திரைவிமர்சனம்

திரௌபதி என்ற பெயரைக் கேட்டாலே நம் எல்லோருக்கும் உடனடியாக நினைவில் வருவது பாரத பெருங்காப்பியத்தின் தலைவி திரவுபதியின் சபதம் தான் . திரவுபதியை தாய் தெய்வ வழிபாட்டின் ஒரு பகுதியாகவே திராவிடர்கள் காத்து வருகிறார்கள் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் திரௌபதி வழிபாடு ஆழமாக வேரூன்றிய ஒன்று.

வடதமிழகத்தில் இருக்கும் திரௌபதி அம்மன் கோவில்களும் அந்த கோவில்களில் நடக்கும் சித்திரை திருவிழாக்களில் நடக்கும் பூக்குழி எனும் தீமிதியும் பிரசித்தி பெற்றவை. திரௌபதி அம்மன் கோவில் தீமிதியில் இறங்கி நடந்தால், செய்த பாவங்களை அன்னை திரௌபதி மன்னித்து விடுவாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தமிழகத்தைப் பொருத்தவரை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பட்டியல் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட இடைநிலை ஜாதியினர் திரௌபதி அம்மனை குல தெய்வமாகவே வழிபட்டு வருகிறார்கள். ஆனால் சாதி ரீதியாக தமிழர்கள் தங்களைத் தாங்களே ஒருவரை ஒருவர் ஒடுக்கிக் கொள்வதை திரௌபதி அம்மன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள்.

திரௌபதி படத்தின் விமர்சனத்திற்கும் தமிழர்களின் நாட்டார் மெய்யியல் வழிபாட்டு முறைக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். இந்தப் படத்தில் ஷீலா ராஜ்குமார் ஏற்று நடித்திருக்கும் திரௌபதி கதாபாத்திரமே படத்தின் தலைப்பாக இருக்கிறது. அது ஜாதி பெருமிதம் கொண்ட கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கதை, வட தமிழகத்தின் இரண்டாம் தலைநகரம் என்று சொல்லக்கூடிய செங்கல்பட்டு நகரத்தின் பதிவாளர் அலுவலகத்திலிருந்து தொடங்குகிறது. இந்த அலுவலகத்திற்கு மிதிவண்டியில் வந்து தேனீர் விற்பனை செய்யும் பிரபாகர், அங்கே நடக்கும் பதிவு திருமணங்களை நோட்டம் விடுகிறார். வக்கீல் என்ற போர்வையில் இருக்கும் கருணா என்பவர் ,நிராதரவாக வரும் இளம் ஜோடிகளுக்கு பதிவு திருமணம் செய்து வைக்கிறார். அவர்களுக்கு அடைக்கலம் தருவது போல அத்து மீறுகிறார். அவரை நோட்டம் பார்க்கும் பிரபாகர் தன் முகத்தை துணியால் மறைத்துக்கண்டு கருணாவை கொலை செய்கிறார். பின்னர் கருணாவின் தலைவராக இருக்கும் ஒரு சாதி கட்சியின் இரண்டாம் கட்ட தலைவரையும் தீர்த்து கட்டுகிறார். இப்படி கொலை செய்வதை வீடியோவாக எடுத்து அந்த ஊரின் காவல் ஆய்வாளருக்கு மட்டும் அனுப்புகிறார்.அதிர்ந்து போகும் காவல் ஆய்வாளர் இந்தக் கொலையின் பின்னால் இருக்கும் அந்த முகமூடி மனிதனை கண்டுபிடிக்கும்படி சிஐடி அருணை அனுப்பி வைக்கிறார். மெல்ல மெல்ல பிரபாகரை நெருங்கும் நெருங்கும் அருண், அவரை கைது செய்கிறார். பிரபாகர் எதற்காக இந்த கொலைகளை செய்தார் என்பது பிளாஷ்பேக்கில் விரிகிறது.

வசதியான வீடுகளில் உள்ள இளம் பெண்களை காதலிப்பது போல் நடித்து, காதலில் விழுந்த பெண் இல்லாமலேயே பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்து, போலி பதிவு திருமண சான்றிதழ் பெற்று ,அதை வைத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை அம்பலப்படுத்துகிறது திரைக்கதை.

போலி திருமணம் செய்து ஏமாற்றுபவர்கள் குறிப்பிட்ட எந்த சாதியையும் சேர்ந்தவர்களாக இயக்குனர் சித்தரிக்கவில்லை. இளம் பெண்களுக்கு காதல் என்ற பெயரில் இப்படியும் சிக்கல் வரலாம் என்று பில்டப் செய்து கூறுகிறது திரைக்கதை. படத்தின் பின் கதை அழுத்தமாக கூறப்பட்டிருந்தாலும் நீதிமன்ற காட்சிகள் பெரும் இழுவையாக நீள்கின்றன. சாதிகளுக்கு இடையில் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் சித்தரிப்பு என்று படத்தில் எதுவுமே இல்லை. சாதிகள் தொடர வேண்டும் என்பதையே படம் மறைமுகமாக வலியுறுத்துகிறது. ஒரே சாதியில் திருமணம் செய்வது சாதி அமைப்பை காப்பாற்றும் அரன் என்பதையும் படம் அழுத்தமாக முன்வைக்கிறது. க்கும் l

தட்டையான ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதை முடிந்தவரை திரில்லர் கதைசொல்லல் ஆக முயன்றிருக்கிறார் இயக்குனர். ஆனால், படத்தின் நீளம் பெரிதாக இருக்கிறது. மூன்று கொலைகளுக்காக சிறையில் இருக்கும் ஒருவர் எப்படி தப்பி வந்து மேலும் சில கொலைகளை செய்கிறார் என்பதற்கு இயக்குனர் எந்த பின்னணியையும் காட்டவில்லை. அதேபோல் இந்த படத்தில் வருகிற அளவிற்கு இன்றை பெண்கள் முட்டாள்களாகவும் இல்லை.

படத்தில் இடம்பெற்றிருக்கும் பெண்ணும் மண்ணும் ஒன்று என்ற வசனம் , காட்சிக்கு பொருந்தினாலும் கருத்தாக்க ரீதியாக பெண்களை சொத்துரிமை போல பாவிக்க சொல்கிறது. இதில் இயக்குனரின் சிந்தனை வறட்சியே மேலோங்கி நிற்கிறது. திரௌபதியாக நடித்திருக்கும் ஷீலா ராஜ்குமார், பிரபாகர் ஆக நடித்திருக்கும் ரிச்சர்ட் ரிஷி ஆகியோரின் நடிப்பை தவிர வேறு யாருடைய நடிப்பும் எடுபடவில்லை. மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவும் ஜுபின் இசையும் படத்திற்கு உதவியிருக்கின்றன.

போலித் திருமணங்கள் பற்றிய கதையாடலை சற்று சுவைபட கூறியிருந்தாலும் படத்தின் நோக்கம் சாதியை தூக்கிப் பிடிப்பதாகவே இருக்கிறது. அதைத் துணிந்து சொல்வதில் இயக்குனர் மோகன் ஜி காட்டியிருக்கும் தீவிரம், சாதியை திரையில் எவ்வாறு கையாள்வது எனும் நடுநிலையைக் கோட்டை விட்டு, கலைஞன் பொதுவானவன் என்ற விதியிலிருந்து விலகி நிற்கிறார். கதை நாயகியின் சபதமும் சாதியை காப்பாற்றுவதாக இருக்கிறது. அவ்வகையில் இது திரௌபதியின் சொதப்பிய சபதம்.

- 4தமிழ்மீடியா விமர்சனக்குழு

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பீட்சா, சூதுகவ்வும், அட்டகத்தி, இன்று நேற்று நாளை, தெகிடி உள்ளிட்ட கதைக்கு முக்கியத்துவம் கொண்ட மக்கள் மனதில் இடம்பிடித்த படங்களை தயாரித்து வருபவர் சி வி குமார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இத்தாலியில் பயண அனுபவங்களில் நாம் காண முடியும் முக்கிய அம்சம் விதவிதமான விளம்பரத் தட்டிகள். ஏனைய ஐரோப்பிய நாடுகளை விடவும் மிக இத்தாலியில் அதிகமாக நிறுவப்பட்டடிருக்கும் பிரமாண்டமான நிரந்தர விளம்பரத் தட்டிகளை விடவும், பெரும் ஊர்த்திகளில் நிறுவப்பட்ட நகரக் கூடிய தட்டிகளையும் கூடக் காணலாம்.

கடந்த தொடரில் கருந்துளைகள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் மற்றும் தோற்றம் என்பவை குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகப் பார்த்தோம்.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கோடியில் ஒருவன்’ மற்றும் ‘காக்கி’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ளன.

தமிழ் சினிமாவில் திருநங்கைகளை மையப்படுத்தி அவ்வபோது சில படங்கள் வெளிவருவதுண்டு. சில ஆண்டுகளுக்குமுன் விஜய்சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார். இப்போது திருநங்கைகள் தினத்துக்காக ஒரு பாடல் உருவாகியுள்ளது.