திரைவிமர்சனம்

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

உடனடியாக நெட்ஃபிளிக்ஸ் இணையதளத்தில் அதைப் பார்க்க உட்கார்ந்துவிட்டேன்.

ஆந்திர மாநிலம், குண்டூரில் சின்னச் சின்ன வேலைகள் செய்து பிழைத்துவரும் தமிழ் இளைஞர்களான பாண்டியும் (தினேஷ்) அவனது மூன்று நண்பர்களும், கிடைக்கும் சொற்ப வருமானம் வயிற்றுப் பாட்டுக்கே போதாத நிலையில், வாடகை வீடு எடுத்துத் தங்கமுடியாமல் ஊரின் பொதுப் பூங்காவில் தங்கியிருக்கிறார்கள். அவர்களைக் கைதுசெய்து லாக்அப்பில் அடைக்கும் உள்ளூர் போலீஸ், அவர்கள் செய்யாத குற்றத்தைச் சுமத்தி அதை ஏற்றுக்கொள்ள, விசாரணை என்ற பெயரில் கொடும் சித்திரவதைகளை செய்து மூலம் நிர்ப்பந்திக்கிறது. மலத்துவாரச் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சாத்தான்குளம் பென்னிக்ஸுக்கு நேரும் அதே நிலையை பாண்டியும் எதிர்கொள்கிறான்.

மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் 88 வயது சாருஹாசன்!

இறுதியாக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படும் அவர்களுக்குத் தப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதே நீதிமன்றத்தில் சரணடைய வரும் பிரபல அரசியல் தரகரான கேகேவை (கிஷோர்) கைது செய்ய தமிழ்நாட்டிலிருந்து வரும் தமிழகக் காவல் அதிகாரியான முத்துவேல் (சமுத்திரக்கனி) உதவியுடன் இந்த இளைஞர்கள் விடுதலையாகிறார்கள். தங்கள் நன்றியைக் காட்ட அவருக்கு உதவப்போய் வாழ்வா, சாவா என்ற பொறியில் மீண்டும் மாட்டிக்கொள்கிறார்கள். ஆந்திர போலீஸோ, தமிழக போலீஸோ அல்லது இந்தியாவின் எந்த மூளையில் உள்ள போலீஸாக இருந்தாலும் சக மனிதர்களை அவர்கள் விசாரணை என்ற பெயரால் உயிர்போகும் அளவுக்கு சித்திரவதை செய்வார்கள் என்பதைத்தான் பதைபதைக்க வைக்கும் உண்மையுடன் பதிவு செய்திருக்கிறது விசாரணை

விசாரணை படத்தில் போலீஸின் கொடூர வீசாரணைக் காட்சிகள் உண்மை நிகழ்விலிருந்து அப்படியே தனி மனித அனுபவம் வழியாக காட்டிப்படுத்தப்பட்டுள்ளன. பாண்டியும் அவனது நண்பர்களும் வாங்கும் ஒவ்வொரு அடிக்கும் நமது சதை பிளந்து இரத்தம் தெறிப்பதைப் போல நடுநடுங்க வைக்கிறது. இத்தனை குரூரமான காவலர்களுக்கு இடையேயும் நேர்மையும் மனசாட்சியும் கொண்ட இன்ஸ்பெக்டர் முத்துவேலாக சமுத்திக்கனியின் நடிப்பு அத்தனை இயல்பு. அப்பாவிக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் நால்வரும் தமது மிகையற்ற நடிப்பால் நமது அனுதாபத்தைப் படம் முழுவதும் பெற்றுக்கொள்கிறார்கள்.

சமூக ஊடகத்தில் விஜய் - அஜித்தின் பலம் என்ன?

அப்பாவி இளைஞர்கள் தப்பித்துச் செல்வதற்கு வாய்ப்புகள் இருந்தும் தம்மை ஆந்திர போலீஸிடம் இருந்து காப்பாற்றிய நன்றி உணர்வின் காரணமாகப் பொறியில் மாட்டிக்கொண்ட எலிகளைப் போல வீழ்ச்சியுறும்போது அவர்களின் அறியாமையின் மீது கோபம் ஏற்படுகிறது. இருப்பினும் உண்மைக் கதையின் போக்கிற்கு அந்த அறியாமையே மூலம் என்னும்போது, அவர்களின் மீது இரக்கம் பிறக்கிறது.


வெற்றிமாறனின் திரைப்படங்களில் திரைக்கதையின் திருப்பங்கலை இயல்பான போக்கில் செலுத்தும் அவர், கதாபாத்திரங்களை எவ்வித பிம்பத்துக்குள்ளும் திணித்துவிடாமல் எழுதுவது முக்கியமான செயல்முறை. அதை இதிலும் ஒரு எதார்த்தப் படத்துக்குரிய தீவிரத்துடன் அவர் செய்திருக்கிறார். அப்படி எழுதிய கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களின் தேர்வுவில் அவர் வியப்பூட்டுபவர். அவரின் பொல்லாதவன் தொடங்கி அசுரன் வரை இந்தத் தேர்வு தான் அவரின் படங்களின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.

படத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப அம்சம் கிஷோரின் படத்தொகுப்பு. வெற்றிமாறன் தாம் படமாக்கிய நூற்றுக்கணக்கான படத் துண்டுகளிலிருந்து தனது படத்தை கண்டெடுக்க கிஷோரின் வெட்டுக்களே ‘விசாரணை’ படத்திலும் காரணமாக இருக்கின்றன என எண்ணத்தோன்றும் அளவுக்கு படத் துண்டுகளின் (ஷாட்ஸ்) நீளங்களை அவை தெரிவிக்கும் செய்தியை ஒட்டி அத்தனை கச்சிதமாக அவர் வெட்டியும் இணைந்தும் உள்ளார்.

அதேபோல, பெரும்பாலான காட்சிகள் குறுகலான அறைகளுக்கு குறைந்த வெளிச்சத்தில் படமாக்கி ஒளிப்பதிவை களத்தின் எதார்த்த கதாபாத்திரமாக மாற்றியிருக்கிறார் எஸ்.ராமலிங்கம். வெற்றிமாறனின் நண்பரான ஜி.வி.பிரகாஷ், தேவையான இடங்களில் மட்டுமே பின்னணி இசையை அமைத்திருக்கிறார். கதையில் விசாரணைக் கைதிகளான நான்கு அப்பாவி இளைஞர்களில் வழியில் இறங்கிக் கொண்ட ஒரே காரணத்திற்காக உயிர்பிழைத்து, தனக்கு நேர்ந்த அனுபவங்களை ‘லால்-அப்’ என்ற நாவலாகப் பதிவுசெய்த சந்திரகுமாருக்கு படத்தின் டைட்டிலில் உரிய மரியாதை கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். ஒரு நேர்மையான படைப்பாளிக்கு அழகும் அதுதானே!

- 4தமிழ்மீடியாவுக்காக மாதுமை

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.

நடிகர் பிருத்திவிராஜை தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கு அறிவார்கள். காரணம் நேரடித் தமிழ்ப் படமான, கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார்.

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.