திரைவிமர்சனம்

தலைப்பிலேயே ஒளிந்திருக்கிறது இந்தப் படத்தின் கதை. பார்டி, லூட்டி என்று இளமையின் வாழ்க்கையை செம ஜாலியாக வாழ்ந்து வருகிறார்கள் துல்கர் சல்மான் மற்றும் அவரது நண்பர் ரக்‌ஷன் ( கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர்) இருவரும்.

இவர்கள் இப்படி ஜாலியாக வாழ தேவைப்படும் பணத்தை இணையத்தைப் பயன்படுத்தி வெகு நூதனமான முறையில் விதவிதமான ஹைடெக் மோசடிகளைச் செய்து வருகின்றன. ஹைடெக் திருடர்கள் என்றாலும் காதலுக்காக ஏங்க வைக்கிறது இவர்களது வயது. இதனால் அழகு நிபுணராக இருக்கும் ரீத்து வர்மாவிடம் மனதைப் பறிகொடுக்கிறார் துல்கர்.

ரீத்து வர்மாவின் தோழி நிரஞ்சனி அகத்தியனின் மேல் துல்கரின் நண்பன் ரக்‌ஷனுக்கு காதல் பொங்கி வழிகிறது. நூதன மோசடிகள் வழியே சேர்த்த 40 லட்சம் ரூபாய் பணத்துடன் அநாதை ஆசிரமத்தில் வளர்ந்த ரீத்து, நிரஞ்சனி இருவரையும் திருமணம் செய்துகொண்டு கோவாலில் குடியேறி வாழ முடிவெடுக்கிறார்கள். ஆனால் கோவா வரைத் துரத்திக்கொண்டுவரும் சிறப்பு சிஐடிப் பிரிவுக் கமிஷனரான கௌதம் மேனன், கோவாவில் கைது செய்ய வந்தது யாரை என்பதில் ஒரு திடுக்கிடும் திருப்பம். இதன்பிறகு இந்த ஜோடி போலீஸ் வலையில் இருந்து தப்பித்து தாங்கள் வாழ நினைத்த வாழ்க்கையை வாழ்ந்தார்களா, இல்லையா என நீண்டு செல்கிறது படம்.

படத்தின் முதல் சிறப்பான அம்சம் யூகிக்கவே முடியாத திருப்பங்களுடன் அமைக்கப்பட்டிருக்கும் ராக்கெட் வேகத் திரைக்கதை. கௌதம் மேனன் பட்டறையில் இருந்து வந்திருக்கும் அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி தனது குரு கௌதம் மேனனுக்கும் அட்டகாசமான ஒரு வேடத்தைக் கொடுத்துள்ளார். கௌதம் மேனனும் தானொரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்துள்ளார்.

இணையத்தையும் டிஜிட்டல் தொழில்நுட்பதையும் பயன்படுத்தி இன்று எப்படியெல்லாம் திருடமுடியும் என்பதை சித்தரித்துக் காட்டியது மிகவும் நம்பகமாகவும் ‘அடடே’ என்று சொல்லும்படியாகவும் இருக்கிறது. அதே சமயம், இணையம் தொழில்நுட்பம் என்று காட்டினாலும் லாஜிக் ஓட்டைகள் படம் முழுவதும் மலிந்து கிடக்கின்றன. ஆனால், அந்த ஓட்டைகள் படத்தின் வேகத்தில் ரசிகர்களின் மனதை மறக்கடித்துவிடுகின்றன.

இது துல்கர் சல்மானுக்கு இருபத்தைந்தாவது படம். இளைமைக் கொண்டாட்டம் மிக்க, அட்டகாசமான ஒரு பொழுதுபோக்குப் படத்தின் மூலம் வெற்றியைக் கனியைப் பறித்திருக்கிறார். படத்தில் இவரது அலட்டலோ பதட்டமோ இல்லாத நடிப்பு அவர் செய்யும் திருட்டுக்களைக் கூட ஏற்றுக்கொள்ள வைக்கிறது.

ரீத்து வர்மா, நிரஞ்சனி அகத்தியன் ஆகிய இருவருமே ‘யப்பா!’ என்று சொல்லபடி நடித்திருக்கிறார்கள். காதல் வழியும் தனது கண்கல் வழியே திருட்டுத்தனத்தையும் வழிய விட்டிருக்கிறார் ரீத்து வர்மா. இந்த இருவரும் போலிக் காதல் செய்யும்போதும் பின்னர் உண்மையாகவே காதலிக்கும்போதும் நடிப்பில் அசத்திவிடுகிறார்கள்.

வீட்டைத் துறந்து துல்கரை ஆறு ஆண்டுகளாக பின் தொடரும் வேடத்தில் ரக்‌ஷனின் காமெடி கலந்த நடிப்பு துல்லியம். காதல் கதையாத் தொடங்கி குற்றத் த்ரில்லர் கதையாக மாற்றம் அடையும் இந்தப் படம், கண்ணும் கண்ணும் கொள்ளையத்தால் காதல் அல்ல; களவு என்று சொல்லி கைதட்டல் வாங்கிவிடுகிறார்கள்.

-4தமிழ்மீடியா விமர்சனக் குழு

ஒவ்வொரு பொதுமக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் இசையை பிரிக்க முடியாது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டி.ஜி. விஷ்வ பிரசாத் தயாரிப்பில் உருவாகியுள்ள நிஷப்தம் திரைப்படத்தில் ஆர். மாதவன், அனுஷ்கா ஷெட்டி,

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.