திரைப்படவிழாக்கள்

லொர்ணோ சர்வதேச திரைப்பட விழாவில் அதியுயர் விருதான சிறந்த திரைப்படத்திற்கான தங்கச் சிறுத்தை (Golden Leopard) விருதை தென் கொரிய இயக்குனர் ஹாங் சாங்சூவின் (Hong Sangsoo) «Right Now, Wrong Then» திரைப்படம் தட்டிச் சென்றது. இன்றைய இயக்குனர்கள் பிரிவில் தங்கச் சிறுத்தை விருதை "திதி" திரைப்படத்திற்காக ராம் ரெட்டி பெற்றுக் கொண்டார். 

 2013ம் ஆண்டு லொகார்னோவில் தெரிவான  «U ri Sunshi» திரைப்படத்திற்காக, சிறந்த இயக்குனர் விருதைப் பெற்றிருந்தார் இயக்குனர் ஹாங் சாங் சூ. 

ஒரே நாள் இரவும், பகலுமாக நகரும் கதைக் களம். இரு பிரதான கதாபாத்திரங்கள். ஒரே ஒரு கமெரா, ஒரு சில நிகழ்விடங்கள், மெலிதான இசை. இயல்பான உரையாடல்கள், தற்செயலாக சந்தித்துக் கொள்ளும் ஒரு ஆணும் பெண்ணும் அன்றைய நாள் முழுவதும் நெருங்கிப் பழக முடிந்தால்.. என்பதே Right Now, Wrong Then  திரைக்கதை.

இதில் எது நேர்மையாக, நிஜமாக நடைபெற்றிருக்கலாம். ஆனால் எப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனும் எண்ணங்களை பார்ப்பவர்கள் மனதில் தோற்றுவிப்பதில் நன்றாகவே வெற்றிபெற்றிருக்கிறார் இயக்குனர் ஹாங் சாங்சூ. இந்தப் படத்தில் நடித்த ஜுங் ஜே யங் (Jung Jae - Young) சிறந்த நடிகருக்கான லியோபார்ட் விருதை பெற்றுக் கொண்டார்.

இன்றைய சினிமா இயக்குனர்கள் பிரிவில் (Cineasti del Presenti)  தங்கச் சிறுத்தை விருதை வென்றது இந்தியத் திரைப்படமான «திதி». ஸ்வாட்ச் நிறுவனத்தின் இயக்குனர் ஒருவரின் மிகச் சிறந்த முதல் முழுநீளத் திரைப்படம் விருதும் «திதி» திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் ராம் ரெட்டிக்கே கிடைத்தது.

"லொகார்னோ போன்ற மிகத் தூய்மையானதும் தனித்துவம் வாய்ந்ததுமான சினிமா திரைப்பட விழா ஒன்றில் இவ்விருதைப் பெருவதில் பெருமையடைகிறேன்" என்றார் ராம் ரெட்டி. அதோடு "இத்திரைப்படத்தில் அக்கதாபாத்திரங்களாகவே வாழ்ந்த அந்த ஊர் மக்களுக்கு இவ்விருதை சமர்ப்பிக்கிறேன் என்றார். எந்தவொரு சினிமா அனுபவமும் இன்றி, பயிற்றுவிக்கப்படாத சினிமாக் கலைஞர்கள் எவருமின்றி அவர்கள் ஒவ்வொருவரும் நடித்திருக்கிறார்கள்.  குறிப்பாக கடப்பா கதாபாத்திரத்தில் நடித்த அம்முதியவர், அத்திரைப்படத்தில் வருவதைப் போன்றே நிஜத்திலும் மிக மிக எளிமையானவர். காருண்யம் கொண்டவர். அவரைப் பார்த்து நான் நிறையக் கற்றுக் கொண்டேன். குறிப்பாக அவருக்கு இவ்விருதை சமர்ப்பிக்கிறேன்" என்றார் உணர்ச்சி மிக்க! 

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் குக்கிராமம் ஒன்றில் அக்கிராம மொழி பேசும் மூன்று பிரதான கதாபாத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் இன்றைய நவீன, களியாட்டங்கள் நிறைந்த உலத்திலிருந்து தொடர்பற்ற ஒரு சமூகம் தமக்குள் தாம் கொண்டுள்ள தொடர்புகள் எப்படிப்பட்டது என்பதை யதார்த்தத்திற்கு மிக அண்மையிலிருந்து காண்பிக்கும் திரைப்படம் இது. பாமரர்களின் மனித இயல்புகள், உறவுநிலைகள் எவ்வளவு ஆழமானவை, அழகானவை என்பதை இத்திரைப்படம் எந்தவித அறுவறுப்புக் காட்சிகளும் இன்றி எளிமையாக எடுத்துக் காட்டுவதாக நடுவர் குழுவினரின் பாராட்டைப் பெற்றது. (திதி திரைப்படம் தொடர்பிலான விரிவுரை கட்டுரை : http://www.4tamilmedia.com/home-page/festival-del-film-locarno/32142-thithi-movie-review)

ஆனால் இம்முறை லொர்ணோவில் தங்கச் சிறுத்தை விருதை வெல்லும் எனப் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட இஸ்ரேலிய திரைப்படமான «Tikkun», நடுவர்களின் சிறப்பு விருதையே வென்றது.

