Top Stories

Grid List

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவர் அரசியலமைப்புக்கு புறம்பாக நியமித்துள்ள ராஜபக்ஷ அரசாங்கத்தினரும் நாட்டு மக்களை நாளுக்கு நாள் பைத்தியக்காரர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களில் இரண்டு தடவைகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை 120க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதனை, அறிவித்து சபாநாயகர் கரு ஜயசூரிய எழுதிய கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. 

தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் தேர்ந்தெடுத்த ‘சமூக நீதி’க்கான இடர்நிறைந்த பாதையில் வெற்றிகரமாகப் பயணித்த கலைஞர் மு.கருணாநிதி, தான் மறைந்த பின்னும் போராட்டத்தின் வழியே தனக்கான உரிமையை மீட்டிருக்கின்றார். அதாவது, மெரீனா கடற்கரையில் அண்ணாவின் அரவணைப்பில் மீளாத்துயில் கொள்ள வேண்டும் என்கிற தன்னுடைய இறுதி ஆசைக்காக அவர் சட்டப் போராட்டம் நடத்தி வென்றிருக்கிறார். இப்போது, அவர் அண்ணாவின் அரவணைப்பில் அமைதியாக உறங்குவார். 

வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக பா.டெனீஸ்வரன் தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கான இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பித்திருக்கின்றது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்திருக்கின்றார்கள். 

Top Stories

Grid List

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வளாகமாக இயங்கிவரும் வவுனியா வளாகத்தை தனிப் பல்கலைக்கழகமாக மாற்றி, வன்னிப் பல்கலைக்கழகம் ஆக உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

“நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கமாக நாம் நடவடிக்கைகள் எடுக்கும்போதெல்லாம், மத தலைவர்களும் ஒரு சிலர் அரசியல் தலைவர்களுமே தீர்வுகளை குழப்புகின்றனர். இதனால், நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாதுள்ளது.” என்று அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

“கடந்த காலத்தில் என்ன நடந்தது என்கிற உண்மை அனைவருக்கும் வெளிப்படுத்தப்படும். அனைத்தையும் மன்னித்து ஏற்று நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான இணக்கத்தில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் களமிறக்கப்படுவார். எவ்வாறு இருப்பினும் வெற்றிபெறக்கூடிய ஒருவரையே களமிறக்குவோம்.” என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

காஷ்மீரின் புல்மாவா பகுதில் இந்திய இராணுவ வாகனப் பேரணி மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய வெறித்தனமான தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 49 சீஆர்பிஎஃப் இராணுவ வீரர்கள் பலியாகி இருந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா நகர்ப் பகுதியில் ரிசர்வ் போலிசார் படை சென்ற பஸ் மீது 350 கிலோ வெடி மருந்து நிரப்பப் பட்ட காரை ஓட்டி வந்து தற்கொலைத் தீவிரவாதி ஒருவன் நிகழ்த்தியதை அடுத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலிலும் 44 வீரர்கள் பலியாகி உள்ளனர்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் சேவை அறிமுகப் படுத்தப் பட்டு 2 ஆவது நாளான இன்று திங்கட்கிழமையே தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டு டி எம் எஸ் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது.

சமீபத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவர் மற்றும் நடிகருமான கமல ஹாசன், 'திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஊழல் கட்சிகள். ஊழல் பொதியை நாம் சுமக்க முடியாது. மக்கள் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.' என்று தொனிப்பட பேசியிருந்தார்.

உலக சிறுவர் நல அமைப்பான 'சேவ் தி சில்டிரன்' அண்மையில் வெளியிட்ட புள்ளி விபரம் ஒன்றில் நிகழ்காலத்தில் வருடத்தில் 100 000 குழந்தைகள் யுத்தம் காரணமாக மரணிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானைச் சேர்ந்த போராளி அமைப்பான தலிபான்கள் எதிர்வரும் வாரம் பாகிஸ்தானில் வைத்து மூத்த அமெரிக்க மற்றும் பாகிஸ்தானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

வெனிசுலாவில் தற்போது அரசியல் பதற்ற நிலை நீடித்து வரும் நிலையில் அங்கிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவுள்ள நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் தாய்வானில் 3 ஆவது நாளாக நீடிக்கும் சீன ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பைலட்டுக்களது வேலை நிறுத்தப் போராட்டம் அங்கு மேலும் பல விமான சேவைகள் இடைநிறுத்தப் பட்டுள்ளன.

Top Stories

Grid List

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி காலநிலை சீர்கேட்டினால் சமநிலையில் முடிந்தது. இதையடுத்து 2-1 என டெஸ்ட் தொடரை ஏற்கனவே கைப்பற்றியிருந்த இந்திய அணி, 71 வருடங்களில் முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் போட்டித் தொடரை வென்று சரித்திரம் படைத்துள்ளது.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான சிட்னி டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி கடுமையாக போராடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் புஜாரா, ரிஷாப் பாண்ட் சதங்களினால் 622 ஓட்டங்களை இந்தியா குவித்திருந்தது.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இன்று சிட்னியில் தொடங்கிய நான்காவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 303 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் மெர்பேர்னில் இடம்பெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடி மேகா ஆகாஷ்தான்.

மிஷ்கின் வாய்க்குள் சரஸ்வதி இருக்கிறாளோ இல்லையோ... சாத்தான் இருப்பது நிச்சயம்.

சந்தானம் நடித்து வந்த படங்களில் பல அப்படியே முடங்கிக் கிடந்தன.

தான் இயக்கவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்காக அடப்படத்தில் நடிக்கவிருக்கும் முன்னணி நடிகர்களிடம் ஆறு மாதம் தேதி கேட்கிறாராம் மணிரத்னம்.

Him.Her.The Other (அவன், அவள், மற்றும் மற்றையவர்கள்), தமிழில் «மூவர்» எனும் பெயரிலும், சிங்கள மொழியில் «துந்தனெக்» எனும் பெயரிலும், இலங்கையின் மூன்று மிக முக்கிய / கொண்டாடப்படும் திரை இயக்குனர்களான பிரசன்ன விதானகே, விமுக்தி ஜயசுந்தர மற்றும் அசோக ஹந்தகம ஆகியோரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது.

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் தங்கச் சிறுத்தை விருதை (Golden Leopard), முதன் முறையாக சிங்கப்பூர் சினிமா திரைப்படம் ஒன்று தட்டிச் சென்றுள்ளது.  A LAND IMAGINED (கற்பனை நிலம்) எனும் திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் Yeo Siew இவ்விருதை வெற்றி கொண்டுள்ளார்.

இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவில், Cineasti del Presente எனப்படும் போட்டிப் பிரிவில் பார்த்த சில திரைப்படங்கள் அத்திரைப்பட இயக்குனர்களின் எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திச் சென்றிருக்கின்றன. 

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door பிரிவில் தொடர்ந்து மூன்று வருடமாக மையப்படுத்தப்பட்டு வந்த இந்தியா அல்லாத தெற்காசிய நாடுகளின் நலிந்த சினிமா பார்வை இவ்வருடத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

கட்டி சூடத்தை வாயில போட்டு, கையளவு நெருப்பையும் சேர்த்து விழுங்குன மாதிரி இருந்தது முந்தைய விவேகம்! எரிச்சலுக்கு மருந்து எப்பய்யா தருவே? என்று சிவாவை நச்சரித்தபடி காத்திருந்த அஜீத் ரசிகர்களுக்கு அடி வயிறு குளிர்ந்திருக்கும்! விஸ்வாசம், நுனி நாக்கில் விழுந்து அடி வயிற்றை கூலாக்கும் ஜில் வாட்டர்!

கயிறை தொலைத்த பம்பரம் போல கவலைக்குரிய நிலையிலிருந்த ரஜினியின் மார்க்கெட்டை உயிரை கொடுத்து மீட்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். கும்மிடிப்பூண்டி ரசிகனுக்கு மட்டுமல்ல, கோலாலம்பூர் ரசிகனுக்கும் பிடித்த ரஜினியை மெனக்கெட்டு இறக்குமதி செய்திருக்கும் கா.சு வுக்கு அகில உலக ரஜினி ரசிகர்கள் ஒன்று கூடி ஆலங்கட்டி மழையே தூவலாம்!

‘கடைக்குட்டி சிங்கம்’ கன்னாபின்னா ஹிட்! விடுவார்களா...? சிங்கத்தோடு ஒரு சிலுக்குவார்ப்பட்டியை இணைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

கொட்டாங்குச்சிக்கு பெயின்ட் அடிச்சு, அதை கோணி ஊசியில நிக்க வச்ச மாதிரி ஒரு கெட்டப்!

இன்று எஞ்சியிருக்கும் ஈழத்துச் சனத்துக்கு மரணம் என்ற ஒன்றைத் தவிர மீதி எல்லாவற்றையும் கண்டு கடந்திருக்கும். வயது வேறுபாடில்லாமல் எல்லோருக்குமே பொதுமையான அனுபவம் இது. போர் தின்ற அந்தச் சனங்கள் மரணத்தின் நுனி வரை போய் வந்திருக்கிறார்கள். அந்த வாழ்வியல் அனுபவங்கள் ஏறக்குறைய எல்லோருக்குமே வெவ்வேறான கால கட்டத்தில் நிகழ்ந்தேறியிருக்கின்றன. 

அமைதி நிலவும் இடத்தில் வளர்ச்சி தெரியும் என்பது ஆய்வாளர் கூற்று. அமைதி நிலவும் இடத்தில் ஆற்றல் பெருகும் என்பது ஆன்மீகக் கருதுநிலை.

குறு நிலங்களாகப் பிளவுபட்டிருந்த அம் மலைப்பிரதேசம், பல்வேறு ஆட்சியாளர்களால் பலகாலம் அடிமைப்பட்டுக் கிடந்தது. ஆஸ்திரிய மன்னனால், அடிமைப்பட்டுக்கிடந்த காலமதில், அரச அதிகாரியாகச் செயலாற்றிய ஜெஸ்லர், மலைவாழ் மக்களை மிகவும் கொடுமைப்படுத்தினான்.

“நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!” 

செவ்வாய்க்கிரகத்தில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவர் என்ற ரோபோட்டிக் விண்வண்டியின் செயற்பாடு நிறுத்தப் பட்டுள்ளதாகவும் இதனால் அதன் ஆய்வு நிறைவு பெற்று குறித்த விண்வண்டிக்குப் பிரியாவிடை கொடுக்கப் பட்டுள்ளதாகவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

நாம் அன்றாடம் அருந்தும் கோப்பி பானத்தில் அடங்கியுள்ள கஃபேன் என்ற வேதிப் பொருளைக் கண்டு பிடித்த ஜேர்மனி நாட்டு வேதியியலாளரான ஃபிரெட்லியெப் ஃபெர்டினண்ட் ருங்கே என்பவரது 225 ஆவது பிறந்த தினம் இன்று வெள்ளிக்கிழம அனுட்டிக்கப் படுகின்றது.

2017 ஆமாண்டு ஆக்டோபர் 19 ஆம் திகதி பூமியில் இருந்து 33 000 000 கிலோ மீட்டர் தொலைவில் சூரியனை விட்டு விலகிச் செல்லும் வண்ணம் கடந்த ஒமுவாமுவா என்ற விண்கல் அதன் பயணப் பாதை மற்றும் வேறு சில அம்சங்கள் காரணமாக நிச்சயம் ஒரு வேற்றுக் கிரக வாசிகளின் விண்கலமாகத் தான் இருக்கும் என ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் ஷுமேல் பெய்லி தலைமையிலான விஞ்ஞானிகள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.

பூமியின் காலநிலைகளிலும் மனிதத் தேவைகளிலும் தீவிர தாக்கம் செலுத்தக் கூடிய WMM என்றழைக்கப் படும் பூமியின் வடக்கு மின்காந்தத் துருவம் எதிர்பாராத விதமாக ரஷ்ய சைபீரிய சமவெளியை நோக்கி மிக வேகமாக நகர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

மேலும் மனமே வசப்படு : https://www.facebook.com/ManameVasappadu/

மேலும் மனமே வசப்படு :   https://www.facebook.com/ManameVasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu

இந்தியா

தற்போதையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும் யூலை மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் வருகிற யூலை மாதம் 24ஆம் திகதி முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையகம் செய்து வருகின்றது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றிய அறிவிப்பை தேர்தல் ஆணையகம் நேற்று புதன்கிழமை வெளியிட்டது. அதன்படி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு யூலை 17ஆம் திகதி நடைபெறுகிறது.

இதற்கான அறிவிக்கை வருகிற 14ஆம் திகதி வெளியிடப்படுகிறது. அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கும். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 28ஆம் திகதி வரை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 29ஆம் திகதி நடைபெறும்.

போட்டியில் இருந்து விலக விரும்புவோர், தங்கள் வேட்புமனுக்களை திரும்பப்பெற யூலை 01ஆம் திகதி கடைசி நாள். யூலை 17ஆம் திகதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறும். யூலை 20ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS