திரைவிமர்சனம்

இயற்கை தன் கரங்களை அகல விரித்து ஆட்சி செய்யும் அற்புதமான கொடைக்கானல் எனும் இடத்தை களங்கப்படுத்தும் கதைக் களம். கதாநாயகி ரிதம் (கீர்த்தி சுரேஷ் ) 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் அஜயை நினைத்து கவலைப்படுகிறார்.

மகன் தொலைந்துபோன இடத்துக்கு அடிக்கடி செல்கிறார். ஒருநாள் திடீரென மகன் கிடைக்கிறான். இப்போது அஜயின் வயதுடைய அவனது தோழியான மற்றொரு சிறுமியும் காணாமல் போகிறாள். சார்லி சாப்ளின் மாஸ்க் அணிந்த ஒருவர், ரித்தின் மகனைப் பின் தொடர்வதும் அவனைக் கடத்த முயல்வதும் கதாநாயகிக்கு தெரியவருகிறது. அந்த முகமூடிக்கு சொந்தக்காரர் கண்டுபிடிக்க முயல்கிறாள் ரிதம். அவளது முயற்சியில் அந்த மர்ம மனிதரின் முகமூடியை அவிழ்ந்து அவர் யார் என்பது உலக்கு வெளிச்சம் போட்டு காட்ட முடிந்ததா? குழந்தைகள் ஏன் கடத்தப்பட்டார்கள் என்பதுதான் பென்குயின் படத்தின் கதை.

அய்யப்பன் நாயர் ஆக விரும்புகிறேன்: பார்த்திபன்

ரிதம் என்ற கதாபாத்திரத்தில், கதாநாயகி வேடத்தில் கீர்த்திசுரேஷ் நடித்திருக்கிறார். அமேசான் தளத்தில் இந்தத் திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இதுபோன்ற கிரைம் திரில்லர் கதைகளுக்கு திரைக்கதைதான் அடிப்படையான பலம். ஆனால்முன்பின்னாக சில காட்சிகளை விரித்துக்காட்டிய உத்தியைத் தவிர திரைக்கதையில் துளியும் புதுமையோ சுவாரசியமோ இல்லை. கதாபாத்திர வடிவமைப்பிலாவது கொஞ்சம் தேறுகிறதா என்று பார்த்தால், குழந்தையைக் கடத்தியவர் ஏன் சார்ளி சாப்ளின் முகமுடி அணிந்துகொள்கிறார். மனோத்தந்துவ டாக்டர் எதற்காக மற்றொரு சைக்கோவாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என பல கேள்விகளுக்கு பதிலும் இல்லை படத்தில் பின்னணியும் இல்லை.

வெறுப்பை ஏற்படுத்தும் கதாபாத்திரங்கள் ஒரு பக்கம் வதைக்கிறது என்றால், காட்சிகளில் இருக்க வேண்டிய லாஜிக் எங்கே என்று தேடியனால், ‘அட போங்க சார் அது எனக்கே என்னவென்றே தெரியாது!’ என அறிமுக இயக்குநர் கார்த்திக் ஈஸ்வர் காட்சிக்குக் காட்சி சொகிறார். அவ்வளவு அபத்தங்கள். மொத்தத்தில் பல நூறு படங்களில் பார்த்து சலித்த கதாபாத்திரங்கள், லாஜிக் இல்லாத காட்சிகள் என படம் கொன்று கொலையெடுத்தபடிஉட்டாலக்கடி திரைக்கதையுடன் நகர்கிறது.

பாலிவுட்டில் சூறாவளியாக மாறிய தற்கொலை !

க்ரைம் த்ரில்லர் படம் தருகிறேன் பேர்வழியாக அறிமுக இயக்குனர் கார்த்திக் ஈஸ்வர் கார்த்திக் பென்குயின் என்ற புதுமையான தலைப்பை மட்டுமே யோசித்திருக்கிறார். மற்ற அனைத்தும் கொரியன் கொலை மற்றும் சைக்கோ குப்பைத் திரைப்படங்களில் மலிந்திருக்கும் காட்சிகளை காப்பி எடுத்தது போலவே பல்லிளிக்கிறது. பல காட்சிகள் இப்படியெல்லாம் கூட மனிதர்களிடம் சைக்கோ தனம் இருக்குமா என்று பின்வழியாகச் சிரிக்கவும் அதே நேரம் மண்டைவலி தலைக்கேறி கோபப்படவும் வைக்கின்றன.

கார்த்திக் பழனி ஒளிப்பதிவில் கொடைக்கானலை மலைகள், ஏரிகள், குளிர், பணி, பைன் மரக்காடுகள் என மர்மமான பின்னணியில் சிறப்பாக காட்டியிருக்கிறார். கீர்த்தி சுரேஷின் நடிப்பு சில காட்சிகளில் பரவாயில்லை ரகம். கதாநாயகிக்கு இரண்டு கணவர்கள். கணவர்களாக நடித்த இருவருமே சுமாராக நடித்திருக்கிறார்கள். துணை கதாபாத்திரங்களில் டாக்டர் டேவிட் வருபவர் ஓகே. சொல்லி வைத்தார்போல சைக்கோவாக வரும் அனைவரையும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களாகக் காட்டி மலம் போக்கினை இந்த அறிமுக இயக்குநரும் அப்படியே கடைபிடித்திருக்கிறார்.

குழந்தைகள் மீதான வக்கிரம், சைல்ட் அப்யூஸ், போட்டி மனப்பான்மை, மோசமான டாக்டர், வன்மம் மிகுந்த தோழி என்றெல்லாம் தமிழ் சினிமா தூக்கி குப்பையில் வீசிய பழைய மண்பாண்டங்களை தேடி எடுத்து வந்து கொடுத்திருக்கிறார்கள். பெண்களும் குழந்தைகளும இந்த படத்தை பார்ப்பது ஊரடங்கு காலத்தில் அவர்களது மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். குழந்தைகளைப் படத்தில் சைக்கோவாக சித்தரித்து இருப்பதால் அதைக் காணும் உங்கள் குழந்தைகள் மனதில் வன்மத்தை தூண்டும் என்பதில் சந்தேகமில்லை. இப்படி ஒரு மோசமான படத்தை கார்த்திக் சுப்புராஜ் ஏன் வெளியிட்டார் என்று தெரியவில்லை இது பென்குயின் அல்ல; மண்டையைக் குடையும் கொடூர ‘பெயின்’!

-4தமிழ்மீடியா விமர்சனக்குழு

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பிரபல பாலிவுட் நடன இயக்குநர் சரோஜ் கான் இன்று காலமானார்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

இயற்கை தன் கரங்களை அகல விரித்து ஆட்சி செய்யும் அற்புதமான கொடைக்கானல் எனும் இடத்தை களங்கப்படுத்தும் கதைக் களம். கதாநாயகி ரிதம் (கீர்த்தி சுரேஷ் ) 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். 6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் அஜயை நினைத்து கவலைப்படுகிறார்.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து