திரைப்படவிழாக்கள்
Typography

69 வது லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில்,  Open Doors எனும் பகுப்பில் தென் கிழக்காசிய நாடுகளின் படங்கள் திரையிடப்படுகின்றன. நேற்றைய (03.08.16)  ஆரம்ப நாளில் திரையிடப்படது  Shunte ki pao!(நீங்கள் கேட்கிறீர்களா ! )  எனும் வங்காள தேசப்படம் .  அந்நாட்டின் புதிய தலைமுறை இயக்குனரான Kamar Ahmad Simon ன் நெறியாள்கையில் உருவாகியுள்ள ஒரு விவரணத் திரைச் சித்திரமிது.

திரைச் சித்திரமெனச் சொல்லும் வகையிலான ஒளிப்பதிவில் வங்க தேசக்  கடற்கரைக் கிராமமமான Sutarkhali பகுதியில் ஏற்படும் வெள்ளம், புயல் எனும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொண்டவாறு வாழும் மக்களின் வாழ்நிலையை வெளிப்படுத்தும் 90 நிமிட விவரணம் இது.

இயக்குனர்  கமர் அகமட் ஒரு கவிஞர் என்பதால்,  அப்பிரதேச மாந்தர்களின் வாழ்க்கையினை,  புனைவுகளற்ற காட்சிகளால் அழகியலான கவிதை போலக் காட்சிகளை பதிவு செய்திருக்கின்றார்.  இப்படம்,  பாரிஸ் விவரணத் திரைப்படவிழாவில் Grand-Prix at Cinema du reel Paris விருதினையும்,  Mumbai MIFF திரைவிழாவில் தங்கச் சங்கு விருதினையும் பெற்றுள்ளதோடு மேலும் பல சிறப்புக்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய காட்சியின் பின்னதாக அரங்கிற்கு வந்த இயக்குனர் பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் தருகையில், Sutarkhali  மக்களின் வாழ்வியலின் ஒரு பகுதிப் பதிவு மட்டுமே இது என்றார்.  இந்த விவரணத்துக்காக சுமார் ஆறுமாதகாலத்திற்கும் மேலாக அப் பிரதேசத்திலேயே வாழ்ந்து, அவர்களது வாழ்க்கையினை பதிவு செய்த காட்சித் தொகுப்புக்களின் மொத்த நீளம் 190 மணித்தியாலங்கள் என்றும், அதிலிருந்து தெரிவு செய்த 90 நிமிடக் காட்சிகளையே திரையில் காண்பித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். அந்த வகையில் இது இயக்கத்தில் உருவான படமென்பதிலும் பார்க்க, படத் தொகுப்பில் உருவான படம் என்பதே பொருத்தமானது என்றார்.

Director Kamar Ahmad Simon

Cast Rakhi Vaidya , Soumen Roy , Rahul Roy , The Villagers of Sutarkhali

Cinematography Kamar Ahmad Simon

Sound Sukanta Majumdar

Editing Saikat Sekhareswar Ray

 - 4தமிழ்மீடியாவிற்காக : லோகார்ணோவிலிருந்து மலைநாடான்

 

Shunte Ki Pao!

Shunte Ki Pao! (Do you listen to us?) is a Bengali documentary film directed by a new young Bengali director Kamar Ahmad Simon which was screened in 69th Locarno film festival's open door for south east countries films on 3rd August. This documentary was running for 90 minutes.

It mainly features How Bengali people faces natural disasters like flood, heavy rain, and Monsoon storm in a coastal village called 'Sutarkhali.' Kamar Ahmad Simon is also a poet therefore he didn't shoot any unwanted commercial scenes and the film also looks like filled with many artistic scenes. This film has not only inspired many audience but also sworn Grand-Prix at Cinema du reel Paris award in Paris film festival and won golden conch award in Mumbai MIFF film festival.

After the filming director Kamar Ahmad Simon came to stage and told that 'This is just a part of 'Sutarkhali' peoples life struggle. We took almost 190 minutes of their suffering and made this 90 minutes film only taken from the previous one. Actually this film was not directed but edited.'

Director - Kamar Ahmad Simon

Cast - Rakhi Vaidya , Soumen Roy , Rahul Roy , The Villagers of Sutarkhali

Cinematography  - Kamar Ahmad Simon

Sound - Sukanta Majumdar

Editing - Saikat Sekhareswar Ray     

4tamilmedia, special reports from Locarno

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்