ஒட்டு போட்ட ஓவர் கோட், பனிரெண்டு கலர்களிலும் பல் இளிக்கிறது! பின்னே என்னவாம்? முந்தைய படத்தில் கழித்ததையெல்லாம் இந்தப்படத்தில் கொட்டிக் குமித்தால், பளபளப்பில்லாத பார்ட் 2 ரெடி! ஏரியல் ஷாட் இல்லாத லண்டன், எக்குதப்பான சி.ஜி காட்சிகள் என கமல்ஹாசனின் பர்பெக்ஷனில் கண்டமேனிக்கு சறுக்கல்!
திரைவிமர்சனம்
கஜினிகாந்த் / விமர்சனம்
ரஜினிகாந்த் தேறுவாரா என்று நாடே விவாதித்துக் கொண்டிருக்கும் போது, கஜினிகாந்த் தேறுவாரா என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது கோடம்பாக்கம். ஏன்? இரத்தப் பொரியலிலிருந்து வத்தக்குழம்புக்கு மாறியிருக்கிறார் இப்படத்தின் டைரக்டர் சன்தோஷ் பி.ஜெயக்குமார். (ச-வுக்கு பக்கத்தில் வரும் ன்-ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்ல) இவரது அளவுகடந்த ஆபாசப்படங்கள் வசூல் பண்ணியதில் பாதியையாவது இப்படம் வசூல் பண்ணுமா? அந்தக் கவலை நமக்கெதற்கு? கஜினியை பொருத்தவரை கலகலப்பு!
கடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்
சிங்கிளா வந்தால்தான் சிங்கம்னு இல்ல. கூட்டமா வந்தாலும் சிங்கம்தான் என்று நிரூபித்திருக்கிறான் கடைக்குட்டி! பெரிய குடும்பத்தின் கதைகளை, காது விரிய விரிய... கண்கள் எரிய எரிய... சொன்ன படங்களுக்கு மத்தியில், கடைக்குட்டியின் கர்ஜனை.... சுகமான தாலாட்டு!
மிஸ்டர் சந்திரமவுலி / விமர்சனம்
நவரச நாயகன், பழ(ய)ரச நாயகன் ஆன பின்பும் கூட நம்மால் மறக்க முடியாத காட்சி, “மிஸ்டர் சந்திரமவுலி மிஸ்டர் சந்திரமவுலி” என்று அவர் அழைக்கும் அந்த காட்சிதான். இன்னும் எத்தனை வருஷங்கள் ஆனாலும், அந்த காட்சியை புதுப்பித்து புதுப்பித்து கொடுக்கதான் தொலைக்காட்சிகள் இருக்கின்றனவே! அந்த நம்பிக்கையில் இப்படியொரு தலைப்பை வைத்த படக்குழு, மறக்காமல் நவரச நாயகனையும், அவரது லவகுசா மகனையும் படத்திலும் அப்பா மகனாகவே நடிக்க வைத்திருப்பது சாலப் பொருத்தம்தான்!
ஜுங்கா / விமர்சனம்
வீரம் ப்ளஸ் முட்டாள்தனம் ஈக்குவல் டூ மோடுமுட்டி! ஒரு மோடு முட்டியை பொள்ளாச்சியிலிருந்து மூட்டை கட்டிக் கொண்டு வந்து சென்னையிலும், பாரீசிலும் விட்டால் என்னாகும்? அப்படியே அந்த கற்பனையில் லைட்டா காதலையும் புழிஞ்சா, கண் மயக்கும், மனம் மயக்கும் ஜுங்கா ரெடி! அட... ஜுங்கான்னா என்னப்பா? படத்தை பாருங்கப்பா... பங்கம் பண்ணியிருக்கானுங்க! (மரியாதை...மரியாதை)
தமிழ் படம் 2 / விமர்சனம்
‘நெஞ்சில் நின்றவை’களையெல்லாம் மறுபடியும் தேடி, கண் முன்னே வைத்து ‘கலவரம்’ பண்ணியிருக்கிறார் சி.எஸ்.அமுதன். கிண்டல் இல்லாத வாழ்வு, சுண்டல் இல்லாத படையலுக்கு ஒப்பானதல்லவா? சிரிக்கிறது தியேட்டர். “அட இதுக்கெல்லாமா சிரிக்கறது... உங்களுக்கெல்லாம் மரை கழண்டு போச்சா?” என்று ஆங்காங்கே எரிச்சல் பட்டாலும், இந்த ‘ஸ்பூப்’ ஆஃப் பண்ணுகிறது நம் கவலைகளை!
டிக் டிக் டிக் / விமர்சனம்
மிருதன் புகழ்(?) சக்தி சவுந்தர்ராஜனின் மூன்றாவது படம். ஸ்பேஸ் பற்றிய கதையை சில பல ஆங்கில படங்களிலிருந்து அபேஸ் பண்ணி ‘அடித்த’ படம்தான் டிக்டிக்டிக்! ‘அடிச்சதுதான் அடிச்சீங்க.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.