Top Stories

Grid List

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவர் அரசியலமைப்புக்கு புறம்பாக நியமித்துள்ள ராஜபக்ஷ அரசாங்கத்தினரும் நாட்டு மக்களை நாளுக்கு நாள் பைத்தியக்காரர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களில் இரண்டு தடவைகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை 120க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதனை, அறிவித்து சபாநாயகர் கரு ஜயசூரிய எழுதிய கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. 

தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் தேர்ந்தெடுத்த ‘சமூக நீதி’க்கான இடர்நிறைந்த பாதையில் வெற்றிகரமாகப் பயணித்த கலைஞர் மு.கருணாநிதி, தான் மறைந்த பின்னும் போராட்டத்தின் வழியே தனக்கான உரிமையை மீட்டிருக்கின்றார். அதாவது, மெரீனா கடற்கரையில் அண்ணாவின் அரவணைப்பில் மீளாத்துயில் கொள்ள வேண்டும் என்கிற தன்னுடைய இறுதி ஆசைக்காக அவர் சட்டப் போராட்டம் நடத்தி வென்றிருக்கிறார். இப்போது, அவர் அண்ணாவின் அரவணைப்பில் அமைதியாக உறங்குவார். 

வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக பா.டெனீஸ்வரன் தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கான இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பித்திருக்கின்றது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்திருக்கின்றார்கள். 

Top Stories

Grid List

“எஸ்.ஜே.வி.செல்வநாயகம் முன்னெடுத்த தமிழர் போராட்டத்தின் இரண்டாம் கட்டத்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் முன்னெடுத்தார். அதன் மூன்றாவது கட்டத்தை தற்போது எம்.ஏ.சுமந்திரன் முன்னெடுக்கின்றார்.” என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அடிதடி- குழப்ப நிலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. 

“கொலைக்குற்றவாளி துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்க அவரின் அனுமதியுடன் கொழும்பு மாவட்டத்தில் கையெழுத்து சேர்க்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை போதையை ஒழிக்கும் அவரது கொள்கைக்கு முரணானதாகும்.” என்று ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். 

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, பிரித்தானியாவின் பொதுக் கட்டளைச் சட்டத்தை மீறி குற்றமிழைத்துள்ளார் என்று பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் மஜிஸ்ரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சென்னை லயோலா கல்லூரியில் நடத்தப் பட்டு வரும் கலை விழாவில் காட்சிப் படுத்தப் பட்டுள்ள ஓவியங்களில் சில தங்கள் மனதைப் புண்படுத்துவதாக அமைந்துள்ளதாக பாஜக போன்ற இந்து அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்ததற்கு கல்லூரி நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் ஞாயிற்றுக் கிழமை 1353 காளைகள் மற்றும் சுமார் 500 வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு அளித்திருப்பதாகத் தெரிய வருகிறது.

தனிநபர் உத்தரவாதம், பிணைத்தொகை உத்தரவாதம், என்பவற்றினூடு சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவருக்கு சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

ஈரானுக்கு எதிராக சிரியாவில் இஸ்ரேல் விமானப் படை ஏவுகணைகள் மூலமாக விடிய விடிய தீவிர தாக்குதலை தொடர்ச்சியாக நடத்தியுள்ளது.

2020 ஆமாண்டு நடைபெறவுள்ள அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளிப் பெண்மணியான கமலா ஹாரிஸ் என்பவர் போட்டியிடவுள்ளதாக உத்தியோகபூர்வத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தோனேசியாவின் மத்திய தீவுப் பகுதியான சும்பா அருகே இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் பீதியடைந்தனர்.

சிரியாவிலுள்ள ஈரானின் இராணுவ முகாம்களைக் குறி வைத்து திங்கட்கிழமை இஸ்ரேல் விமானப் படை நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Top Stories

Grid List

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி காலநிலை சீர்கேட்டினால் சமநிலையில் முடிந்தது. இதையடுத்து 2-1 என டெஸ்ட் தொடரை ஏற்கனவே கைப்பற்றியிருந்த இந்திய அணி, 71 வருடங்களில் முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் போட்டித் தொடரை வென்று சரித்திரம் படைத்துள்ளது.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான சிட்னி டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி கடுமையாக போராடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் புஜாரா, ரிஷாப் பாண்ட் சதங்களினால் 622 ஓட்டங்களை இந்தியா குவித்திருந்தது.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இன்று சிட்னியில் தொடங்கிய நான்காவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 303 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் மெர்பேர்னில் இடம்பெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

பிங்க் ரீமேக் ஷுட்டிங் இம்மாதம் 21 ந் தேதி ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் துவங்குகிறது.

தமிழ்நாட்டில் கோலாகலத்தை விடுங்கள்.

கனா சக்சஸ் மீட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்த கருத்துக்கு இன்டஸ்ட்ரியிலிருந்து எக்கச்சக்க எதிர்ப்பு.

2பாயின்ட்0 படத்தை தியேட்டருக்கு பார்க்கப் போயிருந்த ரஜினி பேமிலிக்கு நேர்ந்த சிக்கல் மீண்டும் வந்துவிடக் கூடாது என்று நினைத்திருக்கலாம்.

Him.Her.The Other (அவன், அவள், மற்றும் மற்றையவர்கள்), தமிழில் «மூவர்» எனும் பெயரிலும், சிங்கள மொழியில் «துந்தனெக்» எனும் பெயரிலும், இலங்கையின் மூன்று மிக முக்கிய / கொண்டாடப்படும் திரை இயக்குனர்களான பிரசன்ன விதானகே, விமுக்தி ஜயசுந்தர மற்றும் அசோக ஹந்தகம ஆகியோரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது.

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் தங்கச் சிறுத்தை விருதை (Golden Leopard), முதன் முறையாக சிங்கப்பூர் சினிமா திரைப்படம் ஒன்று தட்டிச் சென்றுள்ளது.  A LAND IMAGINED (கற்பனை நிலம்) எனும் திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் Yeo Siew இவ்விருதை வெற்றி கொண்டுள்ளார்.

இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவில், Cineasti del Presente எனப்படும் போட்டிப் பிரிவில் பார்த்த சில திரைப்படங்கள் அத்திரைப்பட இயக்குனர்களின் எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திச் சென்றிருக்கின்றன. 

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door பிரிவில் தொடர்ந்து மூன்று வருடமாக மையப்படுத்தப்பட்டு வந்த இந்தியா அல்லாத தெற்காசிய நாடுகளின் நலிந்த சினிமா பார்வை இவ்வருடத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

கட்டி சூடத்தை வாயில போட்டு, கையளவு நெருப்பையும் சேர்த்து விழுங்குன மாதிரி இருந்தது முந்தைய விவேகம்! எரிச்சலுக்கு மருந்து எப்பய்யா தருவே? என்று சிவாவை நச்சரித்தபடி காத்திருந்த அஜீத் ரசிகர்களுக்கு அடி வயிறு குளிர்ந்திருக்கும்! விஸ்வாசம், நுனி நாக்கில் விழுந்து அடி வயிற்றை கூலாக்கும் ஜில் வாட்டர்!

கயிறை தொலைத்த பம்பரம் போல கவலைக்குரிய நிலையிலிருந்த ரஜினியின் மார்க்கெட்டை உயிரை கொடுத்து மீட்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். கும்மிடிப்பூண்டி ரசிகனுக்கு மட்டுமல்ல, கோலாலம்பூர் ரசிகனுக்கும் பிடித்த ரஜினியை மெனக்கெட்டு இறக்குமதி செய்திருக்கும் கா.சு வுக்கு அகில உலக ரஜினி ரசிகர்கள் ஒன்று கூடி ஆலங்கட்டி மழையே தூவலாம்!

‘கடைக்குட்டி சிங்கம்’ கன்னாபின்னா ஹிட்! விடுவார்களா...? சிங்கத்தோடு ஒரு சிலுக்குவார்ப்பட்டியை இணைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

கொட்டாங்குச்சிக்கு பெயின்ட் அடிச்சு, அதை கோணி ஊசியில நிக்க வச்ச மாதிரி ஒரு கெட்டப்!

இன்று எஞ்சியிருக்கும் ஈழத்துச் சனத்துக்கு மரணம் என்ற ஒன்றைத் தவிர மீதி எல்லாவற்றையும் கண்டு கடந்திருக்கும். வயது வேறுபாடில்லாமல் எல்லோருக்குமே பொதுமையான அனுபவம் இது. போர் தின்ற அந்தச் சனங்கள் மரணத்தின் நுனி வரை போய் வந்திருக்கிறார்கள். அந்த வாழ்வியல் அனுபவங்கள் ஏறக்குறைய எல்லோருக்குமே வெவ்வேறான கால கட்டத்தில் நிகழ்ந்தேறியிருக்கின்றன. 

அமைதி நிலவும் இடத்தில் வளர்ச்சி தெரியும் என்பது ஆய்வாளர் கூற்று. அமைதி நிலவும் இடத்தில் ஆற்றல் பெருகும் என்பது ஆன்மீகக் கருதுநிலை.

குறு நிலங்களாகப் பிளவுபட்டிருந்த அம் மலைப்பிரதேசம், பல்வேறு ஆட்சியாளர்களால் பலகாலம் அடிமைப்பட்டுக் கிடந்தது. ஆஸ்திரிய மன்னனால், அடிமைப்பட்டுக்கிடந்த காலமதில், அரச அதிகாரியாகச் செயலாற்றிய ஜெஸ்லர், மலைவாழ் மக்களை மிகவும் கொடுமைப்படுத்தினான்.

“நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!” 

வருங்காலத்தில் நிலவில் மனிதர்கள் தங்கி விண்வெளி ஆய்வை முன்னெடுக்கும் வகையில் அங்கு குடியிருப்பு அமைக்க அமெரிக்காவும், சீனாவும் இணைந்து செயற்படவுள்ளன.

அண்மையில் சீனா நிலவின் மறுபுறமான பூமிக்குத் தென்படாத அதன் முதுகுப் பகுதியில் சென்று தரையிறங்குமாறு Change-4 என்ற செயற்கைக் கோளை வெற்றிகரமாக அனுப்பியிருந்தது.

அண்மையில் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வெல்ஸ், கனடா போன்ற இடங்களில் உள்ள நவீன ரேடியோ அலைத் தொலைக் காட்டிகளுக்கு சுமார் 150 கோடி ஒளியாண்டுத் தொலைவில் இருந்து கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணித்த மர்ம வானொலி அலைகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

கடந்த ஏப்பிரல் மாதம் விண்ணில் பூமிக்கு ஒப்பான கிரகங்களைக் கண்டு பிடிப்பதற்காக நாசாவால் விண்ணுக்குச் செலுத்தப் பட்ட TESS என்ற செயற்கைக் கோள் ஜனவரி 7 ஆம் திகதி நமது சூரிய மண்டலத்துக்கு மிக அண்மையில் சூரியனின் நிறையில் 0.68% வீத நிறையைக் கொண்ட HD 21749 என்ற சிவப்புக் குள்ளன் நட்சத்திரத்தை கண்டு பிடித்தது.

மேலும் மனமே வசப்படு : https://www.facebook.com/ManameVasappadu/

மேலும் மனமே வசப்படு :   https://www.facebook.com/ManameVasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu

இந்தியா

காணாமல் போன மாலத்தீவு கப்பலை இந்திய கடற்படை கப்பலும், விமானமும்
கண்டுபிடித்துள்ளன.

மாலத்தீவு நாட்டில் ஏராளமான தீவுகள் உள்ளன. ஒரு தீவில் இருந்து மற்றொரு
தீவுக்கு சரக்கு பொருட்கள், கனரக இயந்திரங்களை கொண்டுள்ள, 'லேண்டிங்
கிராப்ட்' ரக கப்பலை மாலத்தீவு ராணுவம் பயன்படுத்தி வருகிறது. 'மரியா 3'
என, பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பல் இரண்டு நாட்களுக்கு முன் காணாமல்
போனது. இந்த கப்பலை கண்டுபிடித்து தரும்படி, இந்திய கடற்படையிடம்
மாலத்தீவு ராணுவம் கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., கிரீச் கப்பலும்,
டார்னியர் ரக விமானமும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. தொழில்நுட்ப
கோளாறு காரணமாக நடுகடலில் தத்தளித்து கொண்டு இருந்த மாலத்தீவு
கப்பலையும், அதில் பயணித்த ஆறு பேரையும் இந்திய கடற்படை கப்பல்
கண்டுபிடித்து மீட்டுள்ளது. இந்த முயற்சியை மாலத்தீவுக்கான இந்திய தூதர்
அகிலேஷ் மிஸ்ரா பாராட்டியுள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS