திரைப்படவிழாக்கள்

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் உயரிய விருதான தங்கச் சிறுத்தை விருதை (Pardo d'Oro) இம்முறை வென்ற திரைப்படம் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த Mula Sa Kung Ano Ang Noon (From What is Before).

Lav Diaz இயக்கித் தயாரித்திருந்த இத்திரைப்படம், 1972ம் ஆண்டில் சர்வாதிகாரி Ferdinand Marcos இனால், பிலிப்பைன்ஸில் இராணுவச் சட்டம் (Martial Law) அறிவிக்கப்பட முன்னர், குக்கிராமம் ஒன்றில் வசிக்கும் ஏழை மக்களின் வாழ்க்கையையும், அக்கிராமத்தில் இராணுவச் சட்ட ஆதிகத்தினால் நிகழும் மர்ம மாற்றங்களையும் பற்றிய திரைக்கதையை கொண்டது.    

1970ம் ஆண்டுகளில் பிலிப்பைன்ஸ் நாட்டின், குக்கிராமம் ஒன்றில் வசிக்கும் ஏழைக் கிராமத்தவர்களின் வாழ்க்கையை திரைக்கதையாக கொண்டது.  உண்மையான வரலாற்றுச் சம்பவங்கள், உண்மையான கதாபாத்திரங்களைக் கொண்டு Lav Diaz இயக்கிய இத்திரைப்படம், ஒரு சூழலில், மிக உச்சகட்ட சமூக மற்றும் பௌதீக மாற்றங்கள் நடைபெறும் போது, எப்படி அதற்கான தனிநபர் மற்றும் கூட்டுக்களின் எதிர்வினை நிகழும் என்பதனை அப்படியே காண்பிக்கிறது. 5 மணித்தியாலங்கள், 38 நிமிடங்கள் நீளம் கொண்ட கறுப்பு வெள்ளை திரைப்படமான Mula Sa Kung Ano Ang Noon,  பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து லொகார்னோ திரைப்பட விழாவில் பங்கு கொண்ட முதல் திரைப்படமாகும்.

இதன் இயக்குனர் Lav Diaz, கடந்த வருடம் லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் குழுவின் தலைவராக செயற்பட்டவர். இப்படம் அதீத நீளம், மற்றும் மெதுவான நகர்வுத் தன்மை கொண்டது என முன்கூட்டியே தீர்மானித்து இதனை பார்க்க மறுத்தவர்கள் பலர். ஆனால் முழுமையான பார்த்தவர்கள் பலர் சொன்ன பொதுவான கருத்து, நேரம் போனதே தெரியவில்லை என்பது தான். கமெராவின் முன் விரியும் காட்சிகளின் அழகியல் இத்திரைப்படத்தின் கூடுதல் பலம்.

"இத்திரைப்படம் எனது சிறுவயது நினைவுகளிலிருந்து தோற்றம் பெற்றது.  பிலிப்பைன்ஸில் இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட இரு வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வுகள் அவை. எமது நாட்டின் வரலாற்றில் மிகுந்த இருண்ட தருணங்கள் அவை. இன்னுமொரு பிரளயமாக அதைக் கருதலாம்.  இத்திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் எனது நினைவுகளிலிருந்து தோன்றியவை. இதில் காண்பிக்கப்படும் அனைத்து கதாபார்த்திரங்களும் நிஜமானவை. அவர்களின் பெயர்கள் மாத்திரம் மாற்றப்பட்டுள்ளது" என்கிறார் இயக்குனர் Lav Diaz.


"வேக சினிமாவை  விடுத்து மெதுவகை சினிமாவுக்கு கிடைத்த வெற்றியாக இதைக் கருதுகிறீர்களா?" என எழுப்பட்ட கேள்விக்கு, "அனைத்துமே எனக்கு சினிமா தான். அவற்றை தனித்தனியாக முத்திரை குத்த நான் விரும்பவில்லை" என்றார்.

இத்திரைப்படம், தங்கச் சிறுத்தை விருது மாத்திரமல்லாது, Premio FIPRESCI விருது, சிறந்த இயக்குனருக்கான விருது, Premio FICC/IFFS (இளைஞர் நடுவர் குழுவின் விருது)  விருது ஆகியவற்றையும் வென்றிருந்தது,  ஒரு நல்ல சினிமாவுக்கு கிடைக்கும் அங்கீகாரம் எப்படிப்பட்டது என்பதனை எடுத்துக் காட்டியது. 

"இவ்விருதை எனது தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன். எனக்குள் சினிமா மீதான ஆர்வத்தை தோற்றுவித்தவர் அவர் தான். சினிமா மீது அதீத காதல் கொண்டவர் அவர். அதோடு இவ்விருதை பிலிப்பைன்ஸ் மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். அவர்களது போராட்டத்திற்காக அர்ப்பணிக்கிறேன். அதோடு இவ்விருதை அனைத்து தீவிர சினிமா படைப்பாளர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். போட்டியில் இருந்த சக படங்களை இயக்கியவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்" என்றார் இயக்குனர் Lav Diaz. 


கடந்த வருடம் லொகார்னோவுக்கு வந்த Diaz இன் நான்கு மணித்தியாலங்கள் கொண்ட  Norte, the End of Histoty எனும் திரைப்படமும் பல விருதுகளை வென்றிருந்தது.  

- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியாவின் சிறப்புச் செய்தியாளர்கள்

Photos  : 4தமிழ்மீடியாவுக்காக Kirtena

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

மலையாளத்தில் பிரேமம் படத்தில் தன்னம்பிக்கை பொங்கும் இளம் ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் சாய்பல்லவி.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழ்நாட்டில் சைவ, அசைவ உணவங்களில் இன்று அளவு சாப்பாட்டின் சாராசரி விலை 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கிறது.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நிறுத்திவிடலாமா என்று விஜய் தொலைக்காட்சியும் அந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான என்.டி.மோலும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தொலைக்காட்சி வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

யூடியூப்பில் உலக பிரபலமாகி இருப்பது ராணி தாஜ் என்பவரின் பங்கார டோலக்கு வாசிக்கும் வீடியோதான்.