திரைவிமர்சனம்

பசுபிக் துவாரம் பகுதி 2 (Pacific Rim Uprising) ஹாலிவுட் உலகில் அறிமுக இயக்குனர் ஸ்டீவன் எஸ் டெக்னைட் இயக்கத்தில் இவ்வருடம் மார்ச் 23 ஆம் திகதி யுனிவேர்சல் பிக்சர்ஸ் இன் தயாரிப்பில் வெளியாகி உலகம் முழுதும் காட்சிப் படுத்தப் பட்டு வருகின்றது.

இத்திரைப்படம் 2013 ஆமாண்டு வெளியான பசுபிக் ரிம் என்ற திரைப்படத்தின் 2 ஆவது பாகமாகும் (sequel)

2 ஆவது பாகமான பசுபிக் ரிம் அப்ரைஸிங் இன் கதைச் சுருக்கத்தையும் சிறப்புக்களையும் பார்ப்பதற்கு முன்பு முதலாம் பாகத்தின் கதையை சுருக்கமாக அலசுவோம். உலகின் மிகப் பெரிய சமுத்திரமான பசுபிக் சமுத்திரத்தில் ரிங் ஆஃப் ஃபைர் என்று குறிப்பிடப் படும் பகுதி எரிமலைச் செயற்பாடுகளும் நிலநடுக்கங்களும் நிஜத்திலேயே பூமியில் அதிகம் ஏற்படும் வலயமாகும். இதன் மையத்தில் Breach எனப்படும் பிரபஞ்சத்தில் உள்ள வோர்ம் ஹோல் (worm hole) இற்கு இணையான கற்பனைத் துவாரம் அதாவது Pacific Rim என ஒன்று இருப்பதாகவும் இதனூடாக கைஜூ (kaiju) என்ற இராட்சத விலங்குகள் 2013 ஆம் ஆண்டு முதல் வெளிப்பட்டு மனித இனத்துக்கும் மனிதனின் கட்டுமானப் படைப்புக்களுக்கும் அழிவை ஏற்படுத்தத் தொடங்குவதாகவும் கதை தொடங்குகின்றது.

முக்கியமாக சான் பிரான்சிஸ்கோ, சான் லுக்காஸ், சிட்னி, மனிலா மற்றும் ஹாங்கொங் ஆகிய நகரங்களுக்கு கடும் சேதம் ஏற்படுகின்றது. ஆரம்பத்தில் மனிதனுடைய ஆயுதங்களை வைத்து இவற்றை எதிர் கொள்வது என்பது மிகக் கடினமான பணியாகவும் பெரும் இழப்புக்களைத் தவிர்க்க முடியாததாகவும் இருந்ததால் வித்தியாசமாக சிந்தித்த மனித இனம் இரு மனிதர்களது மூளைகள் இணைந்து செயற்படுத்தக் கூடிய ஜேகர்ஸ் (Jaegers) என்ற humanoid mechas எனப்படும் கைஜுவுக்கு இணையான இராட்சத ரோபோக்களை உருவாக்கி போரில் ஈடுபடுகின்றது. இந்தப் போர் முன்னைய ஆயுதங்களை விட மிகவும் மேம்பட்ட முறையில் இருந்ததால் மனித இனத்துக்கு வெற்றியும் கிடைக்கின்றது. இவ்வாறு செல்லும் இக்கதையின் இறுதிப் பாகத்தில் 2025 ஆமாண்டு ஹாங்கொங்கில் ஒன்று கூடும் ஜேகர் ரோபோக்களும் அவற்றின் பைலட்டுக்களும் திட்டமிட்டு நிகழ்த்திய தாக்குதலில் கடும் போருக்குப் பின் அணுவாயுதம் ஒன்றின் மூலம் குறித்த கைஜூக்கள் அழிக்கப் பட்டு அவை வெளிப்பட்டு வரும் Breach என்ற தூவாரமும் மூடப் படுகின்றது.

இதன் பின் மனித இனம் கைஜூக்களுடனான போர் முற்றிலும் ஓய்ந்து விட்டது என்று சந்தோசப் பட்டுக் கொள்கின்றது. இதற்குப் பின் என்ன நடக்கின்றது என்பது தான் பசுபிக் ரிம் அப்ரைஸிங் திரைப்படத்தின் கதை. முதலாம் பாகத்தில் கைஜுக்களுடனான இறுதிப் போரில் தன்னுயிரைத் தியாகம் செய்த பெண்டெகோஸ்ட் என்ற பைலட்டின் மகனாக 2 ஆம் பாகத்தில் வரும் ஜேக் பெண்டகோஸ்ட் தான் 2 ஆம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரம். ஹாலிவுட்டில் மிகவும் ஹிட்டான திரைப் படங்களில் ஒன்றான ஸ்டார் வார்ஸ் தி ஃபோர்ஸ் அவேக்கன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்த அதே ஜோன் பொயேகா என்ற நடிகர் தான் அப்ரைஸிங் இல் வரும் ஜேக் என்ற கதாபாத்திரத்தையும் ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்.

Breach இல் நடந்த யுத்தம் முடிவுற்று 10 வருடங்கள் கழித்து இதன் கதை தொடங்குகின்றது. இத்திரைப்படத்தில் வரும் Geiszler என்ற நபருக்கு எதிர்பாராத விதமாக ஆய்வு கூடத்தில் வைக்கப் பட்டிருந்த கைஜூ மூளையுடன் தொடர்பு ஏற்பட்டு அவர் கைஜுக்களை பசுபிக் துவாரம் வழியாகத் திரும்ப வரவழைக்க ஏற்ற விதத்தில் செயற்பட வைக்கின்றது. ஒரு பக்கம் இதனால் Precursors எனப்படும் கைஜூக்களின் மூளை ஜேகர் என்ற மனித மெக்கா ரோப்போக்களுடன் இணைந்து மனித இனத்துக்கு எதிராக ரோபோக்களையே திசை திருப்பி விடுகின்றது.

மறுபுறம் இவை அனைத்தும் இணைந்து பசுபிக் துவாரத்தை லேசர் கதிர்களால் திறக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றன. சுதாரித்துக் கொண்ட மனிதர்கள் இந்த Precursors என்ற கைஜூ ரோபோக்களின் மூளைகளை தனிப்பட்ட கமாண்ட் மூலம் வெடிக்கச் செய்து அனைத்து Precursors ஐயும் செயலிழக்க செய்து விடுகின்றன. ஆனால் அதற்குள் இந்த Breach துவாரத்தில் இருந்து சக்தி வாய்ந்த 3 கைஜூக்கள் வெளிப்பட்டு டோக்கியோ நோக்கிச் செல்லத் தொடங்குகின்றன. இதற்கிடையில் Pan Pacific Defence Corps (PPDC) என்ற ஜேகர் தயாரிப்பு நிறுவனத்தில் இளம் பைலட் ஹீரோக்கள் சிலர் இணைந்து சக்தி வாய்ந்த ஜேகர்களுடன் டோக்கியோ நோக்கிச் செல்லும் கைஜுக்களை வேட்டையாடக் கிளம்புகின்றது.

குறித்த 3 கைஜுக்களும் டோக்கியோவிலுள்ள ஃபுஜி என்ற எரிமலைத் துவாரத்தை நோக்கிப் பயணிப்பதாகவும் இந்த எரிமலைத் துவாரத்தில் தமது குருதியைக் கலப்பதன் மூலம் ஏற்படும் இரசாயன டாக்ஸிக் வாயு பூமி முழுதும் பரவி மனித இனம் மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களையும் அழிப்பதே இவற்றின் திட்டம் எனவும் தெரிய வருகின்றது. இது நிறைவேறினால் பூமியில் கைஜுக்களின் கலப்பு இனமான Precursor களின் ஆட்சி தொடங்கி விடும்.

இவற்றின் நோக்கத்தை நிறைவேற விடாது கைஜுக்களை அழிக்கும் மும்முர போரில் ஜேகர்கள் ஈடுபட்டு வருகையில் எதிர்பாரத விதமாக 3 கைஜுக்களும் Geiszler இன் உத்தரவுக்கு அமைய ஒன்றினைந்து ஒரு மெகா கைஜு ஆக மாறுகின்றன. இந்த மெகா கைஜுவைத் தடுத்து நிறுத்த இறுதியில் எஞ்சுவது ஜேக் மற்றும் அமாரா என்ற ஒரு 15 வயதான பெண் ஆகிய பைலட்டுக்கள் அடங்கிய ஜிப்ஸி அவேஞ்சர் என்ற ஒரேயொரு ஜேகர் தான்.

இதன் பின் என்ன நடந்தது என்பதை நீங்கள் வெள்ளித்திரையில் காணுங்கள்...

பசுபிக் ரிம் பகுதி 1 பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்சன் $411 மில்லியன் டாலர்கள் ஆகும். சீனாவில் மட்டும் இது $114 மில்லியன் டாலர்களைச் சந்தித்தது. ஆனால் பசுபிக் ரின் பகுதி 2 வெளியாகி இதுவரை $233 மில்லியன் டாலர்கள் உலகளாவிய ரீதியில் சம்பாதித்துள்ளது. மேலும் 2018 ஆம் ஆண்டு அதிகம் சம்பாதித்த 7 ஆவது திரைப்படம் இதுவாகும்.

Pacific Rim Uprising Trailer :

 

- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்

கொரோனா ஊரடங்கில் ஆடை வடிவமைப்பாளர் சத்யாவுடன் சசிகுமார் ஜூம் நேரலைக் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அப்போது சசிகுமாரிடம் சில பிரபலங்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது பாக்யராஜின் மகனும் நடிருமான சாந்தனு உருப்படியான கேள்வி ஒன்றைக் கேட்டார். அது என்ன? கேள்வியையும் பதிலையும் தொடர்ந்து வாசியுங்கள்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

ஆண் பெண் அனைவரும் சமம் என்கிறோம். ஆனால் கார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ராஜாவை விட ராணி பெறுமதி குறைவானவளாக இருக்கிறாள் எனக் கேட்டு, நூற்றாண்டு காலமாக கார்ட்ஸ் விளையாட்டில் இருந்த இந்த ஆணாதிக்கத்தை புரட்டிப் போட்டிருக்கிறாள் பதின்ம வயது இஸ்ரேலிய பெண் மாயான்.