Top Stories

Grid List

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவர் அரசியலமைப்புக்கு புறம்பாக நியமித்துள்ள ராஜபக்ஷ அரசாங்கத்தினரும் நாட்டு மக்களை நாளுக்கு நாள் பைத்தியக்காரர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களில் இரண்டு தடவைகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை 120க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதனை, அறிவித்து சபாநாயகர் கரு ஜயசூரிய எழுதிய கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. 

தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் தேர்ந்தெடுத்த ‘சமூக நீதி’க்கான இடர்நிறைந்த பாதையில் வெற்றிகரமாகப் பயணித்த கலைஞர் மு.கருணாநிதி, தான் மறைந்த பின்னும் போராட்டத்தின் வழியே தனக்கான உரிமையை மீட்டிருக்கின்றார். அதாவது, மெரீனா கடற்கரையில் அண்ணாவின் அரவணைப்பில் மீளாத்துயில் கொள்ள வேண்டும் என்கிற தன்னுடைய இறுதி ஆசைக்காக அவர் சட்டப் போராட்டம் நடத்தி வென்றிருக்கிறார். இப்போது, அவர் அண்ணாவின் அரவணைப்பில் அமைதியாக உறங்குவார். 

வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக பா.டெனீஸ்வரன் தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கான இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பித்திருக்கின்றது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்திருக்கின்றார்கள். 

Top Stories

Grid List

போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் அரசாங்கத்தால் போதைப்பொருட்களை ஒழிக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

‘முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷவே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர் என்ற இறுதியான முடிவுக்கு தேசியவாதிகளும், இடதுசாரிகளும் வந்து விட்டனர்’ என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்து, தமிழ் மக்களை இன்னும் இன்னும் அழிப்போம் என்கிற எண்ணக் கருவுடன் உள்ளது. இராணுவம் புரிந்த குற்றங்களை நாங்கள் மறப்பதுக்கு, அரசாங்கம் உண்மையைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்ட வேண்டும். அதன் பின்னர் தீர்வு என்ன என்பது பற்றி தமிழர்கள் முடிவெடுக்க முடியும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். 

பயங்கரவாதத்தை ஒழிப்பது அடிப்படையில் ஒரு போர்க்குற்றம் அல்ல என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, போர்க்குற்றத்தை ஒப்புக்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

2018 மே மாதம் 22 ஆம் திகதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழலுக்கு மாசினை ஏற்படுத்தி மனிதர்களுக்குப் பல்வேறு நோய்களை ஏற்படுத்துவதாகவும் அதனால் இதனைத் திறக்கத் தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி பொது மக்கள் பாரியளவில் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.

வியாழக்கிழமை காஷ்மீரின் புல்மாவா பகுதியில் இந்திய சி ஆர் பி எஃப் இராணுவ வீரர்கள் பயணித்துக் கொண்டிருந்த வாகனப் பேரணி மீது பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதக் குழுவான ஜெய்ஸ் இ முகமது நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40 இற்கும் அதிகமான வீரர்கள் பலியாகினர்.

காஷ்மீரின் புல்மாவா பகுதில் இந்திய இராணுவ வாகனப் பேரணி மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய வெறித்தனமான தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 49 சீஆர்பிஎஃப் இராணுவ வீரர்கள் பலியாகி இருந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா நகர்ப் பகுதியில் ரிசர்வ் போலிசார் படை சென்ற பஸ் மீது 350 கிலோ வெடி மருந்து நிரப்பப் பட்ட காரை ஓட்டி வந்து தற்கொலைத் தீவிரவாதி ஒருவன் நிகழ்த்தியதை அடுத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலிலும் 44 வீரர்கள் பலியாகி உள்ளனர்.

சவுதி அரேபியாவில் சிறையில் இருக்கும் 2000 இற்கும் மேற்பட்ட பாகிஸ்தானிய கைதிகளை விடுவிக்க அந்நாட்டு முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் காஷ்மீரின் புல்மாவா பகுதியில் இராணுவப் பேரணி மீது ஜெய்ஸ் இ முகமது இயக்கத் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல் சீ ஆர் எஃப் சி அமைப்பைச் சேர்ந்த 44 இந்திய இராணுவ வீரர்கள் பலியாகி இருந்தனர்.

