மொத்த வாத்தியமும் முழங்கினாலும், ஒத்த வாத்தியமா ஒசந்து நிக்குமே... தப்பட்டை, அப்படி நிற்கிறார் நயன்தாரா!

Read more: கோலமாவு கோகிலா / விமர்சனம்

சமயங்களில், பூட்டிய அறைக்குள் இருப்பது கன்னுக்குட்டி என்று நினைத்திருப்போம். கதவை திறந்தால் காட்டு யானை பிளிரும்! அப்படியொரு முரட்டுப்படம்தான் ம.பா.ம.எ! துருவா, ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா, சரண்யா பொன்வண்ணன் என்று சல்லி விலையில் கிடைக்கும் திருவிழா ரிப்பன்கள்தான்  இப்படத்தின் தாம்பு கயிறுகள். பார்த்தால்... தியேட்டரை விட்டு எழுந்து ஓட விடாமல் இறுக்கிக் கட்டுகிறார்கள். ஆஹா...!

Read more: மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன / விமர்சனம்

ரஜினிகாந்த் தேறுவாரா என்று நாடே விவாதித்துக் கொண்டிருக்கும் போது, கஜினிகாந்த் தேறுவாரா என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். ஏன்? இரத்தப் பொரியலிலிருந்து வத்தக்குழம்புக்கு மாறியிருக்கிறார் இப்படத்தின் டைரக்டர் சன்தோஷ் பி.ஜெயக்குமார். (ச-வுக்கு பக்கத்தில் வரும் ன்-ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்ல) இவரது அளவுகடந்த ஆபாசப்படங்கள் வசூல் பண்ணியதில் பாதியையாவது இப்படம் வசூல் பண்ணுமா? அந்தக் கவலை நமக்கெதற்கு? கஜினியை பொருத்தவரை கலகலப்பு!

Read more: கஜினிகாந்த் / விமர்சனம்

சிங்கிளா வந்தால்தான் சிங்கம்னு இல்ல. கூட்டமா வந்தாலும் சிங்கம்தான் என்று நிரூபித்திருக்கிறான் கடைக்குட்டி! பெரிய குடும்பத்தின் கதைகளை, காது விரிய விரிய... கண்கள் எரிய எரிய... சொன்ன படங்களுக்கு மத்தியில், கடைக்குட்டியின் கர்ஜனை.... சுகமான தாலாட்டு!

Read more: கடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்

ஒட்டு போட்ட ஓவர் கோட், பனிரெண்டு கலர்களிலும் பல் இளிக்கிறது! பின்னே என்னவாம்? முந்தைய படத்தில் கழித்ததையெல்லாம் இந்தப்படத்தில் கொட்டிக் குமித்தால், பளபளப்பில்லாத பார்ட் 2 ரெடி! ஏரியல் ஷாட் இல்லாத லண்டன், எக்குதப்பான சி.ஜி காட்சிகள் என கமல்ஹாசனின் பர்பெக்ஷனில் கண்டமேனிக்கு சறுக்கல்!

Read more: விஸ்வரூபம்2 / விமர்சனம்

வீரம் ப்ளஸ் முட்டாள்தனம் ஈக்குவல் டூ மோடுமுட்டி! ஒரு மோடு முட்டியை பொள்ளாச்சியிலிருந்து மூட்டை கட்டிக் கொண்டு வந்து சென்னையிலும், பாரீசிலும் விட்டால் என்னாகும்? அப்படியே அந்த கற்பனையில் லைட்டா காதலையும் புழிஞ்சா, கண் மயக்கும், மனம் மயக்கும் ஜுங்கா ரெடி! அட... ஜுங்கான்னா என்னப்பா? படத்தை பாருங்கப்பா... பங்கம் பண்ணியிருக்கானுங்க! (மரியாதை...மரியாதை)

Read more: ஜுங்கா / விமர்சனம்

‘நெஞ்சில் நின்றவை’களையெல்லாம் மறுபடியும் தேடி, கண் முன்னே வைத்து ‘கலவரம்’ பண்ணியிருக்கிறார் சி.எஸ்.அமுதன். கிண்டல் இல்லாத வாழ்வு, சுண்டல் இல்லாத படையலுக்கு ஒப்பானதல்லவா? சிரிக்கிறது தியேட்டர். “அட இதுக்கெல்லாமா சிரிக்கறது... உங்களுக்கெல்லாம் மரை கழண்டு போச்சா?” என்று ஆங்காங்கே எரிச்சல் பட்டாலும், இந்த ‘ஸ்பூப்’ ஆஃப் பண்ணுகிறது நம் கவலைகளை!

Read more: தமிழ் படம் 2 / விமர்சனம்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்