Top Stories

Grid List

முள்ளிவாய்க்கால் இன அழிப்புக் களத்தில் ஓடிய செங்குருதியின் நெடி பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட மூர்ச்சையடைய வைக்கிறது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவர் அரசியலமைப்புக்கு புறம்பாக நியமித்துள்ள ராஜபக்ஷ அரசாங்கத்தினரும் நாட்டு மக்களை நாளுக்கு நாள் பைத்தியக்காரர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களில் இரண்டு தடவைகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை 120க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதனை, அறிவித்து சபாநாயகர் கரு ஜயசூரிய எழுதிய கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. 

தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் தேர்ந்தெடுத்த ‘சமூக நீதி’க்கான இடர்நிறைந்த பாதையில் வெற்றிகரமாகப் பயணித்த கலைஞர் மு.கருணாநிதி, தான் மறைந்த பின்னும் போராட்டத்தின் வழியே தனக்கான உரிமையை மீட்டிருக்கின்றார். அதாவது, மெரீனா கடற்கரையில் அண்ணாவின் அரவணைப்பில் மீளாத்துயில் கொள்ள வேண்டும் என்கிற தன்னுடைய இறுதி ஆசைக்காக அவர் சட்டப் போராட்டம் நடத்தி வென்றிருக்கிறார். இப்போது, அவர் அண்ணாவின் அரவணைப்பில் அமைதியாக உறங்குவார். 

வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக பா.டெனீஸ்வரன் தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கான இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பித்திருக்கின்றது. 

Top Stories

Grid List

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக சிறை வைக்கப்பட்டிருந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். 

“அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, எமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி உரிய நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவை அறிவிப்போம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியும், தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவருமான மொஹமட் சஹ்ரான் ஹஸீம், தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்துள்ளதாக மரபணுப் பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கும் வரை கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. 

சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியின் பள்ளப்பட்டி தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், ''சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் பேசியதை சர்ச்சைக்குரியதாக எடுத்துக் கொண்ட அரவக்குறிச்சி போலிசார் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கி அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும், 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கும் வேட்பாளர்களை நியமித்திருந்தார் முன்னால் நடிகரும் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருபவருமான கமல்ஹாசன்.

தமிழகத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 14 ஆம் திகதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இனி வரும் சில நாட்களுக்கு சென்னை உட்பட வட மாவட்டங்களில் வெப்பக் காற்று வீசும் என தமிழ்நாட்டு வானிலை நிலையத்தைச் சேர்ந்த பிரதீப்ஜான் என்பவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை தஜிகிஸ்தானின் வாக்தட் என்ற நகரிலுள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

ரமலான் நோன்பு கடைப் பிடிக்கப் பட்டு வரும் இவ்வேளை மே 20 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவை நோக்கித் தாக்க வந்த இரு ஏவுகணைகளை சவுதி வான் படை இடைமறித்துத் தாக்கி அழித்துள்ளது.

நாம் அண்மைக் காலமாக ஈரானை மிக நுணுக்கமாக அவதானித்து வருகின்றோம்.

செவ்வாய்க்கிழமை பப்புவா நியூகினியாவை 7.5 ரிக்டர் அளவு கொண்ட வலிமையான நிலநடுக்கம் 10 Km ஆழத்தில் கோக்கோப்போ இலிருந்து 44 Km வடகிழக்கே தாக்கியதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.

Top Stories

Grid List

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற 2019 ஆமாண்டுக்கான IPL இறுதிப் போட்டியில் 1 ரன்னால் சென்னை அணியை வீழ்த்தி வெற்றியைத் தனதாக்கிக் கொண்ட மும்பை அணி 4 ஆவது முறையும் IPL கோப்பையை சுவீகரித்து சேம்பியனாகி உள்ளது.

இந்தியாவில் 12 ஆவது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

 

இன்று மே 1ம் திகதி, இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை தோற்கடித்து, சென்னை அணி மறுபடியும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியதுடன், மொத்தம் 18 புள்ளிகளை பெற்றுள்ளது.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை அணிகளுக்கு இடையில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 1 ஒரு ஓட்டத்தால் போராடி தோற்றது

குறுக்கு வழியில் நுழைந்து சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டை தந்திரமாக பெற்றவர் ஞானவேல்ராஜா.

விஜய்க்கும் சொந்தப்பட ஆசை வந்திருக்கிறது. இப்போது தமிழ்சினிமா இருக்கிற சூழலில் தயாரிப்பாளர்கள் ஒவ்வொருவராக ‘காலி’யாகிக் கொண்டிருக்கிறார்கள்.

‘அயோக்யா’ படத்தை பெரிதும் நம்பியிருந்த விஷாலுக்கு அப்படம் கொடுத்த பரிசு அவ்வளவு சந்தோஷமாக இல்லை.

விஷாலின் நிழல் போலிருந்த பலர் இப்போது அவருடன் இல்லை.

நியோன் சர்வதேச திரைப்பட விழாவான «Visions du Réel» (உண்மையின் தரிசனங்கள்) இன் 50வது வருட கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த 9 நாட்களின் பின்னர் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. எவ்வருடத்திலும் போலன்றி சுமார் 45’000 க்கும் மேற்பட்ட திரை ஆர்வலர்கள் திரைப்பட விழாவில் கலந்து கொண்டது வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பாலியல் வன்முறை, வன்புணர்வு (Rape) எனும் சொற்கள் எவ்வகையில் அடையாளம் காணப்படுகின்றன? 2012 இல் டெல்லி முனீர்கா நெடுஞ்சாலையில் பேருந்தில் கும்பல்-வன்புணர்வுக்கு உள்ளான அந்த பெண் அனுபவித்த அதே வேதனையை, ஒரு 19 வயதுப் பெண் தான் காதல் வயப்பட்டதாக நம்பும் இளைஞனுடனான முதலாவது உடலுறவு இச்சையிலும் அனுபவித்திருக்க நேர்ந்திருக்கும்.

சர்வதேச ஆவணத் திரைப்பட விழாவான «Visions du Réel, » (உண்மையின் தரிசனங்கள்) ஏப்ரல் 5ம் திகதி, சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில், கோலாகலமாகத் தொடங்கியது.

Him.Her.The Other (அவன், அவள், மற்றும் மற்றையவர்கள்), தமிழில் «மூவர்» எனும் பெயரிலும், சிங்கள மொழியில் «துந்தனெக்» எனும் பெயரிலும், இலங்கையின் மூன்று மிக முக்கிய / கொண்டாடப்படும் திரை இயக்குனர்களான பிரசன்ன விதானகே, விமுக்தி ஜயசுந்தர மற்றும் அசோக ஹந்தகம ஆகியோரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது.

இளையராஜாவின் ‘பீக் ஹவர்’ காலத்தில் வாழ்ந்த பதினெட்டு ப்ளஸ்களுக்கு இந்த ஒரு ஜென்மம் போதும்.

“எப்படியிருந்த விவேக் இப்படியாகிட்டாரே...!” டோன்ட் பேனிக். இது பாராட்டுதான்!

தமிழ்சினிமாவை அண்மைக்காலமாக ப்ளூ கலர் வைரஸ்களும், ரெட் கலர் பாக்டீரியாக்களும் அட்டாக் பண்ணி வருவதால், ‘சோ கால்டு’ ஒலக சினிமா படைப்பாளிகளை விட்டு, ரசிகர்கள் பல மைல் தொலைவு தள்ளியிருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (டு லெட், விசாரணை போன்ற உலக சினிமா உருவாகக் காரணமான படைப்பாளிகள் மட்டும் மன்னிப்பீர்களாக!)

வரவர காதல், பீட்ஸா டெலிவரியை விடவும் சுலபமாகி விட்டது.

அண்மையில் .நா மனித உரிமைகள் கவுன்சிலின் 40வது அமர்வில் திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்ட குறுந்திரைப்படம் இது. «No Fire Zone» ஆவணத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக, இலங்கையின் இறுதியுத்தத்தில் நடந்தவற்றை மீள்பார்வையிட்டபடி  இலங்கை அரசு அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் எப்படி சர்வதேச அழுத்தத்தை தட்டிக்கழிக்கிறது என்பதனைக் காண்பிக்கிறது இக்குறுந்திரைப்படம்.

இன்று எஞ்சியிருக்கும் ஈழத்துச் சனத்துக்கு மரணம் என்ற ஒன்றைத் தவிர மீதி எல்லாவற்றையும் கண்டு கடந்திருக்கும். வயது வேறுபாடில்லாமல் எல்லோருக்குமே பொதுமையான அனுபவம் இது. போர் தின்ற அந்தச் சனங்கள் மரணத்தின் நுனி வரை போய் வந்திருக்கிறார்கள். அந்த வாழ்வியல் அனுபவங்கள் ஏறக்குறைய எல்லோருக்குமே வெவ்வேறான கால கட்டத்தில் நிகழ்ந்தேறியிருக்கின்றன. 

