திரைப்படவிழாக்கள்

இம்முறை லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை விருதை Diaz இன் Mula Sa Kung Ano Ang Noon (From What is Before) திரைப்படம் வென்றிருந்தது. அதை தவிர்த்து ஏனைய விருதுகளை வென்ற திரைப்படங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

 

Mula Sa Kung Ano Ang Noon இயக்குனர் Diaz

Gianfranco Rosi தலைமையிலான நடுவர் குழுவினால், Special Jury Prize விருது, அமெரிக்கத் திரைப்படமான Listen Up Philip திரைப்படத்தை இயக்கிய Alex Ross Perry க்கு கிடைத்தது. சிறந்த இயக்குனருக்கான தங்கச் சிறுத்தை விருது, Horse Money திரைப்படத்தை இயக்கிய போர்த்துக்கலின் Pedro Costaவுக்கு கிடைத்தது.

சிறந்த நடிகைக்கான தங்கச் சிறுத்தை விருது, Fidelio, l’Odyssée d’Alice திரைப்படத்தில் நடித்த Ariane Labed க்கு கிடைத்தது.

Lucie Borleteau

இத்திரைப்படத்தின் இயக்குனர் Lucie Borleteau, கருத்து தெரிவிக்கையில், தனது நெருங்கிய தோழி ஒருத்தியின் நிஜ அனுபவங்களைக் கொண்டே இதன் திரைக்கதையை எழுதியதாகவும், Ariane Labed  அத்தோழியாகவே மாறிப் போனதாகவும் கூறியிருந்தார்.

 சிறந்த நடிகருக்கான தங்கச் சிறுத்தை விருது, ரஷ்ய சினிமாவான Durak (The Fool) இல் கதாநாயகனாக நடித்த Artem Bystrvo வுக்கும் கிடைத்தது. ஊழல் அதிகாரிகளை எதிர்த்து போராடும் ஒரு குழாய் செப்பனிடும் பணியாளனைப் பற்றிய திரைக்கதை இது.  இத்திரைப்படத்திற்கே ஜூனியர் நடுவர் குழுவின் முதல் பரிசும், சமூக, மத, நல்லிணக்க சினிமாவுக்காக வழங்கப்படும் Ecumenical Jury விருதும் கிடைத்தது. அதோடு திரைப்பட சமூகங்களுக்கான IFFS நடுவர் குழுவின் விருதும் இத்திரைப்படத்திற்கே கிடைத்தது. m-apeal நிறுவனம், இத்திரைப்படத்திற்கான சர்வதேச விற்பனையையும் பொறுப்பேற்றது.

Gabriel Mascaro வின் முதல் பிக்க்ஷன் திரைப்படமான August Winds திரைப்படத்தை, நடுவர் குழு Special Mention இல், கவனிக்கப்படவேண்டிய திரைப்படம் இது என அறிவித்தது.

ஆனால், பெருமளவிலான ரசிகர்களால் வரவேற்கப்பட்ட கிரேக்க திரைப்படமான A Blast அல்லது முன்பொரு முறை தங்கச் சிறுத்தை விருதை வென்ற ஆண்ட்ரியா ஸ்டாகா இயக்கிய புதிய திரைப்படமான Cure - The life Of Another திரைப்படம் எந்தவொரு விருதுக்கும் தெரிவாகவில்லை.

சிரிய இயக்குனர் ஒசாமா மொஹ்மட் தலைமையிலான The Filmmakers of the Present competition பிரிவுக்கான நடுவர் குழு, அப்பிரிவுக்கான தங்கச் சிறுத்தை விருதை, மெக்ஸிகோ இயக்குனர் சில்வாவின் முதல் Feature திரைப்படமான Navajazo வுக்கு அறிவித்தது.

Ciné+ Special Jury விருது, கொலம்பியாவின் Oscar Euiz Navia இயக்கிய Los Hongos திரைப்படத்திற்கு கிடைத்தது. சிறந்த புதுமுக இயக்குனர் விருது, சிசிலியாவை பிறப்பிடமாக கொண்ட Simone Rapisarda Casanova இயக்கிய The Creation of Meaning திரைப்படத்திற்கும், அப்பிரிவுக்கான Special Mention அங்கீகாரம், Damien Manivel இயக்கிய A Young Poet க்கும் அறிவிக்கப்பட்டது.

இயக்குனர் ஒருவரின் சிறந்த முதல் முழுநீளத் திரைப்படத்திற்கான சிறுத்தை விருது, Soon-mi Yoo வின், Songs From The North ற்கு அறிவிக்கப்பட்டது.
மனித நிலையை புதுமையாக பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கும் திரைப்படம் இதுவென நடுவர் குழுவினால் பாராட்டப்பட்ட இத்திரைப்படம், வடகொரியாவின் ஒரு ஆவணத் திரைப்படமாகும்.

இம்முறை விருது பெற்றெ ஒரே ஒரு பிரித்தானிய திரைப்படம், Pia Borg மற்றும் Lawrenson ஆகியோர் இயக்கிய Abandoned Goods ஆவணத்திரைப்படமாகும். நாளைய இயக்குனர்களை உருவாக்கப் போகும் சிறந்த சர்வதேச குறுந்திரைப்படத்திற்கான Golden Pardino விருது இத்திரைப்படத்திற்கு கிடைத்தது.

1946ம் ஆண்டு இங்கிலாந்தின் உளவியல் மருத்துவமனை ஒன்றில், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுகள் ஓவியங்கள் வரைவதற்கென ஒரு ஸ்டூடியோ திறக்கப்பட்டது. இது அவ்வகை ஸூடூடியோக்களில் முதலாவது ஆகும். விரைவில், நோயாளிகள் சுதந்திரமாக தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தும் இடமாக மாறிப் போன அந்த ஸ்டூடியோ, 19943ம் ஆண்டு அம்மருத்துவமனை மூடப்பட்ட போது, அந்த ஸ்டூடியோவில் இருந்த ஆயிரக்கணக்கான ஓவியங்கள் அழிக்கப்பட்டன. ஆனால், 5,500 ஓவியங்கள் மாத்திரம் தப்பிப் பிழைத்தன. அந்த ஓவியங்கள் சொல்லும் கதை தான் இந்த ஆவணக் குறுந்திரைப்படத்தின் கதை.

நாளைய இயக்குனர்களை உருவாக்கப்போகும் சிறந்த சர்வதேச குறுந்திரைப்படத்திற்னாக Silver Pardino விருது, மற்றும் ஐரோப்பிய திரைப்பட விருதுகளுக்கு, லொகார்னோ குழுமம் பரிந்துரைக்கும் விருது என இரு விருதுகளை தட்டிச் சென்றது Morgan Knibbe இயக்கிய Shipwreck.

கடந்த வருடம் லம்பெடூசா அருகில் ஆபத்தான கடல்வழி படகுப் பிரயாணத்தில் உயிரிழந்த பல நூற்றுக் கணக்கான ஆபிரிக்க அகதிகளை மையமாக கொண்டு அச்சூழல் எப்படிப்பட்டது, அவர்களது உறவினர்களின் கண்ணீர் எப்படிப்பட்டது என நேர்த்தியாக படம்பிடிக்க திரைப்படம் இதுவாகும். இதனை உருவாக்கிய Morgan Knibbe, பியாற்சே கிராண்டே மேடையில் விருது வாங்க வந்த போது, இப்படத்தில் தனது கடற்பிரயாண அனுபவத்தை பகிர்ந்து கொண்ட குறித்த எதியோப்பிய அகதியை தான் தற்போது தேடிக் கொண்டிருப்பதாகவும், அவர் எங்கு இருக்கிறார் என்றே தற்போது தெரியவில்லை எனவும் ஏக்கத்துடன் கூறி, தேடித்தருமாறு பார்வையாளர்களிடம் உதவி கோரிய போது அரங்கமே அமைதியானது.

நாளைய இயக்குனர்களை உருவாக்கப் போகும் சிறந்த சுவிஸ் குறுந்திரைப்படத்திற்கான Golden Pardino விருது, Sarah Arnold இயக்கிய Totems ற்கு கிடைத்தது. வெள்ளிச் சிறுத்தை விருது Jean-Guillaume Sonnier இயக்கிய Petit Homme திரைப்படத்திற்கு கிடைத்தது. இப்பிரிவில் சிறந்த புதுமுக இயக்குனர் விருது Abseits Der Autobahn குறும்படத்தை இயக்கிய Muhlebach ற்கு கிடைத்தது.

இவற்றை விட லொகார்னோ திரைப்பட விழாவின் மிக முக்கிய விருதுகளில் ஒன்றாக பார்வையாளர்களால் கருதப்படும், மிகச்சிறந்த திரைப்படத்திற்கான Prix du Public UBS/பொதுமக்களின் விருது Unlikely Heros (Schweizer Helden/சுவிஸ் ஹீரோக்கள்) படத்திற்கு கிடைத்தது.

Peter Luisi இயக்கிய இத்திரைப்படம் 30,000 சுவிஸ் பிராங்குகளைத் தட்டிச் சென்றது. பியாற்சே கிராண்டே திறந்த வெளி பெரு முற்றத் திரையரங்கில் முதல் 9 நாட்களும் திரையிடப்பட்ட படங்களில், பொதுமக்களின் விருப்பத் தேர்வாக அவர்களுடைய வாக்களிப்பின் படி இத்திரைப்படம் தெரிவானது.

சுவிற்சர்லாந்தின் வரலாற்று நாயகனாக Wiliem Tell இன் சரித்திரத்தை மேடை நாடகமாக காண்பிக்கும் முயற்சியில் ஈடுபடும் ஒரு நாடக கலைஞர், இதற்காக தேர்ந்தெடுத்த நடிகர்கள் அனைவரும் சுவிற்சர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரி முடிவுக்காக காத்திருக்கும் புதியவர்கள்.

அவர்கள் தங்கியிருக்கும் அகதிகளை வரவேற்கும் விடுதியிலேயே நாடகத்திற்கான பயிற்சிகள் நடைபெறுகிறது. மொழி, கலாச்சாரம், இனம், நிறம், சூழல் என அனைத்தும் புதிதாக இருக்கும் அகதிகளால், சுவிற்சர்லாந்தின் தொன்மை மிகு வரலாற்றுக் காவியத்தை மேடை நாடகமாக அரங்கேற்ற முடிந்ததா? அதற்கு சுவிஸ் மக்கள் அனுமதித்தார்களா?  எனும் கேள்விகளுக்கு நகைச்சுவை, மகிழ்ச்சி, துக்கம் என அனைத்து வகை உணர்ச்சிகளும் கலந்த கலவையோடு பதில் சொல்ல விளைகிறது இத்திரைப்படம்.

அதேவேளை Vareity Piazza Grande விருது, Jean-Pierre Améris இயக்கிய Marie Heurtin திரைப்படத்திற்கு கிடைத்தது. 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த காதுகேளாத, வாய் பேச முடியாத, பார்வையற்ற ஆனால் சாதிக்கும் திறன்  கொண்ட Marie Heurtin இன் வாழ்க்கை பற்றிய திரைப்படம் இது.

- 4தமிழ்மீடியாவின் சிறப்புச் செய்தியாளர்கள்

Photos : 4தமிழ்மீடியாவுக்காக KirtenaLocarno 2014 winners/International Competition

Golden Leopard
From What Is Before (Mula Sa Kung Ano Ang Noon), Lav Diaz, Philippines

Special Jury Prize
Listen Up Philip, Alex Ross Perry, US

Leopard for Best Direction
Pedro Costa for Cavalo Dinheiro, Portugal

Best Actress Leopard
Ariane Labed forFidelio, L’odyssée D’alice, Lucie Borleteau, France

Best Actor Leopard
Artem Bystrov for The Fool (Durak), Yury Bykov, Russia

Special Mention
Ventos De Agosto, Gabriel Mascaro, Brazil

Filmmakers of the Present Competition

Golden Leopard
Navajazo, Ricardo Silva, Mexico

Ciné+ Special Jury Prize
Los Hongos, Oscar Ruiz Navia, Colombia/France/Argentina/Germany

Best New Director
La Creazione Di Significato, Simone Rapisarda Casanova, Canada/Italy

Special Mention
Un Jeune Poete, Damien Manivel, France
Opera Prima

Leopard for Best First Feature
Songs From The North, Soon-mi YOO, United States/South Korea /Portugal

Special Mention
Parole De Kamikaze, SAWADA Masa, France

Leopards of Tomorrow/Concorso internazionale

Golden Leopard for Best International Short Film
Abandoned Goods, Pia Borg and Edward Lawrenson, UK

Silver Leopard
Shipwreck, Morgan Knibbe, Netherlands

Locarno Nomination for the European Film Awards
Shipwreck, Morgan Knibbe, Netherlands

Premio Film and Video Subtitling
Hole, Martin Edralin, Canada

Special Mention
Muerte Blanca, Roberto Collío, Chile

National Competition

Golden Leopard for Best Swiss Short Film
Totems, Sarah Arnold, France

Silver Leopard
Petit Homme, Jean-Guillaume Sonnier, Switzerland

Best Swiss Newcomer
Abseits Der Autobahn, Rhona Mühlebach, Switzerland

Audience Award
Unlikely Heroes (Schweizer Helden), Peter Luisi, Switzerland

Variety Piazza Grande Award
Marie Heurtin, Jean-Pierre Améris, France

நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடிகை’யை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானர் 35 வயது இயக்குநர் நாக் அஷ்வின்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது