திரைப்படவிழாக்கள்

70வது சர்வதேச லொகார்னோ திரைப்பட விழாவில் தெற்காசியாவின் நலிந்த சினிமா படைப்புக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட Open Door பிரிவில், இலங்கை இயக்குனர் பிரசன்ன ஜெயக்கொடியின் நெறியாள்கையில் உருவான «28» எனும் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணை அடையாளம் காண்பதற்கு அபசிறியும் அவரது மைத்துனன் மணியும் காவல் துறையினரால் கொழும்புக்கு அழைக்கப்படுவதில் தொடங்கும் கதை, தலைநகர் கொழும்பிலிருந்து பல நூறு மைல்கள் விரிவடையக் கூடிய மலைப்பாதை வழியில் தனது கிராமத்திற்கு, அபசிறீ, மணி மற்றும் ஒரு ஐஸ்கிரீம் வேன் ஓட்டுனர் (லெனின்) மூவரும் சேர்ந்து அப்பூதவுடலை கொண்டு செல்வதில் நிறைவடைகிறது.

இறந்து போனவள் சுத்தி எனும் பெயருடைய அபசிறியின் மனைவி. ஆனால் சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்வதில் இருக்கும் பிரச்சனைகளின் நிழல்களையும், நிஜங்களையும், மெதுவாகவும், விறுவிறுப்பாகவும் காட்சிப்படுத்தி விரிகறது கதையின் நீட்சி. இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில் பாலியல் உறவுகள் (Sexuality) எப்படி அநாகரீகமானதொன்றாக (Vulgarity) மாற்றப்பட்டுள்ளது என்பதே படத்தின் உள்ளார்ந்த கரிசணை.

மரணமடைந்து பூதவுடலாகக் கிடக்கும் அப்பெண், தனது இளவயது, திருமணம், அதன் பின்னரான வாழ்க்கை, தன் மரணத்திற்கான காரணம் என அனைத்தையும், அவளை ஒத்த சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து பெண்களின் சார்பிலும் மிக வலிமையான சாட்சிப் பதிவுகளாக, அவ்வப்போது திரையில் தோன்றி பதிவு செய்கிறார்.

இளவயது தொடக்கம் பாலியல் சேஷ்டைகளிலும், வன்முறைகளிலும் சிக்கிச் சின்னாபின்னமாகி, பாலியல் தொழிலுக்குள் வீழ்ந்த அவலம் குறித்து திரைப்படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை இறந்த அப்பெண் சொல்லிமுடிக்கையில் இலங்கையில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதியில் உள்ள பெண்ணுக்கும் இக்கதை பொருந்துவதை உணர முடிகிறது.

சவப்பெட்டி அபசிறியின் கிராமத்திற்கு வந்தடைவதற்கு முன்னரே, சுத்தி எப்படி மரணமடைந்தாள் என்பதை செய்தித்தாள்களிலும், வதந்திகளூடாகவும் கிராமத்தவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். அவர்கள் அனைவருக்குமாக «என்னை நினைத்து இரங்காதீர்கள். என் மரணத்திற்கு காரணமான ஆடவர்களை நினைத்து பரிதாபப்படுங்கள்» என தனது தரப்பின் நியாயங்களை சுத்தி எனும் பாத்திரம் சொல்லி முடிக்கையில் அழுத்தம்பெற்று நிறைவுறுகிறது கதை.

இறந்த உடலைப் பதப்படுத்தும் தொழிலாளி, மனைவியின் உடலை நிர்வாணமாகக் காண்பதைக் கோபமுறக் கண்டிப்பது முதல், அவளை அமைதியுற விடுங்கள் எனச் சொல்லி முடிக்கும் இறுதிக் காட்சிவரை அபசிறி எனும் கதாபாத்திரம், அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உணர்வுபூர்வமான கதையில், மெல்லிய நகைச்சுவையும், கவித்துவத்தையும் நுட்பமாக புகுத்தி மலைசார்ந்த அழகிய இயற்கை நிலங்களில் எம் சிந்தனையை பரவவிட்டவாறே, நுட்பமாகக் கதையாடல் செய்கின்றார்

இயக்குனர் பிரசன்ன ஜெயக்கொடி. மகேந்திர பெரேரா, செமினி இத்தமலகொட, ருக்மல் நிரோஷ் ஆகியோரின் நடிப்பு இத்திரைக்கதைக்கு பெரும் பலம். படம் முடிவடைந்த பின்னரான உரையாடலில், பாலியல் உறவுச் சிந்தனை, தமது சமுதாயத்திடம் எந்தளவு சீர்கெட்டிருக்கிறது என்பதனை வேதனையுடனும், அக்கறையுடனும் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் பிரசன்ன ஜெயக்கொடி. பிள்ளைகளிடம் பாலியல் உறவு குறித்து பேச, பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டும் பெற்றோர், கணவன் மனைவிக்குள்ளேயே முறையான ஆரோக்கியமான பாலியல் உறவு இன்மை, பாலியல் உறவு குறித்து, ஆரோக்கியமற்ற விடயங்கள் பகிரும் இணையத்தளங்களை நோக்கிய இளம் சமுதாயத்தின் அனாவசியமான தேடுதல் வேட்கை என இவை அனைத்துமே இம்முறைகேடான பாலியல் உறவு தொழிலுக்கு காரணமாகிப் போகின்றன என்கிறார் அவர்.