அமைதி நிலவும் இடத்தில் வளர்ச்சி தெரியும் என்பது ஆய்வாளர் கூற்று. அமைதி நிலவும் இடத்தில் ஆற்றல் பெருகும் என்பது ஆன்மீகக் கருதுநிலை.

குறு நிலங்களாகப் பிளவுபட்டிருந்த அம் மலைப்பிரதேசம், பல்வேறு ஆட்சியாளர்களால் பலகாலம் அடிமைப்பட்டுக் கிடந்தது. ஆஸ்திரிய மன்னனால், அடிமைப்பட்டுக்கிடந்த காலமதில், அரச அதிகாரியாகச் செயலாற்றிய ஜெஸ்லர், மலைவாழ் மக்களை மிகவும் கொடுமைப்படுத்தினான்.

இந்தப் பிரபஞ்சத்தில் எமது பூமி தோன்றும் போது அதன் வயது 9 பில்லியன் வருடங்கள் எனப்படுகின்றது.

கடந்த சில நூறு மில்லியன் ஆண்டுகளில் நிலவின் தரை மேற்பரப்பில் ஏற்பட்டு வரும் சுருக்கங்கள் காரணமாக இதுவரை நிலவு 150 அடிக்கு சுருங்கி அதாவது சின்னதாகி இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

சூரியனில் இருந்து பூமிக்கு ஒளி வந்து சேர 8 நிமிடங்களும் 20 விநாடிகளும் எடுக்கும் என்பதை நீங்கள் சில நேரம் அறிந்திருக்கலாம்.

செவ்வாய்க் கிரகத்தில் அதன் புவியியல் கூறுகளை அவதானிப்பதற்காக நாசாவால் செலுத்தப் பட்டு கடந்த ஆண்டு அதன் தரையில் இறங்கி ஆய்வுப் பணியைத் தொடங்கியது இன்சைட் விண்கலம்.

4தமிழ்மீடியாவின் மனமே வசப்படு.

மேலும் மனமே வசப்படு பதிவுகளுக்கு : 
http://www.4tamilmedia.com/spirituality/maname-vasappadu
https://www.facebook.com/ManameVasappadu/

மேலும் மனமே வசப்படு : https://www.facebook.com/ManameVasappadu/

உலகம்

ஞாயிற்றுக்கிழமை ஜேர்மனியில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலின் முடிவுகளின் படி அந்நாட்டின் அதிபராக 4 ஆவது முறையும் ஏஞ்சலா மேர்கெல் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

மொத்தம் 7 பேர் போட்டியிட்ட இந்த அதிபர் தேர்தலில் கிறித்தவ ஜனநாயக யூனியன் கட்சி சார்பாக போட்டியிட்ட ஏஞ்சலா மேர்கெலுக்கும் சமூக ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்ட மார்டின் ஷூல்ஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இதில் ஏஞ்சலா மேர்கெல் 33.2 % வீத வாக்குகளையும் மார்டின் ஷுல்ஸ் 20.8% வீத வாக்குகளையும் பெற்றிருந்தனர். இதில் அதிகபட்ச வாக்குகளைப் பெற்ற ஏஞ்சலா மேர்கெல் அதிபரானார். ஜேர்மனியின் முதல் பெண் அதிபரான ஏஞ்சலா மேர்கெல் கடந்த 12 வருடங்களாக அங்கு அதிபராகத் தொடர்ந்து கடமையாற்றி வருவதுடன் ஐரோப்பாவின் வளர்முக நாடுகளில் ஒன்றான ஜேர்மனியை அவர் பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் முன்னேற்றம் அடையத் தொடர்ந்து பங்காற்றி வருகின்றார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் ஏஞ்சலா மேர்கெல் உரையாற்றிய போது இது மகத்தான வெற்றி என்றும் தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறியதுடன் இனி வரும் காலங்களில் ஜேர்மனியின் வளர்ச்சிக்கும் மக்கள் நலத் திட்டங்களுக்கும் தமது கிறித்தவ ஜனநாயக யூனியன் கட்சியும், சமூக ஜனநாயகக் கட்சியும் எபோதும் இணைந்து செயற்படும் என்றும் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS