இயக்குனர்களின் முதல் அல்லது இரண்டாவது முழுநீளத் திரைப்படங்களுக்கான போட்டிப் பிரிவில், Mañana a esta hora (This Time Tomorrow) எனும் திரைப்படத்தை காணக் கிடைத்தது.
திரைப்படவிழாக்கள்
"90 வயதில் ஒரு இளம்பெண்" : முதுமையைக் கொண்டாடும் லொகார்னோ!
Une Jeune Fille de 90 ans (90 வயதில் ஒரு இளம் பெண்), இம்முறை லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், பெரிதும் பேசப்படும் ஒரு திரைப்படம். Fuori Concorso (போட்டிக்கு வெளியே) பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பிரெஞ்சு மொழித் திரைப்படமான இதை இயக்கிய இருவரில் ஒருவர் பெண், Valeria Bruni Tedeschi, மற்றையவர் Yaan Coridian.
69 வது லொகார்னோ திரைப்பட விழா இரண்டாம் நாளில் பியாற்சா கிரான்டே.
69 வது லொகார்ணோ சர்வதேச திரைப்படவிழாவின் நேற்றைய (04.08.2016) இரண்டாம் நாள் விருதளிப்பில் கௌரவிக்கப்பட்டவர்கள் இருவர். பிரபல இங்கிலாந்து நடிகை ஜேன் பேர்கினிக்கு (Jane Birkin) லொகார்ணோவின் வாழ்நாள் சாதனையாளர் விருதும், பிரபல தயாரிப்பாளர் டாவிட் லிண்டுக்கு (David Linde) லொகார்ணோ திரைப்பட விழாவின் ஆரம்ப காலத் தலைவராக இருந்த ரைமொண்டோ றெற்சோனிகோவின் (Raimondo Rezzonico) பெயரில் வழங்கப்படும் விருதும் கிடைத்தது.
Shunte ki pao! (நீங்கள் கேட்கிறீர்களா ! )
69 வது லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், Open Doors எனும் பகுப்பில் தென் கிழக்காசிய நாடுகளின் படங்கள் திரையிடப்படுகின்றன. நேற்றைய (03.08.16) ஆரம்ப நாளில் திரையிடப்படது Shunte ki pao!(நீங்கள் கேட்கிறீர்களா ! ) எனும் வங்காள தேசப்படம் . அந்நாட்டின் புதிய தலைமுறை இயக்குனரான Kamar Ahmad Simon ன் நெறியாள்கையில் உருவாகியுள்ள ஒரு விவரணத் திரைச் சித்திரமிது.
Moka : (மோகா)
69 வது லோகார்ணோ சர்வதேசத் திரைப்பட விழாவில், ஆகஸ்ட் 4ந் திகதி பியாற்சா கிரான்டே பெருந் திரையில் காட்சிப்படுத்தப்பட்ட படம் (மோகா) Moka. இயக்குனர் Frédéric Mermoud, ஜெனிவா பல்கலைக்கழகத்தில் தத்துவார்தவியல் முதுகலைமானிப் பட்டமும், லுசான் (ECAL) கலைக் கல்லூரியில் சினிமாத்துறையில் பட்டம் பெற்றவர். அதனால் அவரது கதை மாந்தர்களின் உளவியல் நோக்கில் கதை நகரும் பண்பில் வந்திருக்கிறது மோகா.
Slava ( கௌரவ விருது)
69 வது லோகார்னோ திரைப்பட விழாவில் சர்வதேச தெரிவுப்போட்டிகள் (Concorso internazionale) பகுப்பில் நேற்று ( 04.08.2016) திரையிடப்பட்ட பல்கேரியன் திரைப்படம் Slava. தமிழில் "கௌரவ விருது" எனப் பொருள் கொள்ளக் கூடிய கதையம்சம் கொண்ட படம். இளைய தலைமுறையைச் சேர்ந்த Kristina Grozeva , Petar Valchanov, இரட்டை இயக்குனர்களின் நெறியாள்கைளில் உருவாகியுள்ள படம்.
The Girl With All The Gifts ( பரிசுப் பெண் )
பியாற்சே கிராண்டே திரையரங்கின் தொடக்க விழா திரைப்படமாக ஸ்கொட்லாந்து தொலைக்காட்சி இயக்குனர் Colm McCarthy யின் The Girl With All The Gifts காட்சிப்படுத்தப்பட்டது. இது Zombie கதைதான். ஆனால் இது இங்கிலாந்து வேர்ஷன். ஸோம்பிக்கள் இங்கிலாந்தை ஆக்கிரமிக்கின்றன. அவற்றின் வைரஸ் கிருமிகள் அந்நாடு முழுவதும் பரவ, அக்காலத்தில் கர்ப்பிணிப் பெண்களின் பிரசவத்தின் போது பிறந்த குழந்தைகளுக்கு மாத்திரம் மனிதன் போன்று சிந்திக்கும் குணமும், ஸோம்பிக்கள் போன்று இரத்தம் குடிக்கும் குணமும் சேர்ந்திருக்கிறது.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.