திரைப்படவிழாக்கள்
Typography

Une Jeune Fille de 90 ans (90 வயதில் ஒரு இளம் பெண்), இம்முறை லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், பெரிதும் பேசப்படும் ஒரு திரைப்படம்.   Fuori Concorso (போட்டிக்கு வெளியே) பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பிரெஞ்சு மொழித் திரைப்படமான இதை இயக்கிய இருவரில் ஒருவர் பெண், Valeria Bruni Tedeschi, மற்றையவர் Yaan Coridian.

முதியவர்களை பராமரிக்கும் ஒரு மருத்துவமனை. சர்வதேச புகழ் பெற்ற பிரபல நடனப் பயிற்சியாளரான Thierry Thieû Niang அங்குள்ள அல்சைமெர் நோயாளிகளுக்கு நடனப் பயிற்சி கொடுத்து, அவர்களை உற்சாகமாகவும், உயிரோட்டமாகவும் வைத்திருக்க நினைக்கிறார். கமெரா அவரை பின் தொடர்ந்து அம்மருத்துவமனை நோயாளிகளை படம்பிடிக்க முடிவெடுக்கிறது.  படம் தொடங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்நடனப் பயிற்சியாளருடன் நெருங்கிப் பழகத் தொடங்குகிறார்கள் முதியவர்கள்.

அவர்களுடைய  பழைய ஞாபகங்கள் மீட்கப்படுகின்றன. வாழ்வின் இறுதிக் கட்டத்திலிருக்கும் அவர்கள், தமது நிச்சயமற்ற எதிர்காலம், வருத்தங்களுடன் கூடிய இறந்த காலம், தனிமை, கசப்புணர்வு, மகிழ்ச்சி என அனைத்தையும் Thierry யுடன் பகிர்ந்துகொள்கின்றனர்.  

Blanche Moreau எனும் 92 வயதுப் பெண்மணி ஒருவர் எதிர்பாராத விதமாக Thierry மீது காதல் வசப்படுகிறார். 92 வயதில் ஒருவருக்கு வரும் காதலின் அழகியல் எப்படி இருக்கும், அவருடைய காதலை Thierry எப்படி பார்க்கிறார், எப்படி அந்த உணர்ச்சிகளுக்கு அவர் முகம் கொடுக்கிறார் என்பதே மீதிக் கதை.   Thierry மீதும், அவருடைய நடனப் பயிற்சி மீதும் அம்முதியவர்கள் காண்பிக்கும் ஆர்வம் தனித்துவமானது.  குறிப்பாக Blanche அம்மருத்துவமனையில் வழமையான ஆடல், பாடல் பயிற்சிகளை எந்தளவு வெறுக்கிறார் என்பதை Thierry யுடன் பேசும் போது அவருடைய முக உணர்ச்சியிலேயே காண்பித்து விடுவார்.   Thierry யின் கைகளை இறுகப்பிடித்து, தான் காதல் வயப்பட்டுவிட்டதாக சொல்லும் தருணம், மறுநாள் Theirry ஐக் காணாது வாடித் தவிக்கும் நேரம், இறுதியாக தன்னைச் சுற்றியிருக்கும் ஒவ்வொரு முதியவராக அழைத்து Thierry  நடனமாடும் போது தன்னை மறுபடியும் அழைக்கும் நேரத்திற்காக  சின்னக் குழந்தை போன்று பரிதவித்துக் கொண்டிருக்கும் நேரம் என படம் தொட்டுச் செல்லும் உணர்ச்சி வடிவங்கள் இதுவரை நாம் காணாதவை.   இத்திரைப்படம் போட்டியில் இல்லாத போதும், இம்முறை லொகார்னோவில் திரையிடப்பட்ட மிகச் சிறந்த ஒரு திரைப்படம் என்பதை ஒருவரும் இலகுவில் மறுக்கமாட்டார்கள்.

Watch video!

Directors : Valeria Bruni Tedeschi , Yann Coridian

Producer : Marie Balducchi

Cinematography : Hélène Louvart

Sound : François Waledisch

 Editing : Anne Weil 

- 4தமிழ்மீடியாவுக்காக லொகார்னோவிலிருந்து ஸாரா 

 

 "A Young Girl in Her Nineties" : Locarno celebrates elderly people

'Une Jeune Fille de 90 ans, is a movie that is widely spoken by many on this Locarno film festival though it is not among the competition. This is a french movie directed by Valeria Bruni Tedeschi and Yaan Coridian.
 
The story of this film is as follows, A choreographer Thierry Thieu Niang is going to give dance practice to the elderly people in a French hospital that take cares the elders specially with Alzheimer. Step by step elderly people become closely to him and recovered some of their memories too. Then the elderly people who are in the last stage of their life begun to share their worries, uncertainty of the life, broken past, loneliness, hatreds and happiness with Thierry.
 
Meanwhile a 92nd years old woman Blanche Moreau has fallen in love with Thierry suddenly. The rest of the story is travels beautifully with their love story. Blanche Moreau's love expressions and wordless emotions are commendable.
 
For example, Blanche says that she doesn't like the regular singing practices in hospital to Thierry  by her facial expression. When another situation, she holds Thierry's hand so tightly and said she is loving him so much. The sadness she express, when next day Thierry is absent and the childhood expression when she waits for her turn to dance with him are incredible too.
 
This film is an another inspiring romantic love movie among good cinema and everybody agrees that this is also among one of the best pictures in Locarno.
 
- 4tamilmedia's Reporters from Locarno
- Translation by Navan

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்