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள் சில கிராமங்களில் 22 குழந்தைகள், 12 பெண்கள் உட்பட 66 பேரின் இறந்த உடல்கள் அதிகாரிகளால் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

மெக்ஸிக்கோ எல்லைச் சுவர் விவகாரத்தில் அமெரிக்காவில் அவசர நிலைப் பிரகடனம்!மெக்ஸிக்கோ எல்லையில் குடியேறிகள் நுழைவதைத் தடுக்கப் பாரிய சுவர் அமைக்கும் திட்டத்துக்கு மீண்டும் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காததால் அமெரிக்க அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் அவசர நிலைப் பிரகடனம் செய்துள்ளார்.

Top Stories

Grid List

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி காலநிலை சீர்கேட்டினால் சமநிலையில் முடிந்தது. இதையடுத்து 2-1 என டெஸ்ட் தொடரை ஏற்கனவே கைப்பற்றியிருந்த இந்திய அணி, 71 வருடங்களில் முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் போட்டித் தொடரை வென்று சரித்திரம் படைத்துள்ளது.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான சிட்னி டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி கடுமையாக போராடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் புஜாரா, ரிஷாப் பாண்ட் சதங்களினால் 622 ஓட்டங்களை இந்தியா குவித்திருந்தது.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இன்று சிட்னியில் தொடங்கிய நான்காவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 303 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் மெர்பேர்னில் இடம்பெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்குமான லவ், அடுத்த கட்டத்திற்கு போயிருக்கிறது.

பிரபல தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணனின் நெருங்கிய உறவினர் மைத்ரேயாவிடம் ஒரு கோடி பணத்தை வாங்கிக் கொண்டு

வேக வேகமாக வளர்ந்த ‘சைக்கோ’ படத்தை சைலன்டாக கிடப்பில் போட்டுவிட்டார் உதயநிதி. ஏன்?

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடி மேகா ஆகாஷ்தான்.

Him.Her.The Other (அவன், அவள், மற்றும் மற்றையவர்கள்), தமிழில் «மூவர்» எனும் பெயரிலும், சிங்கள மொழியில் «துந்தனெக்» எனும் பெயரிலும், இலங்கையின் மூன்று மிக முக்கிய / கொண்டாடப்படும் திரை இயக்குனர்களான பிரசன்ன விதானகே, விமுக்தி ஜயசுந்தர மற்றும் அசோக ஹந்தகம ஆகியோரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது.

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் தங்கச் சிறுத்தை விருதை (Golden Leopard), முதன் முறையாக சிங்கப்பூர் சினிமா திரைப்படம் ஒன்று தட்டிச் சென்றுள்ளது.  A LAND IMAGINED (கற்பனை நிலம்) எனும் திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் Yeo Siew இவ்விருதை வெற்றி கொண்டுள்ளார்.

இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவில், Cineasti del Presente எனப்படும் போட்டிப் பிரிவில் பார்த்த சில திரைப்படங்கள் அத்திரைப்பட இயக்குனர்களின் எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திச் சென்றிருக்கின்றன. 

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door பிரிவில் தொடர்ந்து மூன்று வருடமாக மையப்படுத்தப்பட்டு வந்த இந்தியா அல்லாத தெற்காசிய நாடுகளின் நலிந்த சினிமா பார்வை இவ்வருடத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

கட்டி சூடத்தை வாயில போட்டு, கையளவு நெருப்பையும் சேர்த்து விழுங்குன மாதிரி இருந்தது முந்தைய விவேகம்! எரிச்சலுக்கு மருந்து எப்பய்யா தருவே? என்று சிவாவை நச்சரித்தபடி காத்திருந்த அஜீத் ரசிகர்களுக்கு அடி வயிறு குளிர்ந்திருக்கும்! விஸ்வாசம், நுனி நாக்கில் விழுந்து அடி வயிற்றை கூலாக்கும் ஜில் வாட்டர்!

கயிறை தொலைத்த பம்பரம் போல கவலைக்குரிய நிலையிலிருந்த ரஜினியின் மார்க்கெட்டை உயிரை கொடுத்து மீட்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். கும்மிடிப்பூண்டி ரசிகனுக்கு மட்டுமல்ல, கோலாலம்பூர் ரசிகனுக்கும் பிடித்த ரஜினியை மெனக்கெட்டு இறக்குமதி செய்திருக்கும் கா.சு வுக்கு அகில உலக ரஜினி ரசிகர்கள் ஒன்று கூடி ஆலங்கட்டி மழையே தூவலாம்!

