திரைப்படவிழாக்கள்
Typography

69 வது லொகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவின் நேற்றைய (04.08.2016) இரண்டாம் நாள் விருதளிப்பில் கௌரவிக்கப்பட்டவர்கள் இருவர். பிரபல இங்கிலாந்து நடிகை ஜேன் பேர்கினிக்கு (Jane Birkin) லொகார்ணோவின் வாழ்நாள் சாதனையாளர் விருதும், பிரபல தயாரிப்பாளர் டாவிட் லிண்டுக்கு (David Linde) லொகார்ணோ திரைப்பட விழாவின் ஆரம்ப காலத் தலைவராக இருந்த ரைமொண்டோ றெற்சோனிகோவின் (Raimondo Rezzonico) பெயரில் வழங்கப்படும் விருதும் கிடைத்தது.

நடிகை, பாடகி, இயக்குனர் என பன்முகம் கொண்ட ஜேன் பேர்கின், பிரபல இசையமைப்பாளர் சேர்ஜ் கெயின்ஸ்பேர்கின் துணைவியுமாவார். பிரான்ஸின் நட்சத்திர நடிகை சார்லொட் கெயின்ஸ்பேர்க் (Charlotte Gainsbourg) இவர்களுடைய புதல்விதான். 1970/80 களில் ஜேன் பேர்கின் ஆடையணியும் பாணி மற்றும் அவருடைய முக, சிகை அலங்காரம், நவநாகரீக உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியதுடன், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை அவர் பின்னால் அலையவிட்டது.  இன்று உலகின் மிகப் பெறுமதி வாய்ந்த கைப் பையான ஹெர்மேஸ் நிறுவனத்தின் Birkine Bag இன் வடிவமைப்பு இவரிடமிருந்தே பிறந்தது.

நேற்று லொகார்னோ மேடையில் பரிசு வாங்க வந்த 69 வயதான ஜேன் பேர்கின் தனது உணர்ச்சிபூர்வமான உரையில், «என் வாழ்க்கையில் முதன்முறையாக விருதொன்றைப் பெறுகிறேன்» எனக் கூறிய போது ஆச்சரியம் மிகுந்தது.

விருதுக்காக பிரபல திரைப்பட தயார்ப்பாளர் டாவிட் லிண்ட் மேடைக்கு அழைக்கப்பட்ட போது,  அவர் தயாரித்த திரைப்படங்களின் காட்சித் தொகுப்புத்  திரையிடப்பட்டது.

இன்றைய மேற்குலக சினிமாவின் நம்பர் 1 சுயாதீன நிதி முதலீட்டுத் தயாரிப்பு நிறுவனமான Participant Media இன் தற்போதைய முகாமையாளர் (CEO) டாவிட் லிண்ட். அமெரிக்காவின் இன்றைய மிகப்பெரும் முதலாளித்துவ தயாரிப்பு நிறுவனங்களுக்கு மாற்றாக விளங்கும் Participant Productions, Jeffrey Skoll ஆல் 2004 இல் தொடங்கப்பட்டது.

எந்தவொரு அரசியல் குறுக்கீடும் இல்லாமல், சுதந்திரமாக படங்களை தயாரிக்கும் இந்நிறுவனத்தினர்,  சமூக விழிப்புணர்வு திரைப்படங்களுக்கு இன்னமும் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இவர்கள் இதுவரை தயாரித்த 63 திரைப்படங்களில், 50 திரைப்படங்கள் அகடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவை. 11 படங்கள் அகடமி விருதுகளை வென்றவை.

இவர்களுடைய படத் தயாரிப்பின் கதைக் களம் இன்றைய உலகின் அரசியல் போக்கு, சமூகம், சுற்றுச்சூழல் சார்ந்தவை. Syriana, American Gun, An Inconvenient Truth, Fast Food Nation, A citizen four, The look of Silence, He Named me Malala மற்றும் Spotlight போன்ற திரைப்படங்கள் இதற்கு  நல்ல உதாரணம்.

இந்நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றிருக்கும் லிண்டிடம் லொகார்னோவின் கலை இயக்குனர் கார்லோ சாட்ரியன் «21ம் நூற்றாண்டில் ஒரு சினிமா தயாரிப்பாளராக உங்களுடைய பங்கு எவ்வளவு முக்கியமானது ? » என கேள்வி எழுப்பினார்.

நல்ல சினிமாவை இணங்கண்டு ஊக்குவிக்க வேண்டுமெனில், முதலில் இன்றைய உலகின் தகவல் தொழில்நுட்ப போக்கு, கலாச்சாரப் போக்கு இரண்டையும் தயாரிப்பாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். எனது 22 வயது மகன் உட்பட இந்தக் காலத்து பசங்க சினிமாவை பார்க்கும் விதமே மாறிவிட்டது. கதை சொல்பவர்களின் கைகளிலேயே கிரியேட்டிவான நல்ல சினிமா தங்கியுள்ளது என நினைத்திருந்தேன். ஆனால் அது ரசிகர்களின் பார்வையிலும் தங்கியிருக்கிறது என  நீங்கள் நிரூபித்து வருகிறீர்கள். அதனால் இந்த பியாற்சே கிராண்டே அரங்கில் அமர்ந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Participant Media வினுள் இணையும் முன்னர் டாவிட் லிண்ட், தனது சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரித்து வெளியிட்ட படங்களும் லொகார்னோவில் வரிசையாக காட்சிப் படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் Life of Pi புகழ் ஆங் லீயின் Crouching Tiger, Hidden Dragon, Alfonso Cauron இன் Y Tu Mamà También  என்பன குறிப்பிடத்தக்கன.

நேற்றைய விருதளிப்பு நிகழ்வுகளின் பின்னர் பியாற்சே கிராண்டே  பெருந்திரையில்  திரையிடப்பட்ட படம் Moka. சுவிற்சர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகளிலும், பிரான்ஸிலும் படமாக்கப்பட்ட இத் திரைப்படத்தை Frédéric Mermoud இயக்கியுள்ளார். தாய்மையின் தவிப்பையும், கோபத்தையும் வெளிப்படுத்தும் கதையம்சம் கொண்டமைந்த படம் Moka.

- லோகார்ணோவிலிருந்து 4தமிழ்மீடியாவின் சிறப்புச் செய்தியாளர்கள்

The 2nd day of 69th Locarno film festival

2 celebrities honored on 69th film festival's 2nd day (August 4th). Life time achievement award is given to popular English actress Jane Birkin and the award given in Raimondo Rezzonico name this year was given to popular producer David Linde.

 Jane Birkin has many faces like actress, singer and director. She is also one of the life partner of Serge Gainbourge a popular music director and mother of iconic fashion star actress Charlotte Gainsbourge. The most expensive women hand bag of Hermes company called Birkine Bag was created in influence of Jane Birkin popularity  and got its name from her. When 69th years old Jane Birkin spoken to the audience when awarded in Locarno she told that this was the first time I am recieving an award and everybody excited. The important scenes from the films produced by David Linde also screened in Locarno when he was invited to be awarded on the stage.

David Linde is the current CEO of Participant Media production, which started on 2004 by Jeffrrey Skoll. Participant Media company is producing films with freedom and giving importance to social awareness.They have produced 63 films until now and among them 50 films were recommended to academy awards and 11 has sworn them. Moste of the David Linde's producing films were based on today's political situations, social and environmental issues. The most commendable movies were Syriana, American Gun, An Inconvenient Truth, Fast Food Nation, A citizen four, The look of Silence, He Named me Malala and Spotlight.

When Locarno's art director Carlo Sadrian asked about Linde's involvement 21 century cinemas, Linde replied as follows.

'To identify good cinema and support it first we have to know about today world's path in information technology and the movement of culture. Before I thought creative cinema is only depended on story tellers. But it is wrong. It is also depended on audience. As Locarno audience you all proves this and therefore I like to thank you all.'

The film titled 'Moka' screened in Locarno after 2nd day's awarding ceremonies finished. 'Moka' a french film based on motherhood and the importance of the feelings and anger of a mother. 'Moka' was directed by Frédéric Mermoud.

 

 

4tamilmedia, special reporters from Locarno

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்