திரைவிமர்சனம்

இயக்குநர் ஸ்டீவன் சோடர்பெர்க் என்ற மிக முக்கியமான இயக்குநரின் இயக்கத்தில் உருவானது இந்தப் படம். இவர், ‘சே’ என்ற தலைப்பிலேயே சேகுவாரா வாழ்க்கையை படமாக்கியவர்.

ஹாலிவுட்டை கிடுகிடுக்கச் செய்த ‘ எரின் புரோக்கோவிச். ட்ராஃபிக், ஓசன் லெவன் உள்ளிட்ட மிக முக்கியமான படங்களை இயக்கி ஹாலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ், விமர்சகர் வட்டம் இரண்டிலுமே வரவேற்பைப் பெற்றவர். இவர்தான் கொரானா போன்ற வைரஸை அடிப்படையாக வைத்து 2011-ல் கண்டாஜியன் (Contagion) படத்தை இயக்கினார்.

Contagion என்ற தலைப்புக்கு தொற்று என்று பொருள். படத்தில் நாயகனின் மனைவியும் மகனும் மர்மமான முறையில் இறந்துவிடுவார்கள். அவர்கள் இறந்ததற்கான காரணத்தைத் தேடும் போது தான் ஒரு மோசமான வைரஸ் பரவி வருவது தெரியவரும், அந்த வைரஸ் உள்ள ஒருவர் தொடும் பொருட்களை மற்றவர் தொட்டாலோ அல்லது எச்சில், இருமல், வியர்வை போன்ற விஷயங்களில் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இது உலகம் முழுவதும் பரவி பலரின் உயிரை பறிக்கிறது. தற்போது நடப்பதை 2011லேயே படம் பிடித்தது போல இருக்கிறது இத்திரைப்படம்.

சீனாவில் மக்காவ் என்ற இடத்தில் இருக்கும் சமையல்காரர் ஒருவர், கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் பன்றி மாமிசத்தைக் கையில் எடுத்துவிட்டு, தனது கையைக் கழுவாமல் க்வைனத் பால்ட்ரோ கதாபாத்திரத்துக்குக் கை கொடுப்பார். பால்ட்ரோ, அமெரிக்காவுக்குத் திரும்புகையில் அவருக்குக் கிருமித் தொற்று பாதிக்கப்பட்டிருக்கும்.

அடுத்த சில நாட்களில் அவர் இறக்க, அவரது தொற்று மற்றவர்களுக்கும் பெரிய அளவில் பரவ ஆரம்பித்து நாடே ஸ்தம்பிக்கும். இந்தக் கிருமித் தொற்று பன்றி, வவ்வாலிலிருந்துதான் ஆரம்பித்துள்ளது என்பார் படத்திலிருக்கும் விஞ்ஞானி ஒருவர். ஆனால் தொற்று சீனாவில் இருந்து பரவியது என்பதை கற்பனையாக அப்போது இந்தப் படம் சித்தரித்திருந்தாலும் தற்போது அப்படியே பொருந்திப்போவதுதான் சினிமா ரசிகர்கள் சற்றும் எதிர்பாக்காத நிதர்சனத் திருப்பம்.

'சோசியல் டிஸ்டென்ஸ்', '144 தடை உத்தரவு', 'லாக் டவுண்', 'டிபார்ட்மெண்டல் ஸ்டோரை காலி செய்யும் மக்கள்','ஆலய வழிபாடு நிறுத்தம்','ஹீலர் பாஸ்கர் கைது' காலி வீதிகள், காலி விமான நிலையங்கள், நகரங்கள், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுக்கும் மக்கள் என தற்போதைய சர்வதேச நிலவரத்தை தீர்க்கதரிசனம்போல் பிரதிபலித்த காரணத்தால்தான் "கன்டேஜியன்" திரைப்படம் தற்போது அமேசான் தளத்தில் வைரலாகியுள்ளது

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா அலை முடிந்தபிறகுதான் அஜித் வலிமை படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று அஜித் தரப்பில் முதல் கூறப்பட்டது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரடி கட்சி அரசியலில் ஈடுபட போவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்