இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெருவெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் முக்கிய மாற்றமொன்றை நாட்டில் ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்களுடனான இன்றைய சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.