இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவில் கௌரவ லியோபார்ட் கிளப் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் ஹிலாரி ஸ்வாங்க் (Hilary Swank).
திரைப்படவிழாக்கள்
நேற்றிரவு லொகார்னோ திறந்தவெளித் திரையரங்கில் கடத்தப்பட்ட விமானம்!
நேற்று வெள்ளிக்கிழமை பியாற்சே கிராண்டே திறந்த வெளி பெருத் திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட இரு படங்களில் முதலாவது «7500».
நியோன் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற திரைப்படங்கள்!
நியோன் சர்வதேச திரைப்பட விழாவான «Visions du Réel» (உண்மையின் தரிசனங்கள்) இன் 50வது வருட கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த 9 நாட்களின் பின்னர் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. எவ்வருடத்திலும் போலன்றி சுமார் 45’000 க்கும் மேற்பட்ட திரை ஆர்வலர்கள் திரைப்பட விழாவில் கலந்து கொண்டது வரலாற்று சாதனை படைத்துள்ளது.
கோலாகலமாகத் தொடங்கியது Visions du Réel ஆவணத்திரைப்பட விழா !
சர்வதேச ஆவணத் திரைப்பட விழாவான «Visions du Réel, » (உண்மையின் தரிசனங்கள்) ஏப்ரல் 5ம் திகதி, சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில், கோலாகலமாகத் தொடங்கியது.
முன்னோடிக்கான நினைவு அர்ப்பணிப்புடன் ஆரம்பமாகியது லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழா 72வது தொடர்!
சுவிற்சர்லாந்து சினிமாவின் மூத்த திரைப்படக்கலைஞரும், அரைநூற்றாண்டுகால முன்னோடியும், கடந்த மே மாதம் மறைந்தவருமாகிய Freddy Buache ஃப்ரெடி புச்சேயின் நினைவுகளுக்கான அர்ப்பணிப்புடன் ஆரம்பமாகியது லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவின் 72வது தொடர்.
That Which Does Not Kill : வன்புணர்வின் வலி குறித்து ஒரு ஆவணத் திரைப்படம்!
பாலியல் வன்முறை, வன்புணர்வு (Rape) எனும் சொற்கள் எவ்வகையில் அடையாளம் காணப்படுகின்றன? 2012 இல் டெல்லி முனீர்கா நெடுஞ்சாலையில் பேருந்தில் கும்பல்-வன்புணர்வுக்கு உள்ளான அந்த பெண் அனுபவித்த அதே வேதனையை, ஒரு 19 வயதுப் பெண் தான் காதல் வயப்பட்டதாக நம்பும் இளைஞனுடனான முதலாவது உடலுறவு இச்சையிலும் அனுபவித்திருக்க நேர்ந்திருக்கும்.
Her. Him. The Other : மூவர் (Thundenek)
Him.Her.The Other (அவன், அவள், மற்றும் மற்றையவர்கள்), தமிழில் «மூவர்» எனும் பெயரிலும், சிங்கள மொழியில் «துந்தனெக்» எனும் பெயரிலும், இலங்கையின் மூன்று மிக முக்கிய / கொண்டாடப்படும் திரை இயக்குனர்களான பிரசன்ன விதானகே, விமுக்தி ஜயசுந்தர மற்றும் அசோக ஹந்தகம ஆகியோரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.