திரைவிமர்சனம்

பெண்ணெனப்படுவது பேரின்பம் எனவும், பெண்ணெனப்படுவது பெருந்துன்பம் எனவும், இருவேறு கருத்துக்களால் பிளவு பட்டுக்கிடக்கிறது உலகம்.

தாய், தாரம், மகள் என்று ஆண்களின் வாழ்வின் அசைக்க முடியாத ஆதாரமாக இருக்கும் பெண்ணை, அதே ஆண் சமூகம் எப்படியெல்லாம் கவலை கொள்ள வைக்கிறது? அட... சே...த்தூ... என்று காறி உமிழ்ந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். (எச்சில் பட்ட ஆண்களெல்லாம் துடைப்பதும் குளிப்பதும் அவரவர் விருப்பம்) ஜனங்க இதைதான் ரசிப்பாங்க என்று ஸோ கால்டு படைப்பாளிகள் ஒருபக்கம் விருந்து வைத்துக் கொண்டிருக்க, இதையும்தான் ரசிப்பாங்க என்று இவர் வேறொரு பக்கம் இலை போடுகிறார். இதை துணிச்சல் என்பதா? அசட்டு துணிச்சல் என்பதா? (ஒருவாரம் பொறுத்திருந்தா உண்மை தெரிஞ்சுட்டு போவுது?)

எஸ்.ஜே.சூர்யா, படத்திலும் ஒரு சினிமா டைரக்டராகவே வருகிறார். இவரது தம்பி பாபி சிம்ஹா. இவரும் விஜய் சேதுபதியும் பிரண்ட்ஸ். தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் இவரது படம் ரிலீஸ் செய்யப்படாமல் முடக்கப்படுகிறது. அதனால் முழு நேர குடிகாரர் ஆகிவிடுகிறார் எஸ்.ஜே.சூ. படத்தை ரிலீஸ் செய்யக் கேட்டு சண்டை போடும் இவரை கொலை செய்யவும் துணிகிறார் அந்த தயாரிப்பாளர். கோபம் தலைக்கேறும் விஜய் சேதுபதி, அந்த தயாரிப்பாளரை ஸ்பாட்டிலேயே போட்டுத்தள்ள, இளம் மனைவி அஞ்சலியை நிர்கதியாக விட்டுவிட்டு சிறைக்குப் போகிறார் அவர். நடுவில் விஜய்சேதுபதிக்கு ஒரு இளம் விதவையுடன் கள்ளக்காதல். (பெண் என்பவள், விதவையானாலும் செக்ஸ்சுக்காக இன்னொருவனுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் தவறில்லை என்கிறது இந்த எபிசோட்) எஸ்.ஜே.சூர்யாவுக்கும் மனைவி கமலினி முகர்ஜிக்கும் ஏற்படும் ஓயா சண்டையால், விவகாரத்து வரை போகிறது அந்த ஜோடி. குடும்பத்தின் மூத்தவரான ராதாரவியும், மனைவியிடம் நடந்து கொள்ளும் விதத்தால் அந்தம்மா வடிவுக்கரசியும் படுத்த படுக்கையில்!

இப்படி எல்லாவகையிலும் ஆண்களால் அவஸ்தைப்படும் பெண், என்ன செய்ய வேண்டும்? ஒரு சிறுகதையின் கடைசி வரி போல படத்தை ஃபினிஷ் பண்ணுகிறார் கார்த்திக் சுப்புராஜ். “அடேய்... ஆணென்ற திமிரில் அலையும் பொட்டைப்பசங்களா? இறைவிகளை போற்றுங்கடா” என்பதுதான் அவரது திட்டவட்ட கையெழுத்து!

குறும்படங்களின் மூலம் வண்ணத்திரைக்குள் என்ட்ரி கொடுத்த கார்த்திக் சுப்புராஜ், கிட்டதட்ட இரண்டேமுக்கால் மணி நேரம் நீள நீள ஒரு படத்தை எடுத்திருப்பதே முரண்தான்! அவரது முந்தைய ஜிகிர்தண்டாவின் நீளமும் கிட்டதட்ட இதுவே. முதலில் சுருங்க சொல்லி விளங்க வைக்கிற வித்தையை பழகுங்க சுப்பு! முடியல...

எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா, விஜய் சேதுபதி என மூன்று ஹீரோக்கள் இருந்தாலும், படம் முழுக்க நீக்கமற நிறைந்திருப்பது எஸ்.ஜே.சூர்யாதான். பிரமாதப்படுத்தியிருக்கிறார் அவரும். மனைவி குழந்தை மீது தீரா அன்பு கொண்ட ஒரு குடிகாரனின் அத்தனை சேட்டைகளையும், தொல்லைகளையும் அப்படியே திரையில் இறக்கி வைத்திருக்கிறது அவரது தேர்ந்த நடிப்பு. அடிக்கடி இளையராஜா பாடலை ரசிப்பதுடன், ராஜா ராஜாதாண்டா என்று கமென்ட் அடிக்கும்போது, “போன படத்திற்கான பிராயசித்தமா வாத்யாரே?” என்று கேட்க வைக்கிறார்.

தடித்த கண்ணாடி, அடர்ந்த தாடி, அதையும் மீறிய யதார்த்த நடிப்பு என்று மிரள வைக்கிறார் விஜய்சேதுபதி. குற்றவுணர்ச்சியுடன் அவர் அஞ்சலியை அணுகுவதும்,  அங்கிள் என்று அழைக்கும் தன் குழந்தையை வேதனையோடு கொஞ்சுவதுமாக அள்ளுகிறது அவர் நடிப்பு. ‘இந்தாளு ஏன்யா ட்ரெயினை விட்டு எறங்குறான்?’ என்று வாய்விட்டு ஏச வைக்கிறது அந்த ப்ரீ கிளைமாக்ஸ்.

பாபி சிம்ஹாவை டிபிக்கல் வில்லனாகவே சித்தரித்திருக்கிறார் டைரக்டர். திடீர் காதலுக்காக நட்பை காவு கொடுக்க துணியும் இதுபோன்ற கேரக்டர்களுக்கு வர வேண்டிய முடிவுதான் அது. சரியா சொன்னீங்க கார்த்திக் சுப்புராஜ்.

முதல் காட்சியில் பள்ளிக்கூட யூனிபார்மில் கையை அப்படியே வெளியில் நீட்டி மழையில் நனையும் அதே அஞ்சலி, இறுதிக்காட்சியில் அதே சுதந்திரத்துடன் மழையில் நனைவதோடு படம் முடிய.... “அஞ்சலி என்ற அல்டிமேட் நடிகையை என்னாத்துக்கு கவர்ச்சி பொம்மையாகக் காட்டி அவரது திறமையை வீணடிச்சானுங்க” என்ற கோபமே வந்துவிடுகிறது அவரை வைத்து (கவர்ச்சிப்)படம் எடுத்த முந்தைய இயக்குனர்கள் மீது.

இனிக்க இனிக்க அல்வா செய்து, அதை திறக்கவே முடியாத டிபன் பாக்சில் அடைத்த மாதிரி என்னவோ ஒன்றால் அமுக்கி வைத்த உணர்வை தருகிறது செல்வகுமார் விஜயனின் ஒளிப்பதிவு. ஆனாலும் படம் நெடுகிலும் ஆங்காங்கே வந்துவிட்டு போகும் அந்த மழைக்காட்சி அழகு!

சந்தோஷ் நாராயணனே பாடும் அந்த குத்து பாடலின் ட்யூனும் குரலும் நடன அமைப்பும் அழகு! பின்னணி இசையில்தான் வசனங்களை கேட்க முடியாதளவுக்கு சங்கு ஊதுகிறார்.

ஒரு படம் ஆரம்பிக்கிற இடத்தை தெரிந்து வைத்திருந்தாலும், முடிக்கிற இடத்தில் குழம்பியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ‘இந்த இடத்தில் படம் முடிந்திருக்கலாம்...’ என்று ரசிகன் நினைத்திருக்க, அதை  கொஞ்சம் தள்ளிப்போட்டால் என்னாகும்? கொலை விழுகிறது!

படத்தில் மட்டுமல்ல.... படத்திற்கே!

-ஆர்.எஸ்.அந்தணன்

விஜய்சேதுபாதியின் பெயர் சொல்லும் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விவாதிக்கத் தொடங்கியிருக்கும் படம 'க/பெ ரணசிங்கம்'. விருமாண்டி இயக்கத்தில் கிராமியப் பொருளாதாரத்தை நசுக்கும் கார்ப்பரேட்டுகளை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்னர்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

இந்தியாவில், இன்று கொரானா, தொற்று நோயை விட முக்கிய தலைப்புச் செய்தியாக மாறியிருப்பது புலம் பெயர் தொழிலாளர்கள். நான்காவது ஊரடங்கு நடந்து கொண்டிருக்கும் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் உச்சக்கட்ட அரசியலாக மாற்றப்பட்டுள்ளது.

ஹாய் : அலுவலக நண்பரிடமிருந்து வாட்ஸ்அப்

எப்படி இருக்கீங்க? : மீண்டும்

இரண்டு சரி அடையாளங்கள் அவருக்கு தெரிந்திருக்கும் நீலமாக! 

...

அடுத்த நாள்

இவரிடமிருந்து : ஹாய்!

மீண்டும் : நல்லா இருக்கேன். நீங்க எப்படி?

 

சிறிது நேரத்திற்கு பின்

நலம் : நண்பரிடமிருந்து

ஏன் இன்னும் வேலைக்கு வரல்ல? : மீண்டும்

நீல நிற சரி அடையாளங்கள்

...


சிறிது நேர சிந்தனைக்குப்பின்

சாதாரண குறுந்தகவல்களுக்குள் ஏற்கனவே வந்திருந்த அலுவலக குறுந்தகவலை காண்கிறான்!

"மறு அறிவித்தல் வரும் வரை உங்கள் பணியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம்"

...

அலுவலக நட்பின் வாட்ஸ்அப் குழு

அவர்களில் ஒருவர் :

ஹாய்

ஒரு வழியா இரண்டு மாசம் கழித்து உங்கள எல்லாம் பார்த்துட்டேன்.

அவர்களில் வேறு ஒருவர் : ஆமா ஒருத்தனத்தான் பார்க்க முடியல

ஆமா ஏன் இன்னும் அவன் வரல்ல..?

எப்ப வறீங்க? பாஸ் : அடுத்தடுத்து அவர்களிடமிருந்து

நீல நிற சரி அடையாளங்கள்

...


அலுவலக குறுந்தகவலை மறுபடியும் பார்க்கிறான்..

நீளமான கோட்டின் அடையாளம் இங்கே இவனது மனதில்..

.

யதார்த்தமாக சொல்லப்பட்ட இக்கற்பனை கதையின் படி இன்று பலரின் பணி நிலைமை இதுதான். இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை. 

4தமிழ்மீடியாவிற்காக ஹரிணி

இதையும் பாருங்கள் :

தெருக்களில் அலையும் தேசத்தின் புதல்வர்கள் - தமிழகத்தின் தலைப்புச் செய்தி !

 

விஜய்சேதுபதி சமூகத்தின் மீது அதிக காதல் கொண்ட படைப்பாளி. அதனால் தான், அரசுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனது படங்களில் சில வசனங்களைப் பேசினாலும் சிந்திக்கிறது மாதிரி பேசுகிறார். அதற்கு தற்போது எடுத்துக்காட்டாக வந்திருக்கிறது க/பெ.ரணசிங்கம் காணொளி முன்னோட்டம்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.