‘கடைக்குட்டி சிங்கம்’ கன்னாபின்னா ஹிட்! விடுவார்களா...? சிங்கத்தோடு ஒரு சிலுக்குவார்ப்பட்டியை இணைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

கொட்டாங்குச்சிக்கு பெயின்ட் அடிச்சு, அதை கோணி ஊசியில நிக்க வச்ச மாதிரி ஒரு கெட்டப்!

இன்று எஞ்சியிருக்கும் ஈழத்துச் சனத்துக்கு மரணம் என்ற ஒன்றைத் தவிர மீதி எல்லாவற்றையும் கண்டு கடந்திருக்கும். வயது வேறுபாடில்லாமல் எல்லோருக்குமே பொதுமையான அனுபவம் இது. போர் தின்ற அந்தச் சனங்கள் மரணத்தின் நுனி வரை போய் வந்திருக்கிறார்கள். அந்த வாழ்வியல் அனுபவங்கள் ஏறக்குறைய எல்லோருக்குமே வெவ்வேறான கால கட்டத்தில் நிகழ்ந்தேறியிருக்கின்றன. 

அமைதி நிலவும் இடத்தில் வளர்ச்சி தெரியும் என்பது ஆய்வாளர் கூற்று. அமைதி நிலவும் இடத்தில் ஆற்றல் பெருகும் என்பது ஆன்மீகக் கருதுநிலை.

குறு நிலங்களாகப் பிளவுபட்டிருந்த அம் மலைப்பிரதேசம், பல்வேறு ஆட்சியாளர்களால் பலகாலம் அடிமைப்பட்டுக் கிடந்தது. ஆஸ்திரிய மன்னனால், அடிமைப்பட்டுக்கிடந்த காலமதில், அரச அதிகாரியாகச் செயலாற்றிய ஜெஸ்லர், மலைவாழ் மக்களை மிகவும் கொடுமைப்படுத்தினான்.

“நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!” 

செவ்வாய்க்கிரகத்தில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்த ஆப்பர்சுனிட்டி ரோவர் என்ற ரோபோட்டிக் விண்வண்டியின் செயற்பாடு நிறுத்தப் பட்டுள்ளதாகவும் இதனால் அதன் ஆய்வு நிறைவு பெற்று குறித்த விண்வண்டிக்குப் பிரியாவிடை கொடுக்கப் பட்டுள்ளதாகவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

நாம் அன்றாடம் அருந்தும் கோப்பி பானத்தில் அடங்கியுள்ள கஃபேன் என்ற வேதிப் பொருளைக் கண்டு பிடித்த ஜேர்மனி நாட்டு வேதியியலாளரான ஃபிரெட்லியெப் ஃபெர்டினண்ட் ருங்கே என்பவரது 225 ஆவது பிறந்த தினம் இன்று வெள்ளிக்கிழம அனுட்டிக்கப் படுகின்றது.

2017 ஆமாண்டு ஆக்டோபர் 19 ஆம் திகதி பூமியில் இருந்து 33 000 000 கிலோ மீட்டர் தொலைவில் சூரியனை விட்டு விலகிச் செல்லும் வண்ணம் கடந்த ஒமுவாமுவா என்ற விண்கல் அதன் பயணப் பாதை மற்றும் வேறு சில அம்சங்கள் காரணமாக நிச்சயம் ஒரு வேற்றுக் கிரக வாசிகளின் விண்கலமாகத் தான் இருக்கும் என ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் ஷுமேல் பெய்லி தலைமையிலான விஞ்ஞானிகள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.

பூமியின் காலநிலைகளிலும் மனிதத் தேவைகளிலும் தீவிர தாக்கம் செலுத்தக் கூடிய WMM என்றழைக்கப் படும் பூமியின் வடக்கு மின்காந்தத் துருவம் எதிர்பாராத விதமாக ரஷ்ய சைபீரிய சமவெளியை நோக்கி மிக வேகமாக நகர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

மேலும் மனமே வசப்படு : https://www.facebook.com/ManameVasappadu/

மேலும் மனமே வசப்படு :   https://www.facebook.com/ManameVasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu

இந்தியா

பெரும்பான்மை இல்லாத எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நீடிப்பதற்கு அனைத்து உதவிகளையும் மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு செய்து கொண்டிருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ‘குதிரை பேர’ அரசுக்கு அளித்த வந்த ஆதரவை, ஆளுங்கட்சியைச் சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 22ஆம் தேதியிலிருந்து இந்த அமைச்சரவை பெரும்பான்மையை இழந்து விட்டது என்பது ‘உள்ளங்கை நெல்லிக்கனி’ போல் உலகத்திற்குத் தெரிய வந்துவிட்டது. ஆனால், ‘அது உள்கட்சி பிரச்னை’, என்று கூறி, இந்த அரசை நீடிக்க வைப்பதற்கு அரசியல் உள்நோக்கத்துடன் மத்தியில் உள்ள பாஜக அரசு ஆளுநர் நீண்ட அமைதி காப்பது அரசியல் சட்ட விரோதம் மட்டுமல்ல, சட்டமன்ற ஜனநாயகத்திற்கே உலைவைக்கும் கேலிக்கூத்தாகும்.

திமுக சார்பிலும், சட்டமன்றத்தில் உள்ள மற்ற கட்சிகளின் சார்பிலும், ஏற்கனவே ஆளுநருக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டும், இன்றுவரை எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிடாமல் இருப்பது, ஒரு சட்டவிரோத அரசு தமிழகத்தில் நடப்பதற்கு முழு ஆதரவு அளிக்கும் விதத்தில் அமைந்து விட்டது. திமுக சார்பிலும், சட்டமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் சார்பிலும், குடியரசுத் தலைவரிடம் மனு அளித்து, “பெரும்பான்மையை நிரூபிக்க இந்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்”, என்று கோரிக்கை வைத்த பிறகும், பெரும்பான்மை இல்லாத இந்த அரசு நீடிப்பதற்கு அனைத்து உதவிகளையும் மத்தியில் உள்ள பாஜக அரசும், உள்துறை அமைச்சகமும் செய்து கொண்டிருப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்.

இதற்கிடையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நேற்றைய தினம் கூட்டியிருக்கிறார். அதில் 109 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றார்கள் என்ற செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளிவந்துள்ளது. இதன்மூலம், பெரும்பான்மைக்குத் தேவையான 118 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இல்லாமல் இந்த அரசு நீடித்துக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி தொடுத்த வழக்கில், நேற்றைய தினம் வாதாடிய அரசு தலைமை வழக்கறிஞர், “அதிமுகவில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முதலமைச்சரை ஆதரிக்க வேண்டியதில்லை. சிலர் ஆதரவு தெரிவிக்காமல் இருக்கலாம்”, என்ற கருத்தை கூறியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஏற்கனவே ஆதரவளித்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் இப்போது இல்லை என்பதும், இதன்மூலம் சட்டமன்றத்தில் இந்த அரசுக்குப் பெரும்பான்மை இல்லை என்பதும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்பே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

மிக முக்கியமான அரசியல் சட்ட வழக்கில் அரசின் தலைமை வழக்கறிஞரே உயர் நீதிமன்றத்தின் முன்பு கூறிய இந்தக் கருத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஆகவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு மெஜாரிட்டி இல்லை என்பது உயர் நீதிமன்றத்தின் முன்பே தெளிவாக்கப்பட்டு விட்டது.

இந்தச் சூழ்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தன் பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க ஆளுநர் உடனடியாக உத்தரவிட வேண்டும். இந்த அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில், அமைச்சர்களோ அல்லது முதலமைச்சரோ கொள்கை முடிவுகள் எதையும் எடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு எடுக்கப்படும் கொள்கை முடிவுகளுக்கோ அல்லது கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு உதவி செய்வதற்கோ, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஒத்துழைப்பு வழங்குவது அரசியல் சட்டத்திற்கு விரோதமான செயல் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே, பெரும்பான்மையை இழந்த இந்த அரசின் சட்டவிரோதமான முடிவுகளுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எக்காரணத்தைக் கொண்டும் துணை போகக்கூடாது என்றும், மைனாரிட்டி நிலைக்குச் சுருங்கிவிட்ட ‘குதிரை பேர’ அதிமுக ஆட்சியாளர்களின் ஊழல் - கொள்ளை நடவடிக்கைகளுக்கு ஊக்கமளித்திடக் கூடாதென்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என்றுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS