கதைக்காக உயிரையும் கொடுப்பார்... கதை கேட்காமல் நடித்து உயிரையும் எடுப்பார்... என்று இருவேறு பிம்பங்கள் உண்டு விக்ரமுக்கு! இதில் ‘ஸ்கெட்ச் ’ எவ்வகை என்பவர்களுக்கு, கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு குங்குமத்தின் கலரை ஆராய்ந்த எபெக்ட்தான் வாய்க்கும்.
திரைவிமர்சனம்
விதி மதி உல்டா - விமர்சனம்
கண் விழித்தாலும் கலைந்து போகாத கனவுகளுக்கு ஒரு ஸ்பெஷல் நோட் போட்டால் அதுதான் ‘விதி மதி உல்டா’! தலைப்பில் மட்டும் உப்புமா படத்தின் ஷேட். நிஜத்தில்? நிமிஷத்துக்கு நிமிஷம் ‘அட’ போட வைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விஜய் பாலாஜி!
மாயவன் விமர்சனம்!
‘சத்தமில்லாம சாவணும்... செத்த பின்னாலும் வாழணும்!’ இதற்கு என்ன வழி? ஒரு மனுஷன் ஆயிரம் வருஷத்துக்கு வாழ முடியுமா?
அருவி / விமர்சனம்
சாக்கு பையில் சுருட்டி சாக்கடையில் எறிய வேண்டிய கதைகளே ‘கவுரவ மைனர்களாக’ நடமாடுகிற கோடம்பாக்கத்தில், ஒரு மாற்று சினிமாவின் மகோன்னதம்தான் ‘அருவி’. தமிழ் சினிமாவின் அபத்தங்களை எதைக் கொண்டு அடிப்பது? எதைக் கொண்டு கழுவுவது? என்றெல்லாம் கவலைப்படுகிற அத்தனை பேருக்கும் சேர்த்து ஒரு கிளி, தன் அழகிய மூக்கால் சீட்டெடுத்தால், அடடா அழகே... இந்த ‘அருவி’யின் படமல்லவா வருகிறது?
வேலைக்காரன் / விமர்சனம்
பாக்கெட்டில் அடைத்து விற்கப்படுவதெல்லாம் பண்டமில்லை, உயிரோடு இருக்கும்போதே உனக்கு வைக்கப்படும் ‘பிண்டம்’! மீண்டும் நினைத்தால் கூட ஷாக் அடிக்க வைக்கும் இந்தக் கருத்துதான் வேலைக்காரன். உணவு அரசியலின் உச்சந்தலையை பிடித்து உலுக்கி உலுக்கி சொல்லியிருக்கிறார் மோகன்ராஜா. இப்படியொரு கதையை மனசார வாங்கி, உளமாற கொடுத்த சிவகார்த்தியேனுக்கு அடிஷனல் அப்ளாஸ்!
பள்ளிப்பருவத்திலே / விமர்சனம்
‘கருப்பாக இருப்பதெல்லாம் எருமையும் இல்லை. கலராக இருப்பதெல்லாம் அருமையுமில்லை’. இதன் தொடர்ச்சியாக, ‘பள்ளிக்கூடக் காதலெல்லாம் காதலுமில்லை’ என்று முடித்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் இந்தப்படம் சொல்லும் காதலும், வயசும், அது தருகிற அவஸ்தையும், ‘போங்கடா நீங்களும் உங்க பச்சப்புள்ள காதலும்’ என்றுதான் புலம்ப வைக்கிறது.
அறம் / விமர்சனம்
வறுமைக்கு தாலி கட்டிய கிராமம். பக்கத்திலேயே வான் வெளியை கிழிக்கிற ராக்கெட் தளம்!