திரைப்படவிழாக்கள்

பியாற்சே கிராண்டே திரையரங்கின் தொடக்க விழா திரைப்படமாக ஸ்கொட்லாந்து தொலைக்காட்சி இயக்குனர் Colm McCarthy யின் The Girl With All The Gifts காட்சிப்படுத்தப்பட்டது.  இது Zombie கதைதான். ஆனால் இது இங்கிலாந்து வேர்ஷன். ஸோம்பிக்கள் இங்கிலாந்தை ஆக்கிரமிக்கின்றன. அவற்றின் வைரஸ் கிருமிகள் அந்நாடு முழுவதும் பரவ, அக்காலத்தில் கர்ப்பிணிப் பெண்களின் பிரசவத்தின் போது பிறந்த குழந்தைகளுக்கு மாத்திரம் மனிதன் போன்று சிந்திக்கும் குணமும், ஸோம்பிக்கள் போன்று இரத்தம் குடிக்கும் குணமும் சேர்ந்திருக்கிறது.

அப்படியாயின் இக்குழந்தைகள் சிறுவர்களாக வளரும் போது, இவர்களுடைய ஜீன்களை பரிசோதித்து, ஸாம்பிக்களின் வைரஸ் கிருமிகள் தொற்றுக்கான மாற்று நிவாரணியை கண்டுபிடிக்கலாம் என ஒரு மருத்துவக் குழு, தப்பிப் பிழைத்த ஒரு இராணுவக் குழுவுடன் இணைந்து அக் குழந்தைகளை பிறந்தது முதலே ஒரு இராணுவ சிறை முகாமில் கட்டிப் போட்டு வளர்க்கிறது. அதில் மிகச் சாதுரியமான ஒரு புத்திசாலிச் சிறுமி (Melanie) எப்படி தனது மனித குணங்களால் ஸோம்பி குணங்களை வெல்கிறாள் என்பதே கதை. இதே பெயரில் 2014 இல் வெளியான M.R.Carey இன் நாவலைத் தழுவி இக்கதை படமாக்கப்பட்டிருக்கிறது.

திரில்லிங், ஸோம்பி வரிசையில் புதிய களம், நேர்த்தியான வடிவமைப்பு, அச்சமூட்டும் இசை, அபாரமான நடிப்பு என அனைத்தும் ஈர்த்தாலும், லொகார்னோ திரைப்பட விழா மூலம் தான் இத்திரைப்படம் பார்வையாளர் கவனம் பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை. வணிகரீதியில் பிரபலப்படுத்த தேவையான அனைத்துப் பண்புகளும் இத்திரைப்படத்திலும் குவிந்து கிடக்கின்றன. படத்தைப் பார்த்து முடித்த போது லொகார்னோவும் வணிக, விஞ்ஞான புனைவுக் கதைகளுக்கான களமென மாறிவிட்டதா? என்ற எண்ணம் எழுவதைத் தடுக்க முடியவில்லை. ஸோம்பி உலகில் மனித நேயம் என்ற சிந்தனை புதிதானது என கலை இயக்குனர்  கார்லோ சாட்ரியன் இத்திரைப்படத்தை லொகார்னோவுக்கு கொண்டுவந்ததை நியாயப்படுத்த முனைந்த போதும், அது சரியான முடிவுதானா என்ற கேள்வி எழாமலில்லை.

ஆயினும் படத்தில் மெலனியாக வாழ்ந்திருக்கும் 14 வயது சிறுமி Sennia Nanua மற்றும் பிரிட்டிஷ் நடிகை Gemma Arterton இன் நடிப்பு என இருவருக்குமாக இத்திரைப்படத்தை இன்னுமொரு முறையும் பார்க்கலாம். 500 சிறுமிகளின் நடிப்பு பரிசீலிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் Sennia. அவர் இத்திரைப்படத்தில் நுழைந்ததிலிருந்து, படம் விறுவிறுவென வளரத் தொடங்கிவிட்டதாக இத்திரைபப்டத்தின் தயாரிப்பாளர் பெருமிதப் பட்டுக் கொண்டார். Brexit ஆல் அதிர்ந்து போயிருக்கும் இங்கிலாந்துக்கு இத்திரைப்படம் இன்னும் அச்சத்தை ஏற்படுத்தட்டும் என ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்ததற்கு தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்ட நாவல் எழுத்தாளர் M.R.Carey.

Director
    Colm McCarthy
Cast
    Gemma Arterton , Paddy Considine , Glenn Close , Sennia Nanua , Anamaria Marinca , Fisayo Akinade , Anthony Welsh , Dominique Tipper
Cinematography
    Simon Dennis
Music
    Cristobal Tapia de Veer
Screenplay
    Mike Carey
Editing
    Matthew Cannings

லொகார்கோ திரைப்படக் குழுவின் முதல் நாள் திரைப்படங்கள் குறித்த ஏனைய கட்டுரைகள் :

http://www.4tamilmedia.com/cinema/film-festivals

- 4தமிழ்மீடியாவிற்காக: லோகார்ணோவிலிருந்து ஸாரா

 

The Girl With All The Gifts

This film screened on 69th Locarno film festival's first day. 'The Girl With All The Gifts' was directed by Scotland's popular TV directer Colm McCarthy. This is also a Zombie movie but a "British" version. The story of this movie is as follows, 'Zombies invaded England and their virus spread through whole nation.

The children who born to pregnant affected by Zombie virus only has the ability to think like human, even they are also Zombies. A medical team from England come to know this and discovered that anti Zombie genes can be made from this children when they grow up. Therefore this medical team detained those  children in a safe place immediately after they born with the help from a survived military group.

The ending of the story is how an intelligent child (Melanie) won her Zombie qualities by human qualities.' The story of this film is based on M.R.Carey's novel released on 2014. Even though this film taken on new stage, well designed,got threatening music and fantastic acting by artists It won't get audience recognition only through Locarno because it has many commercial stuff. 

Melanie role was played by 14th year old girl Sennia Nanua and British actress Gemma Arterton were done their roles properly in this film. Sennia also taken from an interview hosting 500 girls is commendable. When the novelist of this movie M.R.Carey spoken to audience in Locarno stage he expressed sadness for Briton exit from European Union.

Director

    Colm McCarthy 

Cast

    Gemma Arterton , Paddy Considine , Glenn Close , Sennia Nanua , Anamaria Marinca , Fisayo Akinade , Anthony Welsh , Dominique Tipper 

Cinematography

    Simon Dennis

Music

    Cristobal Tapia de Veer

Screenplay

    Mike Carey

Editing

    Matthew Cannings

-4tamilmedia, special reports from Locarno

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து