திரைப்படவிழாக்கள்
Typography

இயக்குனர்களின் முதல் அல்லது இரண்டாவது முழுநீளத் திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவில், Mañana a esta hora (This Time Tomorrow) எனும் திரைப்படத்தை காணக் கிடைத்தது. 

Lina Rodriguez எனும் கொலம்பிய பெண் இயக்குனரின் நெறியாள்கையில் உருவான இத்திரைப்படம், கொலம்பியாவின் நடுத்தர சராசரி வாழ்க்கை வாழும் ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்கிறது. ஒரு 17 வயது இளம்பெண்ணின் வாழ்க்கை பற்றிய புரிந்துணர்வுகள் திடீரென மாறும் போது, தனக்கான அடையாளத்தைத் தேடியும், தனக்கான இன்பங்களைத் தேடியும் அப்பெண் புறப்படும் போது பெற்றோரின் நிலமை என்னவாகிறது எனக் கூறும் இத்திரைப்படம் கொலம்பிய நகர்ப்புற மக்களின் வாழ்க்கையின் யதார்த்த நிலைக்கு மிக அருகாமையில் இருந்து அதைச் சொல்ல முயற்சித்திருக்கிறது. அதில் வெற்றியும் கண்டிருக்கிறது.  பெரும்பாலான கதை, அவர்களது வீட்டினுள்ளேயே நகர்கிறது. ஒரு கணம் தனது பெற்றோரிடம் அன்பை பொழியும் அப்பெண் மறுகணம் எரிந்து வீழ்கிறாள். 17 வயதுக் காதல், காமம், பெற்றோரின் கண்டிப்பு என அனைத்து தருணங்களிலும் அவர்கள் பகிர்ந்துகொள்ளும் உரையாடல்களும், உணர்ச்சிகளும், உலகில் வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள  எல்லா நடுத்தர குடும்பங்களுக்கும் மிகப் பொருந்தும்.

ஒவ்வொரு முறையும் தனது நடத்தையை நியாயப்படுத்த முயன்று தோற்றுப் போகும் கதாபாத்திரத்தில் அப்பதினேழு வயதுப் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் Laura Osma. இம்முறை போட்டியில் ஏதோ ஒரு விருதை இத்திரைப்படம் நிச்சயம் தட்டிச் செல்லும் என இப்போதே எதிர்பார்ப்பு நிரம்புகிறது. 

Watch video!

 Director : Lina Rodríguez

Cast : Laura Osma , Maruia Shelton , Francisco Zaldua , Clara Monroy , Catalina Cabra , Francisco Restrepo , Juan Miguel Santana , Juan Pablo Cruz , Valentina Gómez , Alejandra Adarve

Producer : Lina Rodríguez, Brad Deane

Cinematography : Alejandro Coronado

Costumes : Iris Ocampo Maya

Screenplay : Lina Rodríguez

Sound : Camilo Martinez, Juan Felipe Rayo, Roberta Ainstein

Editing : Lina Rodríguez, Brad Deane

 Art Director : Iris Ocampo Maya

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்