«28» எனும் தலைப்புக்கான காரணம் என்ன ? எனும் கேள்விக்கு, இந்து, பௌத்த, மதங்களின் சந்திர நகர்வுக் கணிப்பிலான சந்திரமாசத்தின் நாட்கள் 28 என்பதனையும், பெண்களின் மாதவிடாய் காலம் சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறையானது என்பதனையும் இணைத்த குறியீடாகக் கொண்டது என விளக்கம் தந்தார் இயக்குனர்.

2014ம் ஆண்டு நெதர்லாந்தின் ரொதெர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடுவர் விருதை வென்றதிலிருந்து பல சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெற்று, இந்த வருடம் (2017) ஜூன் மாதம் இலங்கையில் திரைக்கு வந்துள்ளது «28».

 பாலியற் காட்சிகள் ஏதுமின்றி, பாலியல் வன்முறை அவலத்தினை திரைக்கதையொன்றில் அழகாகவும், ஆழமாகவும் வெளிப்படுத்திய வகையில், இயக்குனரின் சமூக அக்கறைமிக்கத் திரையாளுமை பாராட்ட முடிகிறது. தவறுகளைச் சுட்டிக்காட்டவே, வன்முறையைக் காட்சிப்படுத்துகின்றோம் எனச் சொல்லி, வெண்திரையில் இரத்தம் தெறிக்கவிடும் படைப்பாளிகள், திரைப்பட ஆர்வலர்கள், சமூக அக்கறையாளர்கள், தவறாது பார்க்க வேண்டிய திரைப்படம் «28».

- லோகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியாவின் சிறப்புச் செய்தியாளர்கள்

------------------------------------------------------------------------------------------------------

'28' a film telling brutality in a non violent way!

'28' a film directed by director Prasanna Jayakody that screened in 70th international Locarno film festival's open door section dedicated this year to South Asia's neglected cinemas.The story of '28' is based on these following important incidents.

Abasiri and his cousin Mani were summoned to Colombo by police to identify a women's corpse who was sexually abused and killed. The story begin with this incident and then travels as how they took the corpse and travels to their village with an Ice cream van for hundred miles through a mountain path. The corpse is belongs to a women called Suddhi and she was the wife of Abasiri. Since the story travels with more thriller and smoothness describing the shadows and truths of the difficulties to bring the corpse to their own village. It is because of the inherent consideration of the film to express how Sexual relationships become as indecency and vulgarity in the countries like Sri Lanka in south Asia.

Whenever Suddhi was appears in the film she expressed her feelings on young age, Marriage, life after marriage and the reason behind her dead more touchingly, in behalf of all those women in the present world who faces the same situation. When this death women was telling the story about her life from the young age to those situations when she fallen down in sexual assaults and violence and lost the life we can imagine that this story can be suitable to any kind of women in all over the world.

It was shown that before the coffin arrived to the village, the rumors of Suddhi's death had been spread among villagers through news papers and media. When this story finishes as Suddhi's imaginable character was saying to those villagers to prove rightness on her side, its said 'Please don't inexorable for me. Instead sympathetic to those men who murdered me!', the story gets it completeness and strength.

Suddhi's husband Apasri's character is also well built. When he got angered and blamed postmortem worker while seeing his wife's corpse nude and when he pleased and asked to give peacefulness to Suddhi at least after her death at the climax his character was designed excellently. A sensitive story with slide comedy and poetry and scenes of greenish mountains helped to make subtle story line.

The biggest strength of the screenplay was acing of director Prasanna Jayakody, protagonists :Mahendra Perera , Semini Iddamalgoda , Rukmal Nirosh , Sarath Kothalawela. Director Prasanna Jayakody shared some words after the screening of the film. He told that our society has been ruined because of current sexual relationship thoughts with sorrows and much social care. He said that, 'Those parents who ignored to speak and share about sexual relationship matters to children properly, the unhealthiest sexual relationship between husband and wife, the unwanted and rising thirsty of seeing unhealthiest pornography in Internet among young people were the reasons behind illegitimate sexual relationship jobs that spreading in the city sides.

when a question, 'what is the reason behind the title '28'? raised, the director answered as follows. 'The growth and attrition period of moon in Hindu and Buddhist moon calendar is 28. The periodic cycle of women also happened once a 28 days. Therefore we titled '28' for this film as a symbolic indication of these events.'

This film had sworn the best jury’s award in 2014 Rotterdam international film festival of Amsterdam. Then this film had been screens in many international film festivals and received a good welcome. '28' is on Sri Lankan theaters from June 2017.

We can congratulate the screening personality of director Prasanna Jayakody with much social care as he had shown us that without sexual scenes we can express sexual violence in a screenplay deeply and beautifully. Therefore we suggest, those film makers, film distributors and social welfare activists who says we show violence in the screen only to indicate mistakes and splash blood in the screen, «please don’t miss to watch the film ’28’!»

- 4tamilmedia special news editors from Locarno

 

 

கதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

சிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்