திரைப்படவிழாக்கள்

சினிமா படைப்புலகத்தின் இளங்கலைஞர்களுக்கும், புதிய அறிமுகங்களுக்கும், உரிய களம் அமைத்துக் கொடுக்கும், லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா, இன்று (02.08.2017) ஆரம்பமாகியது. 70வது ஆண்டினை எய்தியிருக்கும் இவ்வருட லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கைப் படைப்புக்கள் பலவும் பங்கேற்கின்றன.

சிங்கள மொழியிலான மூன்று முழு நீளத் திரைப்படங்கள், இரண்டு குறும்படங்கள், தமிழ்மொழியிலான இரு குறும்படங்கள், என்பன இத் திரைப்படவிழாவில் திரையிடப்படுகின்றன. 2016 முதல் 2018 வரையிலான மூன்றாண்டு காலத்தில், தென்கிழ்க்காசிய நாடுகளைச் சேர்ந்த சினிமாப் படைப்புக்களை, Open Doors எனும் பகுதியினனூடு காட்சிப்படுத்தக் களம் அமைத்திருக்கிறது இத் திரைப்படவிழா. இப் பகுதியினூடு இம்முறை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

தமிழ்மொழியிலான குறும்படங்களில் ஒன்று இலங்கையின் முக்கிய இளம் இயக்குனர் இளங்கோ ராம் அவர்களின் " மௌன விழித்துளிகள் ". ஏலவே பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கு கொண்ட இக்குறும்படம் விருதுகளையும் கவனிப்பினையும் பெற்றுக் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. விளம்பரத்துறையிலிருந்து திரைப்படவிழாக்கள் நோக்கி இளங்கோ ராம் தனது படைப்பாளுமையை கவனப்படுத்தியிருப்பது, எதிர்காலத்தில் இலங்கைத் தமிழ் திரைப்படங்கள், உலகத் திரைப்பட விழா அரங்குகளை அலங்கரிக்கும் என எதிர்பார்க்கலாம். இவ் விழாவில் கலந்து கொள்ளும் மற்றைய தமிழ்க் குறும் படம், இயக்குனர் பிரதீபன் ரவீந்திரனின் Shadows of Silence.

பங்கேற்கும் சிங்களத் திரைப்படங்கள் :
- 28 - Director: Prasanna Jayakody
- Davena vihagun - Director: Sanjeewa Pushpakumara
- Sulanga Enu Pinisa - Director: Vimukthi Jayasundara

சிங்கள குறும் படங்கள் :
- Katada Ayiti - Director: Suranga Deshapriya Katugampala
- Mata nam ahuna - Director: Nadya Perera

-  லோகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியாவின் சிறப்புச் செய்தியாளர்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ரஜினி 45 என்றும் கமல் 61 என்றும் கொண்டாடும் ரசிகர்கள் 40 வருடங்களைக் கடந்து திரையுலகில் ஆட்சி செலுத்தும் பெண் நடிகர்களைக் கண்டுகொள்வதே இல்லை.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பாகுபலி படத்தில் பல்லாலத்தேவனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.