திரைப்படவிழாக்கள்
Typography

69 வது லோகார்னோ திரைப்பட விழாவில்  சர்வதேச தெரிவுப்போட்டிகள் (Concorso internazionale) பகுப்பில்  நேற்று ( 04.08.2016) திரையிடப்பட்ட பல்கேரியன் திரைப்படம் Slava. தமிழில் "கௌரவ விருது" எனப் பொருள் கொள்ளக் கூடிய கதையம்சம் கொண்ட படம்.     இளைய தலைமுறையைச் சேர்ந்த  Kristina Grozeva , Petar Valchanov, இரட்டை இயக்குனர்களின் நெறியாள்கைளில் உருவாகியுள்ள படம்.

சராசரியான ரயில்வே  தடகளத் தொழிலாளியின் நேர்மையான செயற்பாட்டிற்கு கிடைக்கும் பாராட்டின் பின்னால், அரசியலும், ஊடகமும், நடத்துக்கின்ற நாடகத்தனமான செயற்பாடுகள், அவற்றின் உச்சக் கட்டத் தில், அவை சராசரி மனிதனின் இயல்பு நிலையை எவ்வாறு பாதிக்கின்றது. இந்த போலித் தனமான செயற்பாடுகளால் குடும்ப உறவுகள் எவ்வாறு பாதிப்படைகின்றன, வாழ்வழிந்து போகின்றன ,என்பதைனைக் கச்சிதமாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள்.

படத்தின் நாயகனாக வரும் Stefan Denolyubov,ன் சிறப்பான நடிப்பில், அப்பாவித்தனமும், குறைநிலையுமான ரயில்வேத் தொழிலாளியின் பாத்திரம் உயிர்பெறுகிறது. இந்தக் கதாபாத்திரத்திற்குச் சமநிலையில் வரக் கூடிய மற்றுமொரு கதாபாத்திரமான, ரயில்வே அமைச்சகத்தின் மக்கள் தொடர்பாளர் பாத்திரத்தில் வரும்,   Margita Gosheva ன் நடிப்பும் சிறப்பாக அமைகிறது.

பரபரப்பான பணியிலுள்ள பெண்ணின் பின்னால், ஒரு குழந்தைக்கான ஆசையுடன் தொடரும் ஒரு கணவனின் ஏக்கம், கோடிக்கான பணங்கள் மீது ஆசை கொள்ளாத கூலித் தொழிலாளி, தன் தந்தையின் நினைவாக வைத்திருந்த கடிகாரத்தின் மீது கொண்டிருக்கும் பிரியம், சிறப்பு விருது என்ற பகட்டினால் வழக்கபட்ட போலித்தனமான கடிகாரம், திக்குவாய்  குறைபாடுள்ள மனிதனிடம் செவ்வி காணும் ஊடகப் பரபரப்பு, எனச் சமகாலச் சமூகத்தின் நிஜங்களால், நிரம்பிய திரைக்கதை என்பதால், 101 நிமிடங்கள் சிறப்பான திரையனுபவமாகக் கழிந்து செல்கின்றது.

Directors
    Kristina Grozeva , Petar Valchanov
Cast
    Stefan Denolyubov , Margita Gosheva
Cinematography
    Krum Rodriguez
Music
    Hristo Namliev
Costumes
    Kristina Tomova
Screenplay
    Kristina Grozeva, Petar Valchanov, Decho Taralezhkov
Sound
    Ivan Andreev
Editing
    Petar Valchanov

- 4தமிழ்மீடியாவிற்காக : லோகார்ணோவிலிருந்து மலைநாடான்

 

Slava (Honorable award)

'Slava' Means 'Honorable award' in Bulgarian, a film screened on 4th August the second day of the Locarno film festival. This film was directed by 2 young directors, Kristina Grozeva and Petar Valchanov. 'Slava' features the life of a Railway road labor's honest acting and the fake honorable award given to him and then how his life is affected.

The dramatic activities of the politics and media which awarded the Railway road labor were well revealed. This activities also caused family life separates and destructed. The acting of the hero Stefan Denolyubov and Railway ministry's people contractor is incredible. This 101 minute long movie got its inspiration from these characterizations.

An husband's desire for a child with a woman who works hard, A simple laborer who has no desire on millionth of dollars.

A fake watch given in the name of special award, The love towards a watch in the memory of his father and Interview that has taken to a disabled man who mumbles are indicating present day societies face.

Directors

    Kristina Grozeva , Petar Valchanov 

Cast

    Stefan Denolyubov , Margita Gosheva 

Cinematography

    Krum Rodriguez

Music

    Hristo Namliev

Costumes

    Kristina Tomova

Screenplay

    Kristina Grozeva, Petar Valchanov, Decho Taralezhkov

Sound

    Ivan Andreev

Editing

    Petar Valchanov

 

-4tamilmedia, special reports from Locarno 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்