Top Stories

Grid List

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கிறார். தென் இலங்கை வெற்றிக் கொண்டாட்டங்களில் திழைக்கிறது.

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் இருப்பது 12 மணித்தியாலங்களே. நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட பின்னர், நாடு எதிர்கொண்டிருக்கின்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இது. கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்கள் போலவே, இம்முறையும் ‘ராஜபக்ஷ(க்கள்) எதிர் இன்னொரு வேட்பாளர்’ என்கிற களமே விரிந்திருக்கின்றது. 

“...நாட்டில் யுத்தம் நீடித்த காலத்திலும், அதன் பின்னரான ராஜபக்ஷக்களின் ஆட்சிக் காலத்திலும் ஜனநாயக ஆட்சிமுறையின் கூறுகளை வடக்கு மக்கள் மாத்திரமல்ல, தென் இலங்கை மக்களும் உணர்ந்திருக்கவில்லை. அடக்குமுறையை ஆட்சிமுறையின் ஒரு அங்கமாகவே மக்கள் கருதினார்கள். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் ஜனநாயக ஆட்சிமுறையின் சில உண்மையான தன்மைகளை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனை இழப்பதற்கு யாரும் விரும்பவில்லை…” என்று குருநாகலைச் சேர்ந்த பட்டப்படிப்பு மாணவன் ஒருவன் தன்னிடம் கூறியதாக, ஜனாதிபதித் தேர்தல் குறித்த உரையாடலொன்றின் போது, வெளிநாட்டு வாழ் இலங்கைப் பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டார். 

முள்ளிவாய்க்கால் இன அழிப்புக் களத்தில் ஓடிய செங்குருதியின் நெடி பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட மூர்ச்சையடைய வைக்கிறது. 

Top Stories

Grid List

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உழைக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

“நாட்டின் ஊடக சுதந்திரத்திற்கு எனது ஆட்சிக் காலத்தின்போது எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது.” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தேர்வு செய்யும் ‘இஸட் ஸ்கோர்’ வெட்டுப்புள்ளி முறைமையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. 

கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியது உலக கிரிக்கெட் போட்டியை. அதே சமயம் பாகிஸ்தானியர்கள் தேடியது அபிந்தனை எனத் தெரிய வருகிறது.

நேற்று முன் தினம் இந்திய மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்தியக் குடியுரிமை திருத்த மசோதா, இன்று மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வலியுறுத்தியுள்ளார். 

இரண்டாயிரம் ரூபாய் நோட்டை விரைவில் வாபஸ் பெற இருப்பதாகவும், மீண்டும் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் பொது மக்கள் மத்தியில் பரவலான கருத்து நிலவுகிறது.

சிலி நாட்டு இராணுவத்திற்குச் சொந்தமானவிமானமொன்று திடீரெனக் காணமற் போயிருந்தது. தொடர்பற்றுப் போயிருந்த அந்த விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என ஊகம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

#FridaysForFuture எனும் போராட்டத்தின் மூலம் உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட இளம் சமூகச் செயற்பாட்டாளர் சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவரை 2019 ம் சிறந்த நபராக டைம் பத்திரிகை அறிவித்து, டைம்ஸ் பத்திரிகையில் அட்டைப்படத்தில் அவரது படத்தைவெளியிட்டு மரியாதை செய்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் அண்மையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி சுமார் 2000 கோலா கரடிகள் பலியாகி விட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

செவ்வாய்க்கிழமை இவ்வருடத்துக்கான அமைதிக்கான நோபல் பரிசு கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பிய பிரதமர் ஆபை அகமதுவுக்கு வழங்கப் பட்டது.

Top Stories

Grid List

சீனாவில் நடக்கும் சர்வதேச துப்பாக்கிச் சுடும் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றிருக்கின்றார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்வருடத்துக்கான ஐசிசி உலகக் கிண்ணக் கோப்பைப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்றிருந்த நிலையில் சூப்பர் ஓவர் வழங்கப் பட்டு அதிலும் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்ற நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியான இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை மழை காரணமாக இடை நிறுத்தப் பட்டு இன்று புதன்கிழமை மீண்டும் ஆரம்பமான இந்திய நியூசிலாந்து அணிகளுக்கான அரையிறுதிப் போட்டியில் இந்தியா அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.

சனிக்கிழமை இங்கிலாந்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியை இந்தியா அணி 7 விக்கெட்டுக்களாலும் அவுஸ்திரேலிய அணியைத் தென்னாப்பிரிக்க அணி 10 ரன்களாலும் வெற்றி கொண்டுள்ளன.

இவரெல்லாம் ஹீரோவா, வில்லனா என்கிற டவுட்டை கிளப்பியிருக்கிறார் மிருகம் ஆதி. ஈரம், குற்றம் 23 போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய அறிவழகன், மீண்டும் அருண் விஜய் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போகிறார்.

ஆதித்ய வர்மாவின் படு தோல்வி கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டதாம் துருவ் விக்ரமை. விட்டுப்போன படிப்பை முடிச்சுட்டு வர்றேன் என்று லண்டனுக்கு கிளம்பி போயிருக்கிறார்.

சினிமா சங்கங்கள் அத்தனையும் ஒரேயடியாக சண்டைக்கு நின்று சட்டையை கிழிக்க வந்தாலும், நான் கிழிச்சதுதான் முதல்ல என்று மூக்கை விடைத்துக் கொண்டு நிற்பவர் அவர்.

மண்டைய சுற்றி கொண்டை இருந்தாலும் மரியாதைக்காகவாவது ஒரு மல்லிகை பூ வைக்கணுமில்லையா? அப்படியொரு மல்லிகை பூ சமாச்சாரத்தில் சிக்கிக் கொண்டார் வெங்கட்பிரபு.

இந்தியாவில் நடைபெறும் முக்கிய திரைப்பட விழழாக்களில் ஒன்றான, கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50வது தொடர் நேற்று ஆரம்பமாகியது. வரும் 28ந் திகதி வரை நடைபெறும் இவ் விழாவில் சர்வதேச, இந்தியா என்ற வகையில்,200க்கும் மேற்பட்ட திரைபடங்கள் காட்சிப்படுத்தப்டவுள்ளன.

சர்வதேச லொகார்னோ திரைப்பட விழாவில் இந்த ஆண்டிற்கான, சிறந்த முழுநீளத் திரைப்படத்திற்கான தங்கச் சிறுத்தை விருதினை (Golden Leopard), Pedro Costa இயக்கிய போர்த்துக்கல் திரைப்படமான Vitalina Varela எனும் திரைப்படம் வெற்றி கொண்டது

புகழ்பெற்ற காற்பந்து வீரர் டியோகோ மரடோனாவை பற்றி ஒரு ஆவணத் திரைப்படம். லொகார்னோ திரைப்பட விழாவில் பியாற்சே கிராண்டே திறந்த வெளித் திரையரங்கை அப்படியே 80,90 களின்  காற்பந்து மைதானமாக மாற்றிச் சென்றது.

இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது கௌரவிக்கப்பட்டவர் சுவிற்சர்லாந்தின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான Fredi M.Murer.

கதவே இல்லாத எலிப்பொறியில், பல்லே இல்லாத எலி சிக்கிய மாதிரி செல்வராகவனின் ஃபேட் அவுட் காலத்தில் அவரிடம் சிக்கியிருக்கிறார் சூர்யா.

இளையராஜாவின் ‘பீக் ஹவர்’ காலத்தில் வாழ்ந்த பதினெட்டு ப்ளஸ்களுக்கு இந்த ஒரு ஜென்மம் போதும்.

“எப்படியிருந்த விவேக் இப்படியாகிட்டாரே...!” டோன்ட் பேனிக். இது பாராட்டுதான்!

தமிழ்சினிமாவை அண்மைக்காலமாக ப்ளூ கலர் வைரஸ்களும், ரெட் கலர் பாக்டீரியாக்களும் அட்டாக் பண்ணி வருவதால், ‘சோ கால்டு’ ஒலக சினிமா படைப்பாளிகளை விட்டு, ரசிகர்கள் பல மைல் தொலைவு தள்ளியிருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (டு லெட், விசாரணை போன்ற உலக சினிமா உருவாகக் காரணமான படைப்பாளிகள் மட்டும் மன்னிப்பீர்களாக!)

வசிஷ்ட நாராயண் சிங் . ஒரு காலத்தில் உலகின் உன்னதமான கணிதவியலாளர். உலகின் உயர்ந்த இடங்களிலெல்லாம், மரியாதை மிகுந்த பெருமையோடு வலம் வந்த இந்தியர். வாழ்வின் இறுதிக்காலத்தில் தன்னிலை மறந்த தனியனாகி மறைந்து போனார்.

