Saturday, May 25th

Last update09:37:50 AM

இசைக்கு ஒரு இனிய களம்!

சுவிற்சர்லாந்தின் 'தூரிகை' அமைப்பு நடத்தும் 'சூப்பர் சிங்கர் 2013' இசைத் தெரிவுப் போட்டிக்கான ஊடக அனுசரணையை

4தமிழ்மீடியா வழங்கவுள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். இந்த (2012) ஆண்டு நடந்த இப் போட்டியில் பல இளம் திறமையாளர்கள், தங்கள் சிறப்பான தகமையினை வெளிப்படுத்தியிருந்தார்கள். இப் போட்டியில் சிறந்த பாடகராக வெற்றி பெற்ற மிருதுளா சிவானந்தராஜா தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் தீனாவின் இசையமைப்பில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகவுள்ளார்.

எதிர்வரும் 2013ல் மேலும் சிறப்பாகவும், ஐரோப்பிய ரீதியில் பல போட்டியாளர்களையும் இணைத்துக் கொள்ளும் வகையில் இப் போட்டியினை நடத்துவதற்குத் தூரிகை நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புலம்பெயர் சூழலில் வாழும் இளங்கலைஞர்களின் திறமைக்கு நல்லதொரு வாய்ப்பாகவும், களமாகவும், அமைந்துள்ள இப் போட்டி நிகழ்ச்சியின் பதிவு, வெளிப்பாடு, தொடர்பாடல்களில், 4தமிழ்மீடிய, 'படைப்பாய்வகம்' செயற்திட்டத்தின் வழி பங்கு கொள்கிறது.

இப் போட்டிக்கான தெரிவுப் போட்டிகள், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20 மற்றும் 21ந் திகதிகளில் சுவிற்சர்லாந்தில் நடைபெறவுள்ளது. தென்னிந்தியப் பிரபல பின்னணிப் பாடகர் நடுவராகக் கலந்து கொள்ளும் இந்த இசைத் தெரிவுப் போட்டியில், ஐரோப்பாவிலுள்ள இசையார்வம் மிக்கத் தமிழர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் இந்தப் போட்டி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சுவிற்சர்லாந்து தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்கள், தெரிவுப் போட்டிகளின் போது வீடியோப் பதிவுகள் மூலமும் கலந்து கொள்ளலாம் என அறியத்தரப்பட்டிருக்கும் இப் போட்டிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி 01.10.2012. இப் போட்டிக்குப் பிரதான ஊடக அனுசரணையை வழங்கும் 4தமிழ்மீடியா இதற்கென ஆரம்பித்திருக்கும் பேஸ்புக் சமூகவலைத்தளப் பக்கத்தினை இங்கு காணலாம்.

போட்டி தொடர்பான மேலதிக விபரங்கள் அடங்கிய தூரிகையின் தளத்தினை இங்கு காணலாம்.

பிடித்திருக்கா? பகிருங்கள்!

கருத்துச் சொல்லுங்கள்!

comments powered by Disqus