Avishai Sivan இயக்கிய இத்திரைப்படம் இஸ்ரேலின் தீவிர மரபார்ந்த யூத மதத்தைப் பின்பற்றும் மாணவன் ஒருவன் ஒரு விபத்தில் மரணத்தின் நுனிவை சென்று மீண்டதிலிருந்து, மதம் மீதான அவனது ஈர்ப்புக்கள் குறைந்து அவனது இச்சைகள் சிற்றின்பக் கலாச்சாரங்களுக்குள் எப்படி ஆட்கொள்கிறது என்பதே திரைக்கதை. கறுப்பு-வெள்ளைக் காட்சிகளாக நகரும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவுக்காக ஷாய் கோல்டுமென்னும் நடுவர் குழுவினால் சிறப்புக் கௌரவம் அளிக்கப்பட்டார்.

சிறந்த இயக்குனருக்கான விருதை, பொலோனிய நாட்டைச் சேர்ந்த «Cosmos» திரைப்படத்திற்காக Andrzej Zulawski வென்றார். 15 வருடஙக்ளுக்குப் பிறகு அவர் இயக்கிய திரைப்படம் அது. 1981ம் ஆண்டு லொகார்ணோவில் சர்வதே நடுவர் குழுவின் தலைவராக இருந்தவர்.

மிகையதார்த்தவாதிகளின் திரைப்படமாக, எரிச்சலூட்டும் அதேநேரத்தில் பல மகிழ்ச்சித் தருணங்களை உள்ளடக்கிய Witold Gombrowicz இன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் Cosmos.

சிறந்த நடிகைக்கான விருதை, போட்டியில் இருந்த ஜப்பானிய திரைப்படமான «Happy Hour» இல் நடித்த Tanaka Sachie, Kikuchi Hazuki, Mihara Maiko & Kawamura Rira ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். ஐந்து மணிநேரம் கொண்ட இத்திரைப்படம், Sex and the City திரைப்படத்தின் ஜப்பானிய வேர்ஷன் போன்றது. படத்தின் திரைக்கதை வடிவமைப்புக்காக Ryusuke Hamaguchi நடுவர் குழுவினால் பாராட்டப்பட்டார்.

இம்முறை போட்டியில் இருந்த ஒரே ஒரு சுவிற்சர்லாந்து திரைப்படமான «Heimatland» மாணவர்கள் நடுவர் குழுவின் மூன்றாம் பரிசை மாத்திரமே வென்றது.

பியாற்சே கிராண்டே திறந்த வெளியரங்குகளில் திரைப்பட்ட படங்களில் சிறந்த மக்கள் தெரிவு விருதை ஜேர்மனிய திரைப்படமான திரில்லர் கதை கொண்ட «Ser Staat gegen Fritz Bauer» வென்றது. சுவிஸ் திரைப்படங்களான «La Vanité» அல்லது «Amnesia» ஆகிய இரு திரைப்படங்களுமே மக்களால் தெரிவு செயப்படவில்லை.

Variety சஞ்சிகையின் பியாட்சே கிராண்டே விருது «La Belle Saison» எனும் பிரெஞ்சு திரைப்படத்திற்கு கிடைத்தது.

- 4தமிழ்மீடியாவுக்காக லொகார்ணோவிலிருந்து சிறப்புச் செய்தியாளர்கள்

லொகார்ணோ திரைப்பட விழா குறித்த ஏனைய பதிவுகள் :

திதி : லொகார்ணோவில் ஒரு இந்தியப் பெருமிதம்!
லொகார்ணோவில் - வெள்ளை ஒளியில் இருள் (Sulanga Gini Aran)
சிகப்பு றோஜாக்களால் மலர்ந்த பியாற்சா கிரான்டே

கொரோனா ஊரடங்கில் ஆடை வடிவமைப்பாளர் சத்யாவுடன் சசிகுமார் ஜூம் நேரலைக் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அப்போது சசிகுமாரிடம் சில பிரபலங்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது பாக்யராஜின் மகனும் நடிருமான சாந்தனு உருப்படியான கேள்வி ஒன்றைக் கேட்டார். அது என்ன? கேள்வியையும் பதிலையும் தொடர்ந்து வாசியுங்கள்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

ஆண் பெண் அனைவரும் சமம் என்கிறோம். ஆனால் கார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ராஜாவை விட ராணி பெறுமதி குறைவானவளாக இருக்கிறாள் எனக் கேட்டு, நூற்றாண்டு காலமாக கார்ட்ஸ் விளையாட்டில் இருந்த இந்த ஆணாதிக்கத்தை புரட்டிப் போட்டிருக்கிறாள் பதின்ம வயது இஸ்ரேலிய பெண் மாயான்.