திரைவிமர்சனம்

காதலிக்கு ஒண்ணுன்னா கத்திய தூக்குற ஆண்களெல்லாம் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

நல்லவேளை... காதலர்கள் சேஃப்! ஒரு வீடியோ கேம்க்குள் நாமே உட்கார்ந்து கொள்கிற மாதிரி, நமது மூளைக்கு செம வேலை கொடுக்கிறார் அறிமுக இயக்குனர் மு.மாறன். சற்றே குனிந்து நிமிர்ந்தால் கூட, திரையில் யார் யாரை கொன்று விட்டு தப்பினார்கள் என்கிற துரத்தல் கை நழுவக்கூடும். எனவே ஷார்ப்பா லுக்கணும் பாஸ்!

ஹோம் சர்வீஸ் நர்ஸ்சாக பணியாற்றும் மகிமா நம்பியாருக்கும், கால் டாக்ஸி ஓட்டுனர் அருள்நிதிக்கும் லவ். வழக்கமாக ஒரே காரில் பயணிக்கும் மகிமா ஒரு நாள் வேறொரு டாக்சியில் கிளம்ப, அடப்பாவி... அந்த ஓட்டுனன் ஒரு பொறுக்கி. ஸ்பாட்டில் ஓடிவந்து காப்பாற்றும் அஜ்மல், அடப்பாவி... அவரும்தான்! இப்படி சீனுக்கு சீன் திரைக்குள் வரும் அத்தனை பேரும் ஏதோ ஒரு விதத்தில் பொறுக்கிகளாக இருக்க, நடக்கும் கொலைக்கு இவர்தான் காரணம் என துரத்தப்படுகிறார் அருள்நிதி.

கடைசியில் யார் யாரை கொன்றார்கள்? அருள்நிதிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது எப்படி தெரியவந்தது? இதெல்லாம்தான் க்ளைமாக்ஸ்.

ஒரு ராஜேஷ்குமார் நாவலை ஒரே மூச்சில் படித்தது போல ஒரு நிறைவு ஏற்பட்டாலும், முடிஞ்சுதுடா என்கிற மூச்சிரைப்பும் வராமல் இல்லை. சற்றே அயற்சி ஏற்படுத்துகிற ஓட்டம் என்பதும் மைனஸ்தான்.

அருள்நிதிக்கு ஏற்ற ரோல். மனிதர் ஓடிக் கொண்டே இருக்கிறார். கைக்கு வாகாக அமைகிற சண்டைக் காட்சிகளில் எல்லாம் பொளந்து கட்டுகிறார். சற்றே குறும்பு தோய்ந்த அந்த முகத்திற்கு, இன்னும் கொஞ்சம் காமெடி கலந்த ரோல்களை தேர்ந்தெடுத்தால் வெற்றி நிச்சயம்.

மகிமா... புது மழையில் நனைந்த சாமந்தியாக ஜொலிக்கிறார். அவ்வளவு கவலையிலும் அந்த முகத்தில் தெரியும் லட்சணம், முன்னணி இடத்திற்கு கொண்டு செல்லும். நோ டவுட்மா!

இந்த அஜ்மலை பார்த்துதான் எத்தனை வருஷமாச்சு? பேட்டரி போட்ட பம்பரம் போல துள்ளுகிறார் மனுஷன். சோஷியல் மீடியாவில் துணை தேடும் பெருசுகளை குறி வைத்து பணம் பறிக்கும் சிலரை, அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.

இதற்கு முன் சிற்சில படங்களில் நடித்த வித்யாவுக்கு இதில் வில்லி வேஷம். அந்த நல்ல முகத்திற்கு பொருந்தணுமே? ம்ஹூம். அப்புறம் சுஜா, சாயாசிங், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் விஜய் என்று நீள்கிறது பட்டியல். கொடுத்த டயலாக்கை உணர்ச்சியை குழைத்து படித்துவிட்டு போயிருக்கிறார்கள்.

இதுபோன்ற க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு எது ரொம்ப முக்கியம்? பின்னணி இசையும் ஒளிப்பதிவும். தன் 100 சதவீத உழைப்பை அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள் இருவரும். முறையோ சாம் சி.எஸ், அரவிந்த்சிங் ஆகியோருக்கு முழு பாராட்டுகள்.

எடிட்டர் சான் லோகேஷ், உடைந்த முறுக்கை ஒட்ட வைத்தது போல மிக சிரமப்பட்டுதான் இந்த கதையை கோர்த்திருக்கிறார். அதற்காகவும் ஒரு அப்ளாஸ்.

இரவு மிக நீளமாக இருப்பதை போல ஒரு பீலிங்ஸ். அதை மட்டும் தயவு பண்ணி  குறைத்திருக்கலாம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘க/பெ. ரணசிங்கம் ’படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் எனவும், ஒரு நூற்றாண்டின் துரோகம் அவர் என்றும் இருவேறு விமர்சனம் பெற்வர்.

TESS தொலைக் காட்டி

நாம் தனிமையில் இல்லை..! -பாகம் -1 (We are Not Alone..Part-1)

முன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

அனுஷ்கா - மாதவன் நடிக்கும் நிசப்தம் பட ட்ரைலர்! ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துதமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்ற பெயரில் வெளியாகும்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் "சலாம் சென்னையே" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் : 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்