையாளத்தில் பிரேமம் படத்தில் தன்னம்பிக்கை பொங்கும் இளம் ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் சாய்பல்லவி.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழ்நாட்டில் சைவ, அசைவ உணவங்களில் இன்று அளவு சாப்பாட்டின் சாராசரி விலை 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கிறது.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நிறுத்திவிடலாமா என்று விஜய் தொலைக்காட்சியும் அந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான என்.டி.மோலும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தொலைக்காட்சி வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

யூடியூப்பில் உலக பிரபலமாகி இருப்பது ராணி தாஜ் என்பவரின் பங்கார டோலக்கு வாசிக்கும் வீடியோதான்.