திரைவிமர்சனம்

ஒட்டு போட்ட ஓவர் கோட், பனிரெண்டு கலர்களிலும் பல் இளிக்கிறது! பின்னே என்னவாம்? முந்தைய படத்தில் கழித்ததையெல்லாம் இந்தப்படத்தில் கொட்டிக் குமித்தால், பளபளப்பில்லாத பார்ட் 2 ரெடி! ஏரியல் ஷாட் இல்லாத லண்டன், எக்குதப்பான சி.ஜி காட்சிகள் என கமல்ஹாசனின் பர்பெக்ஷனில் கண்டமேனிக்கு சறுக்கல்!

தீவிரவாதிகளை அடக்கக் கிளம்பிய ரா உளவுப் பிரிவை சேர்ந்த மேஜர் ஒருவரின் சாகசம்தான் ‘விஸ்வரூபம்2’. மேஜர் சுந்தர்ராஜனுக்கு நயன்தாராவை ‘ப்பேர்’ பண்ணிய மாதிரியிருக்கிறது அநேக காட்சிகள். கடைசியாக வெளியே வரும் ரசிகன், “யாருக்காவது கதை புரிஞ்சா சொல்லிட்டு போங்களேன்டா...” என்று படிக்கட்டிலேயே தர்ணா பண்ணாமலிருந்தால் ஆச்சர்யம்!

கமல் தன் பேமிலிகளோடு(?) எங்கெங்கோ போகிறார். அங்கெல்லாம் அவரை துரத்திக் கொண்டு வருகிறார்கள் துஷ்டர்கள். நாக்கை துருத்தி முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு அவர்களையெல்லாம் போட்டுத்தள்ளுகிறார் மேஜர் கமல். அந்த ஆபரேஷனில் அநியாயத்துக்கு செத்துப்போகிற ஆன்ட்ரியா, கமலின் லவ்வரா? இல்ல லுல்லுலாயா? என்பதையெல்லாம் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். பட்...? தலை கிர்ரென்கிறது. ஆமாம்... கடலின் ஆழத்தில் கிடக்கும் அந்த வெடிகுண்டை பார்க்க எதுக்குங்க அப்பாவி பெண்டாட்டியான பூஜா குமாரை அனுப்பணும்? மிலிட்டரிக்கும் அவருக்கும் ஏதேனும் ஸ்நான பிராப்தி இருக்கா?

சரி விடுங்கள். கமலின் வழக்கமான ‘அட... மற்றும் அடடே’க்கள் இருக்குமே! இல்லாமலா? எங்கோ மின்னல் போல வந்துவிட்டு மின்னல் போல மறைந்துவிடுகின்றன அவையெல்லாம். பல வருடங்கள் கழித்து தன் அம்மாவை சந்திக்கும் அவர், ‘எதிர்ல இருக்கிற நான்தான்மா உன் புள்ள...’ என்று உதடு வரை வந்து முழுங்குகிற காட்சி ஒன்று சாம்பிள். அப்புறம் வழக்கமாக அவருக்கென இருக்கும் பிரான்டட் முத்தங்கள். ரொமான்சுகள்...! ஆனால் அவையெல்லாம் அரசாங்க ஆஸ்பத்திரியின் ஆக்சிடென்ட் வார்டை கடப்பது போல அத்தனை கொடுமை! (இனிமே எதுக்கு சார் இந்த ரொமான்செல்லாம்?)

பிராமணர்களை வச்சு செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார் கமல். இந்திய பாதுகாப்பு பிரிவில் இருக்கும் எல்லா ஆபிசர்களும் ‘அவாள்’களாகவே இருக்கிறார்கள். ‘எதிரி சாகறதை என் கண்ணால பார்த்துண்டே சாகணும்...’ என்கிறார் ஒரு அதிகாரி. ‘நான் சொன்னனேனோல்யோ...’ என்கிறார் இன்னொருத்தர். ‘வர வர நீ நம்மாளாங்கறதே சந்தேகமா இருக்கு’ என்கிற அந்த பிராம்ணாள் ஆபிசரிடம், ‘சத்தியமா இல்ல’ என்று கூர்மையாக மறுக்கிற காட்சியில் மட்டும் நாத்திக கமல் பளிச்சிடுகிறார்.

பூஜா குமாருக்கு சினிமா ஆசை போக வேண்டி கும்பகோணம் மகாமகம் கரையோரம் உட்கார்ந்து யாராச்சும் சிறப்பு யாகம் பண்ணினால் தேவலை! விஸ்வரூபம் பார்ட் 3 வர்ற நேரத்தில் பூஜா குமாருக்கு தவிர்க்க முடியாத குடும்ப வேலைகள் அமைய குடும்பம் குடும்பமாய் கூட்டம் கூட்டமாய் வேண்ண்ண்ண்டுகிறோம் ஆன்ட்டவரே....!

அவ்வளவு கொடுமையிலும் சிறகசைத்து பறக்கிற திடீர் பட்டாம்பூச்சியாய் ஆன்ட்ரியா. சடக்கென கண் சிமிட்டி, அவர் பேசும் டயலாக்குகள் அப்படியே அள்ளுகிறது நம்மை. ஆச்சர்யமாக சில பைட்டுகளும் இருக்கிறது. பின்னுகிறார்.

அதென்ன...? நார்த் மெட்ராஸ் அழுக்கு குப்பையில் ரவுடிகள் பற்றி கதைகள் எடுத்தாலும் குடும்ப பெண்களை கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டுகிறான் வில்லன். இன்டர்நேஷனல் லெவல் டெரரிசம் பற்றி எடுத்தாலும் அதே பார்முலாவை கடைபிடிக்கிறான் வில்லன்? எம்.ஜி.ஆர் நம்பியார் காலத்து ஃபார்முலாவை தயவு செய்து மாற்றுங்கப்பா!

ஜிப்ரானின் இசையில் பின்னணி அபாரம். ஒளிப்பதிவாளரை அடக்கி வாசிக்க விட்டிருக்கிறார்கள். வெளிநாட்டில் கதை நடக்கும் போது ஒரு காட்சியாவது வெளி உலகத்தை காட்ட வேண்டாமா? மேட்ச் பண்ணுவதில் பிக்சிங் இருக்குமோ என்னவோ?

கமல் கட்சி 234 தொகுதியிலும் நிற்பதாகவே வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் எதிர்கட்சிகள் தொகுதி வாரியாக விஸ்வரூபம் 2 ஐ வேஷ்டியோ, வெள்ளை துணியோ கட்டி திரையிட்டால் போதும். கமலின் கட்சியே காலியாகும் வாய்ப்பு நிச்சயம். ஒரு யோசனைதான்...!


மற்றபடி விஸ்வரூபம், கஷ்டகாலம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

விஷாலுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பின் தனது அடுத்த படமாக பிசாசு 2 குறித்த அறிவிப்பினை இயக்குநர் மிஷ்கின் நேற்றிரவு இன்று அதிகாலை இந்தியநேரம் நள்ளிரவு 12 மணிக்கு அறிவித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

அமைதி நிலவும் இடத்தில் வளர்ச்சி தெரியும் என்பது ஆய்வாளர் கூற்று. அமைதி நிலவும் இடத்தில் ஆற்றல் பெருகும் என்பது ஆன்மீகக் கருதுநிலை.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் இருவரும் காதலித்து பெற்றோர் சம்பத்துடன் திருமணம் செய்துகொண்டவர்கள்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.