கோடம்பாக்கம் Corner

தமிழ் சினிமாவில் அரிதாகிவிட்ட 25-வது நாள் போஸ்டர் ஒட்டிய பெருமையை அடைந்து விட்டது ஜோதிகா, கார்த்தி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய தம்பி படம் ! சமீபத்தில் ஜீத்து ஜோசப்பை ஏவி.எம் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த சன் தொலைக்காட்சியின் பேட்டிக்கு வந்திருந்தார்.

வாழ்த்து தெரிவித்து பேசிக் கொண்டிருந்தபோது, தன்னைப் பற்றி மனம்விட்டு பகிர்ந்தார். ‘மலையாள திரைப்பட உலகில் ஜெயராஜ் என்ற இயக்குனரிடம் துணை இயக்குனராக பணியாற்றினேன் . ஒரு கட்டத்துலே ரொம்ப யோசிச்சு நடிகர் திலீப்கிட்டே ஒரு கதையை சொன்னேன். அவரும் இன்னும் பல தயாரிப்பாளர்களும் நான் சொன்னக் கதையை நல்லாயில்லை என்று சொல்லிட்டாங்க. இதனால் ரொம்ம மனமுடைஞ்சு போயிட்டேன். என் நிலைமை புரிஞ்சி, சுரேஷ் கோபி நடிக்க முன்வந்தார். அதுதான் என்னோட முதல் படமான 'டிடெக்டிவ்'.

அடுத்து மூன்று வருடமாக உழைத்து இரண்டாவது படமான ‘மம்மி அன்டு மீ’ என்ற படத்தை இயக்கினேன். அதுவும் வெற்றி. பின் பல படங்களை இயக்கிய எனக்கு மேமரீஸ் படம்தான் பாக்ஸ் ஆபீஸ் இயக்குநர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்துச்சு. அதுக்கப்புறம் எடுத்ததுதான் தான் த்ரிஷியம். அதுக்கு அப்புறம்தான் தமிழ் ஆடியன்ஸுக்கும் நான் பிடிச்சவன் ஆகிட்டேன்’ என்றவரிடம் த்ரிஷ்யத்தை திரும்பவும் தம்பியாக எடுக்கும் தைரியம் எப்படி வந்தது என்றேன். ‘ஒரு கதைய எத்தனை தடவை வேண்டுமானாலும் திரும்ப எடுக்கலாம். அதை எப்படி மாற்றி எடுக்கிறோம்கிறது திரைக்கதையில்தான் இருக்கு’ என்றார்.

இப்போது ‘ராம்’ என்ற மலையாளப் படத்துக்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.மோகன்லால் மற்றும் திரிஷா இப்படத்தில் நடிக்கிறார்கள்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்