உலகம்
Typography

இன்றைய சூழ்நிலையில் உள்ளது போன்று போதிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் 2050 ஆம் ஆண்டில் மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் சேர்ந்து விடும் எனப் புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

பிளாஸ்டிக் பாவனைப் பொருட்கள் மக்கும் தன்மை மிக மிகக் குறைவு என்பதால் அவை கடலில் சேர்க்கப் படும் போது மனித இனத்துக்கு மட்டுமன்றி கடலில் வாழும் மீன்கள் போன்ற பிற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கும் தன்மை உடையவை ஆகும். அதிலும் சமீப காலமாகப் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

1964 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வரும் பிளாஸ்டிக் பாவனைப் பொருட்கள் 2014 ஆம் ஆண்டு 311 மில்லியன் டன்களாக ஆகிவிட்டதாகக் கணிப்பு ஒன்று கூறுகின்றது. எனவே மறுசுழற்சி முறையில் அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதே இப்பிரச்சினைக்கு உகந்த உடனடித் தீர்வு என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அண்மையில் இங்கிலாந்தின் தவோஸ் நகரில் பிளாஸ்டிக் கழிவுகளை அதிகபட்சம் மீள் சுழற்சிக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்தியா உட்பட உலகின் முன்னணி தொழிற்சாலைகளின் தொழிலதிபர்கள் கிட்டத்தட்ட 40 பேர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் முக்கியமாக தற்போது 14% வீதமாக உள்ள பிளாஸ்டிக் கழிவுகளின் மறு சுழற்சியை 70% வீதமாக அதிகரிப்பதற்கு ஏற்ற திட்டங்கள் மும்மொழியப் பட்டு அவை குறித்து விவாதிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்