செல்போன்களும், தொலைத்தொடர்பு வசதிகளும் அதிகரித்துப் போனபின், முக்கியத்துவம் இழந்து, காணமற்போயுள்ளன இந்தத் தெருவோரத் தொலைபேசிகள். தொழில்நுட்ப வளர்ச்சியில் இவ்வாறு காணமற் போனவை பல. ஒடியாடி உழைத்துக் களைத்து, வாழ்வின் அந்திமத்தில் ஒதுக்கப்பட்ட மூத்தோர் போலக் காட்சி தரும் இவ்வாறான தொபேசிக் கூண்டுகளை இப்போது காண முடிவதில்லை.

'டாலர் நகரம்' 4தமிழ்மீடியாவில் முதல் தொடராகவும்,  வெளியீட்டில் முதலாவதாக வந்த புத்தகம். புத்தகத்தின் ஆசிரியர் 'ஜோதிஜி' யின் முதலாவது புத்தகம். திருப்பூர் பின்னாலாடை தொழில் தொடர்பாக விரிவாக எழுதப்பெற்ற முதல் புத்தகம். அது வெளிவந்த 2013ம் ஆண்டில் சிறந்த புத்தகங்கள் வரிசையில், 'விகடன்' சிறப்புத் தெரிவில் இடம்பெற்றது.

சென்ற வருடத்தில் ஒருநாள் ஏதேச்சையாக அந்தக் கானொலியைப் பார்க்க முடிந்தது. தெருவோரத்தில் ஒரு குட்டிப் பெண் வெகு இலாவகமாக வயலின் இசைத்த வண்ணமிருந்தாள். வயலினின் இசையும், அவளது வாசிப்பின் உடல்மொழியும், அபாரமாக இருந்தது.

நவீன அகிலவியல் கல்வியில் (Cosmology) அறிவியலாளர்களால் விளக்க முடியாத மிகக் கடினமான இரு கூறுகள் கரும்பொருள் (Dark Matter) மற்றும் கரும்சக்தி (Dark Energy) என்று கூறலாம்.

சுமார் 7 வருடங்களுக்கு சூரியனைப் படிப்படியாக நெருங்கி ஆய்வு செய்யும் வண்ணம் 2018 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட பார்க்கர் சோலார் செய்மதி தற்போது சூரியனின் மேற்பரப்பில் இருந்து 15 மில்லியன் மைல் தொலைவில் நெருங்கி உள்ளது.

எமது பிரபஞ்சம் முழுமைக்காக என்று எடுத்துக் கொண்டால் முடிவற்ற எண்ணிலடங்கா சூரியன்கள் உள்ளன என்றும் கூற முடியும்.

பெருவெடிப்பில் தோன்றியதில் இருந்து எமது பிரபஞ்சம் மிக மிக நீண்ட காலமாக விரிவடைந்து கொண்டே இருக்கின்றது.

4தமிழ்மீடியாவின் மனமே வசப்படு.

மேலும் மனமே வசப்படு பதிவுகளுக்கு : 
http://www.4tamilmedia.com/spirituality/maname-vasappadu
https://www.facebook.com/ManameVasappadu/

மேலும் மனமே வசப்படு : https://www.facebook.com/ManameVasappadu/

தொழில்நுட்பம்

நோக்கியாவின் பழைய மாடலான 3310வின் வடிவத்தில் வெவ்வேறு கம்பெனிகள்
தங்கள் போன்களை அறிமுகம் செய்துள்ளன.

நோக்கியாவின் மிகப்பிரபலமான போன் மாடல் 3310. இன்றைய ஆண்ட்ராயிட்
காலத்துக்கு முன்னர் நோக்கியாதான் கைப்பேசி உலகின் ராஜா. நோக்கியா 3310
போனை பயன்படுத்தாதவர் மிகக்குறைவே. இதைச் சரியாக புரிந்துகொண்ட நோக்கியா
17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தனது பழைய மாடலை அறிமுகப்படுத்தவுள்ளது.
அதே வடிவம், அதே ஸ்னேக் கேம், இன்னும் கொஞ்சம் கூடுதல் அம்சங்களுடன்
விற்பனைக்கு வருகிறது நோக்கியா.

இதனிடையே நோக்கியாவின் 3310 மாடலை அப்படியே காப்பியடித்து மைக்ரோமேக்ஸ்,
டராகோ உள்ளிட்ட கைப்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் போனை விற்பனைக்கு
கொண்டு வந்துள்ளன. 3310 வடிவத்தில் இருக்கு டராகோ 3310 வெறும் 799
ரூபாய்க்கு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிலும் இந்த போன் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளது. மைக்ரோமேக்ஸ்
நிறுவனமும் 3310 வடிவில் X1i என்ற போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்
விலை 1399 ரூபாய்

 

BLOG COMMENTS POWERED BY DISQUS