திரைப்படவிழாக்கள்

சுவிற்சர்லாந்தின் தென்பகுதியில் அமைந்துள்ள லோகார்ணோ ஏரிக்கரை நகரின் மத்தியில் அமைந்துள்ள பியாற்சா கிரான்டே பிரமாண்டத் திறந்த வெளித் திரையரங்கில், இன்றிரவு 09.30 மணிக்கு ஆரம்பவிழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இன்று ஆரம்பமாகும் இத் திரைப்பட விழா எதிர்வரும் 15ந் திகதி நிறைவுபெறும். சர்வதேசத் திரைப்பட விழாக்களில் முக்கியமானதொன்றாகக் கருதப்படும் இத் திரைப்பட விழாவில் இம்முறை, 51 நாடுகளில் இருந்து 179 முழு நீளத் திரைப்படங்கள், 87 குறும்படங்கள், போட்டிக்குத் தெரிவாகியுள்ளன. இது தவிர கௌரவக் காட்சிப்படுத்தல்கள், வரலாற்று முக்கியத்துவ விவரணங்கள், ஆரம்பத் திரையிடல்களென மேலும் பல படைப்புக்களும் திரையிடலுக்குத் தயாராகவுள்ளன.

லோகார்ணோ நகரின் பியாற்சா கிராண்டே பெருமுற்றத்தை மையமாகக் கொண்டமைந்த பத்துக்கும் அதிகமான திரையரங்குகளில், இத்திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படுத்தப்படுவதுடன், இத்திரைப்படங்கள் குறித்த கருத்தாய்வு அரங்குகளும், சந்திப்புக்களும், பல்வேறிடங்களில் இடம்பெறும். உலகெங்கிலுமிருந்து வந்து குவியும் சினிமா ஆர்வலர்கள், படைப்பாளிகளின், எண்ணங்கள் சங்கமிக்கும் அந்த இனிய தருணங்களை, கடந்த வருடங்களைப் போலவே தினமும் இந்தப்பகுதியில்  எமது வாசகர்கள் காணலாம்.

இத் திரைப்பட விழா குறித்த விபரங்கள் காண இந்த இணைப்பினை அழுத்துங்கள்