திரைவிமர்சனம்

கோரோனா காலத்தில் குடும்ப வன்முறை அதிகரித்துவிட்டதாக செய்தி வந்த வேளையில் ஒரு குடும்ப வன்முறைப் படம் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். அமேசான் இணையதளம் பெரும் குப்பை கிடங்கு. அதில் முத்துக்களை தேடித்தான் எடுத்தாக வேண்டும்.

அதைத் துழாவிக்கொண்டிருந்தபோது, அதற்குமுன் நான் பார்த்த கன்னட, மலையாளப் படங்களின் தன்மையையொட்டி அந்தத் தளமே சில சிபாரிசுகளை முன்வைத்தது. அதற்குமுன் நான் பார்த்த சில படங்கள் சமுகக் காதல் நாடகங்களாக இருந்தன. இதனால் அதைப்போன்ற படங்களையே முன்வரிசையில் கொண்டுவந்து கொட்டிக்கொண்டிருந்தது. ‘டொமஸ்டிக் வயலன்ஸ்’ என்ற இரு வார்த்தைகளை உள்ளிட்டதும் முதலில் வந்து விழுந்த படம் ‘thappad’ (தப்பாட்) என்ற இந்தி மொழிப்படம்.

அதன் ரேட்டிங், ‘ஸ்பாய்லர்’ இல்லாத சில விமர்சங்களை நோக்கினேன். கதை பிடித்திருந்தால் பார்க்கத் தொடங்கினேன். முதல் 15 நிமிடங்கள் மகா அறுவையாக இருந்ததால் வேறு சில வேலைகளைச் செய்துவிட்டு, மதிய உணவுக்குப்பிறகான இடைவெளியில் தொடர்ந்து பார்க்கத் தொடங்கினேன். அதன்பிறகு கதையின் பயணம் எனது வாழ்க்கையின் சில தருணங்களையே எனக்கு நினைவூட்டியது.

இந்தியக் கலாசார மரபில் வழிவழியாக வரும் நம் திருமணம், தாம்பத்தயம், குடும்பம் குறித்த மதிப்பீடுகளின் செவியில் மௌனமாக அறையும் ஆராவாரம் இல்லாத இயல்பான முயற்சி இந்தப் படம். விக்ரம் ஒரு கார்ப்ரேட் நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞன். அதே நிறுவனத்து லண்டனில் இருக்கும் தலைமையகத்தில் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆகி அங்கே இடம்பெயர்வதுதான்  அவனுடைய கனவு. இதற்காக தீயாக வேலை செய்கிறான்.

திரையில் ஒரு தீர்க்கதரிசனம்! 2011-ல் சீனாவைக் கிழித்த திரைப்படம் !

இன்னொரு பக்கம் தன் கால்கள் மற்றும் உடலின் லாவகமான நடனமொழியை பெரிதும் நேசிக்கிறாள் அமிர்தா. ஒரு தொழில்முறை ‘டான்சர்’ ஆவதுதான் அவளது கனவு. திருமணம் செய்துகொண்டு குடும்பத் தலைவியாக குப்பை கொட்டுவது என்பதையெல்லாம் அவள் நினைத்ததே இல்லை. ‘ஹவுஸ் ஒய்ஃப்’ என்ற வார்த்தையே அவளுக்குப் பிடிக்காது. அம்மாவைப் பார்த்து ‘ நீ ஏன் மற்றவர்களிடம் உன்னை ‘ஹவுஸ் ஒய்ஃப்’ என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறாய் என்று கடிந்துகொள்கிறாள். ஆனால், வாழ்க்கையின் கொண்டையூசி வளைவுகளை யாரால் யூகிக்கமுடியும். விக்ரம் , அமிர்தா இருவருக்கும் பெற்றோர்கள் ஏற்பாட்டில் திருமணம் நடந்து முடிகிறது.

யார் ஒட்டுண்ணி ? - பாரசைட் விமர்சனம்

முப்பையில் தொடங்கும் கதை, அதன்பிறகு டெல்லியில் குடியேறுகிறது. அமிர்தா முழுமையான குடும்பப் பெண்ணாக மாறிவிடுகிறாள். மாமியாருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதிப்பது. கணவனை எழுப்பி தேநீர் கொடுப்பது, அவனுக்கு மதிய உணவு சமைத்துக் கொடுத்து அலுவலகம் அனுப்பவது என பரபரப்பாகிறாள். பெரும்பாலான இந்தியப் பெண்கள் சொந்த அடையாளங்களை, கனவுகளை அழித்துச் செழிக்கும் இந்த குடும்ப அமைப்பில் ஒரு இயந்திரம் ஆகிறாள் அமிர்தா.

இன்னுமொரு ‘நடிகையர் திலகம்’ காத்திருக்கிறது ! - கரிகாலன்

அதேவேளை விக்ரமின் லண்டன் கனவு அவன் மடியில் வந்து விழுகிறது. அவனுக்கு பதவி உயர்வு கிடைத்துவிட்டதைக் கொண்டாட இரவுப் பார்ட்டிக்கு ஏற்பாடாகிறது. கணவனின் கனவு மெய்ப்பட்டதில் அம்ரிதாவும் மகிழ்கிறாள். நடனம் ஆடுகிறாள். இந்த இடத்தில் எதிர்பாராத கொண்டையூசி வளைவு ஒன்று சிக்கிக்கொள்கிறான் விக்ரம். நிறுவனத்தில் நடந்துவந்த ‘லாபி’யால் வேறு ஒருவர் ‘சிஇஓ’ ஆகிவிடுகிறார்.

மடியில் விழுந்ததை சில நிமிடங்களில் காணோம் எனும்போது மூர்க்கமாகும் விக்ரம், தன்னோடு வேலை செய்யும் மூத்த ஊழியன்தான் இந்தத் ‘தட்டிப் பறித்தலுக்கு’க் காரணம் என்று அவரிடம் சண்டை போடுகிறான். அப்போது இடையில் குறுக்கிட்டு அமிர்தா சண்டையை விலக்குகிறாள். இந்த களேபாரத்தில் மனைவியை கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிடுகிறான் விக்ரம். அந்த ஒரு அறையால் அவனது தாம்பத்ய கோட்டை சிறிது சிறிதாக இடிந்து விழுகிறது. சமூகம், அம்மா, தம்பி, மாமியார், எல்லோரும் அதை ஒரு சாதாரண அடியாகவே கருதுகிறார்கள். அதைக் கடந்து போகச் சொல்கிறார்கள்.

வீரம்மாவும், Protée வும் !

ஆனால் தாம்பத்தியத்தில் தம்பதிக்கிடையிலான அன்பு என்பது மரியாதையிலிருந்து வளர வேண்டும். கணவன் தன்னை மதிப்பதுதான் தன்னை அன்பு செய்யும் வழி என்று நம்புகிறவள் அமிர்தா. அந்த ஒரு அடியில் அவள் விக்ரம் மீது வைத்திருந்த தாம்பத்திய அன்பு உதிர்ந்துவிடுகிறது. விக்ரம் எவ்வளவோமுயற்சி செய்கிறான். வேண்டுமானால் என்னை நீயும் அடித்துக்கொள் என்கிறான். ஒரு தப்பை இன்னொரு தப்பால் சமன் செய்ய விரும்பவில்லை அமிர்தா. விக்ரமிடம் விவாகரத்து கேட்கிறாள்.

வீடே அதிர்ந்துபோகிறது. அவளது வழக்கறிஞர், மணமுறிவுக்கு சில பொய்யான காரணங்கள், இழப்பீடு போன்றவற்றுக்குப் பரிந்துரை செய்கிறாள். எல்லாவற்றையும் மறுத்து உண்மையை மட்டும் சொல்லி மணவிலகல் பெற்றால் போதும் என்கிறாள். ஆனால் விக்ரம் வழக்கறிஞர் அம்ரிதா மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். அதில் ஒப்பமிடுகிறான் விக்ரம். மற்றபடி விக்ரமை பெரிய வில்லனாக வெல்லாம் சித்தரிக்கவில்லை படத்தை இயக்கியிருக்கும் அனுபவ் சின்ஹா.

Tunnel (சுரங்கம்)

டெல்லியின் உயர்நடுத்தர வர்க்கப் பின்னணியில் சித்தரிக்கப்பட்ட சமரசமற்ற குடும்ப நாடகம். இந்தக் கதையின் மையப் பிரச்சனை 'அடி' மட்டும்தான். அந்த அடி, பெண் என்பவள் எப்போதும் விரும்பும் சுயமரியாதையின் மீது விழுந்த அடி. இதற்கிடையில் அமிர்தா கற்பம் அடைகிறாள். விக்ரம் கைவிட்டுப்போன லண்டன் சிஇஓ வேலை மீண்டும் வருகிறது. ஆனால் இப்போதுதான் விக்ரம் உணர்கிறான். ஒரு மரத்தால் வேரில்லாமல் கனிகளைத் தரமுடியாது. அஸ்திவாரம் இல்லாமல் எந்த மாடமாளிகையும் நிலைத்து நிற்காது. அமிர்தா மட்டுமல்ல, அவளது அம்மா, விக்ரமின் அம்மா எல்லோருமே தங்கள் கனவுகளை விட்டுக் கொடுத்தே குடும்ப விளக்குகளாக ஒளி தருகிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது வெறும் அன்பை அல்ல, சுயமரியாதையை!

நீதிமன்றத்தில் நடக்கும் இறுதிக்காட்சியில் அமிர்தாவும் விக்ரமும் இணைந்தார்களா என்று சொல்வது விமர்சனமாக இருக்காது. நீங்கள் சுயமரியாதை விரும்பும் அமிர்தா எனில் 2 மணி நேரம் 20 நிமிடங்களை ஒதுக்கி படத்தைப் பார்க்க முயற்சியுங்கள். நீங்கள் விக்ரமாகவும் இருக்கிறீர்கள் என்றால் வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை தொடங்கமுடியுமா என்பதை உங்களூடன் விவாதிக்கிறது இந்த ‘தப்பாட்’.

- 4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இயக்குநர் இமயம் பாரதிராஜா தற்போது படம் தயாரித்துவரும் தயாரிப்பாளர்களுக்காகவே 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் சங்கம் தொடங்க ஆயத்தமானார்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் என ஆறாவது முறையாக சூர்யாவை இயக்க ஒப்பந்தமானார இயக்குனர் ஹரி.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது