திரைவிமர்சனம்

 ‘சத்தமில்லாம சாவணும்... செத்த பின்னாலும் வாழணும்!’ இதற்கு என்ன வழி? ஒரு மனுஷன் ஆயிரம் வருஷத்துக்கு வாழ முடியுமா?

அம்புலிமாமாவில் விழுந்து, காமிக்ஸ் கதைகளில் புரண்டு, ரத்தம் நரம்பு சதை மூளை எல்லாவற்றிலும் ‘யுனிக்’காக யோசிக்கும் ஒருவரால்தான் இப்படியொரு கதையை உருவாக்க முடியும். யோசித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சி.வி.குமார். (எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரியிருக்குல்ல? இவர்தான் பீட்சா, சூதுகவ்வும் மாதிரியான ட்ரென்ட் செட்டர் படங்களை தயாரித்தவர். அப்படின்னா சரி.)

ஒரு குற்றவாளியை துரத்திக் கொண்டு ஓடும் இன்ஸ்பெக்டர் சந்தீப் கிஷன், நடுவில் ஒரு கொலையை கண்ணெதிரே பார்க்கிறார். இவனை விட்டுவிட்டு அவனை துரத்துகிறார். அதற்கப்புறம் அதே ஸ்டைலில் வேறு வேறு கொலைகளை காண நேரிடுகிறது அவரால். கொலையாளி ஒருவன்தானா, அல்லது வேறு வேறு ஆசாமியா? என்று தேடக்கிளம்புகிறவருக்கு தினுசு தினுசாக தலைசுற்றல் வருகிறது. ஏன்? பின்னணி அவ்வளவு மண்டை குடைச்சலான சமாச்சாரம். கடைசியில் மூலக்காரணத்தை கண்டு மூக்கு மேலேயே போடுவதுதான் முடிவு.

சந்தீப்கிஷன் வழக்கம் போல ஸ்மார்ட். ஒரு கண்டிப்பான இன்ஸ்பெக்டரிடம் ‘உன் மனசுல பயம் இருக்கு’ என்று ஒரு டாக்டர் சொன்னால் என்னாவார்? அந்த அதிர்ச்சியை உள்வாங்கி கோபமாக கொப்பளிக்கும் போதெல்லாம் பிரமாதப்படுத்துகிறார். நிறைய ஓடி நிறைய உருண்டு புரண்டு உயிரை கொடுத்து நடித்திருக்கிறார். உங்க ஒட்டு மீசைய மட்டும் உருவி எறிஞ்சுருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்குமில்ல?

ஹீரோயின் லாவண்யா திரிபாதி. மேக்கப்புக்கு அடங்கிய அழகு, அதே மேக்கப்பை மீறாத நடிப்பு என்று அளந்து ஊற்றிய அரை கப் தோசையாக இருக்கிறார்.

தன்னம்பிக்கை வகுப்பு எடுப்பவராக டேனியல் பாலாஜி. சும்மாவே சந்தேக வளையத்தில் சிக்குகிற பேஸ்கட்டு. விடுவாரா இன்ஸ்? விரட்டி விரட்டி சந்தேகப்படுகிறார். கடைசியில் சந்தேகப்பட்டது சரியாச்போச்சு. அவரை மடக்கிக் கொண்டுபோய் லாக்கப்பில் தள்ளினால், அங்கு முளைக்கிறது இன்னொரு ட்விஸ்ட். நடுவில் குற்றவாளியை தேடிக்கிளம்பும் பயணம் எல்லாமே ட்விஸ்ட்டுகளால் வேகப்படுவதுதான் சிறப்பு.

சில காட்சிகள்தான் வருகிறார் ஜாக்கி ஷெராப். ஆஜானுபாகுவான தோற்றம். அலற வைக்கும் லுக். கிடைத்த கொஞ்ச நேரத்தில் முரட்டுத்தனத்தால் முன்னேறுகிறார் ஜாக்கி.

மிகவும் சிக்கலாக புரிந்து கொள்ள வேண்டிய கதை. அதை சிரமமில்லாமல் ஊட்டுகிறது நலன் குமாரசாமியின் டயலாக்! திரைக்கதையும் இவரே. முத்திரை பளிச்சென தெரிகிறது.

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு சட்டையை பிடித்து படத்திற்குள் இழுத்துக் கொள்கிறது.

இசை ஜிப்ரான். பாடல்களுக்கு அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. நம்ம ஏரியா பேக்ரவுண்ட் மியூசிக்தான் என்று முடிவு கட்டிக் கொண்டு உட்கார்ந்தார் போலும். பிரமாதம்ங்க!

படம் முடிந்தபின் யாரெல்லாம் ஆயிரம் வருஷ ஆசையோடு வாழ்கிறார்கள்? அதற்காக கோடி கோடியாக கொட்டுகிறார்கள் என்கிற நிஜ விபரத்தை ஓட விடுகிறார்கள். மனுஷன் ஆசையப் பாருங்கடே....?!

மாயவன்- நிறைமாத மின்னல்!

-ஆர்.எஸ்.அந்தணன்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, உப்புக்கருவாடு உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும்! " எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.

உலகிலேயே மிக சிக்கலான மற்றும் மிகப் பெரும் எந்திரம் அல்லது கருவி ஜெனீவாவில் அமைந்துள்ள LHC எனப்படும் 27 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட நிலக்கீழ் துகள் முடுக்கி கருவி (Particle accelerator) ஆகும்.

சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி ஓரளவுக்கு வசூலும் செய்த படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார்.

ஊரடங்கு நீடித்திருக்கும் நிலையில் யோசுவா ஆரோன் எனும் யூடியூப் இசைப் பிரபலம் சூப்பர் சிங்கர் பாடகர்களை ஒருகிணைத்து