திரைவிமர்சனம்

2017ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளை வெல்லப்போகும் திரைப்படங்கள் பற்றிய இறுதி முடிவு ஜனவரி 24ம் திகதி வெளிவரவிருக்கிறது.

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான பிரிவில் ஏனைய 84 திரைப்படங்களுடன் போட்டியிலிருந்த இந்திய பரிந்துரைத்திரைப்படம் «விசாரணை» இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் வாய்ப்பை இழந்ததை அண்மையில் அறிந்திருப்பீர்கள். இயக்குனர் வெற்றி மாறன், இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான குனீத் மொங்கா மற்றும் ஆலிஃப் ஸுர்தி ஆகியோருடன் இரு மாதங்களுக்கு மேலாக லாஸ் ஏஞ்சல்ஸில் இத்திரைப்படத்திற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். 

இத்திரைப்படம் பெரும்பாலான ஹாலிவூட் திரை விமர்சகர்களாலும், ஆஸ்கார் குழுவினராலும் பார்க்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சியையும் அவர்கள் மேற்கொண்டிருந்தனர். எனினும் Acadamey of Motion Picture Arts & Sciences குழுவினரால் இறுதித் தெரிவுக்கு விசாரணை பரிந்துரைக்கப்படவில்லை. 

 ஆக,  இம்முறையும் இந்தியாவின் இறுதி நம்பிக்கை இசையமைப்பாளர் ஏ.ஆ.ரஹ்மான் தான். «Ginga» எனும் தனது இசைப் பாடலுக்காக சிறந்த Original Score, Original Song  பிரிவில் அவருடைய பெயர் தொடர்ந்து பரிந்துரையில் உள்ளது. 

 சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட பிரிவில் இறுதிப் போட்டிக்குத் தெரிவான 9 திரைப்படங்கள் இவை.

 ஆஸ்திரேலியாவின் «Tanna» 

கனடாவின் «It’s Only the End of the World»

டென்மார்க்கின் «Land of Mine»

ஜேர்மனியின் «Toni Erdmann» 

ஈரானின்  «The Salesman»

நோர்வேயின் «The King’s Choice»

ரஷ்யாவின் «Paradise»

சுவீடனின் «A Man Called Ove»

சுவிற்சர்லாந்தின் «My Life as a Zucchini». 

 இவற்றில் இயக்குனர் Asghar Farhadi யின் «The Salesman» திரைப்படத்தை அண்மையில் பார்க்கக் கிடைத்தது.  2011 இல் இவருடைய «The Seperation»  திரைப்படம் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றது. விவாகரத்தை பற்றி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் யதார்த்த காட்சியமைப்பும், உரையாடல்களும், விறுவிறுப்பான கதை நகர்வும் Asghar Farhadi மீது ஈர்ப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தது. The Salesman திரைப்படமும் அந்த நம்பிக்கையை அப்படியே காப்பாற்றியிருக்கிறது. 

 ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை நோக்கி இடம்பெயரும் ஒரு இளம் தம்பதியினரின் (Shahab Hosseini & Tarneh Alidusti)  மகிழ்ச்சியான வாழ்க்கை எப்படி அதே குடியிருப்பில் இவர்களுக்கு முன்னர் அங்கு வசித்த ஒருவரால் தடம்புரள்கிறது என்பதே திரைக்கதை.  மேடை நாடக கலைஞர்களான இத்தம்பதியினர், இயல்பு வாழ்க்கையில் நடந்தேறும் சம்பவங்களுக்கான வேதனையை நாடக மேடையில் பிரதிபலிக்கும் காட்சி அமைப்பு அற்புதம். 

வீட்டில் தான் இல்லாத போது குளியலறை வரை வந்து தனது மனைவியை பலாத்காரப்படுத்தி அச்சுறுத்திச் சென்ற முகம் தெரியாதவனை தேடித் திரியும் அக்கணவனின் கோபத்திலேயே பாதித் திரைப்படம் சென்றுவிடுவதும், அதற்காக இவர்களையெல்லாமா சந்தேகப்படுவது என அக்கணவன் மீது பார்வையாளனாக எமக்கு கோபம் வரவைப்பதில் மீதித் திரைப்படத்தையும் கச்சிதமாக நகர்த்தியிருக்கிறார் ஆஷ்கார் ஃபர்ஹாடி. 

ஒரு கட்டத்தில் அக்கணவன் மீது அவனது மனைவி, அயலவர்கள், ஏன் பார்வையாளர்களாகிய நாம் என அனைவரின் வெறுப்பும் ஒட்டுமொத்தமாக குவியும் போது, எம் அனைவரையும் முட்டாளாக்கி அக்கணவனின் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்கிறது திரைக்கதை முடிவு. 

மாடிக் குடியிருப்பில் ஒரு வீடு, ஒரு நாடக மேடை, இன்னுமொரு வெற்று வீடு இவை மூன்றிலுமே பெரும்பாலான கதை நகர்கிறது. அதிலும் அத்திரைப்படத்தின் கதாபாத்திரங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.  ஆனால் அவர்கள் ஒவ்வொருவரினதும் நடிப்பு, அக்கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். 

ஒரு மாதத்திற்குள் அனைத்து படப்பிடிப்பையும் முடித்துவிட்டிருப்பார்கள் என நம்பக் கூடிய அளவு அவ்வளவு எளிதான கதைக் களம். ஆனால் கதை தான் ஹீரோ, கதை தான் வில்லன்.  ஈரானிய சினிமா இன்னமும் யதார்த்த சினிமா உலகில்  நன்றாகவே ஜொலித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு The Salesman இன்னுமொரு நல்ல உதாரணம்.

The Salesman Trailer : 

 

 - 4தமிழ்மீடியாவுக்காக ஸாரா

 

 

 

நடிகர் சிம்புவுக்குத் திருமணம் எனும் செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து, பல இடங்களிலம் இது தொடர்பான பேச்சுக்கள்  இடம்பெற்று வருகின்றன. சிம்புவின் குடும்பத்தினர் வரையும் இந்தச் செய்திகள் சென்று சேர்ந்துள்ளன. 

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

எமது அன்றாட சிக்கன போக்குவரத்து தேவைகளுக்கு பெரிதும் கைகொடுத்து உதவுவது மிதிவண்டிகள்.

இன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமாகி, ‘ஹரிதாஸ்’ படத்தில் நடிப்பின் உச்சம் தொட்டு நின்ற எதார்த்தக் கலைஞன் நடிகர் கிஷோர்.

சென்ற 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட ஆர்யா&சயீஷா காதல் ஜோடியின் திருமண நிகழ்வின் உத்தியோகபூர்வ வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது.