Top Stories

Grid List

முள்ளிவாய்க்கால் இன அழிப்புக் களத்தில் ஓடிய செங்குருதியின் நெடி பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட மூர்ச்சையடைய வைக்கிறது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவர் அரசியலமைப்புக்கு புறம்பாக நியமித்துள்ள ராஜபக்ஷ அரசாங்கத்தினரும் நாட்டு மக்களை நாளுக்கு நாள் பைத்தியக்காரர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களில் இரண்டு தடவைகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை 120க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதனை, அறிவித்து சபாநாயகர் கரு ஜயசூரிய எழுதிய கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. 

தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் தேர்ந்தெடுத்த ‘சமூக நீதி’க்கான இடர்நிறைந்த பாதையில் வெற்றிகரமாகப் பயணித்த கலைஞர் மு.கருணாநிதி, தான் மறைந்த பின்னும் போராட்டத்தின் வழியே தனக்கான உரிமையை மீட்டிருக்கின்றார். அதாவது, மெரீனா கடற்கரையில் அண்ணாவின் அரவணைப்பில் மீளாத்துயில் கொள்ள வேண்டும் என்கிற தன்னுடைய இறுதி ஆசைக்காக அவர் சட்டப் போராட்டம் நடத்தி வென்றிருக்கிறார். இப்போது, அவர் அண்ணாவின் அரவணைப்பில் அமைதியாக உறங்குவார். 

வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக பா.டெனீஸ்வரன் தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கான இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பித்திருக்கின்றது. 

Top Stories

Grid List

“நாடு முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைப்பதே எனது நோக்கம். அனைத்து தலைவர்களுக்கும் பெருந்தலைவனாவது எனது நோக்கமல்ல.” என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதியான தேவதாசனின் உண்ணாவிரதம் சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் விகாரை அமைப்பதற்கு இடைக்காலத் தடை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) உத்தரவிட்டுள்ளது. 

சமீபத்தில் மாரடைப்பால் காலமான டெல்லி முன்னால் முதல்வர் ஷீலா தீட்ஷித் உடல் முழு அரச மரியாதையுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப் பட்டுள்ளது.

தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கையைக் கடுமையாக விமரிசிக்கும் விதத்தில் நடிகர் சூர்யா அண்மையில் தெரிவித்த கருத்துக்கு பாஜக வின் எச் ராஜா மற்றும் தமிழிசை போன்றோர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

கேரளாவில் வியாழக்கிழமை முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அங்கு 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

நிலவில் அமெரிக்க வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் முதன் முதலில் கால் பதித்து எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதியுடன் 50 வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தால் இன்று திங்கள் அதிகாலை 2.51 மணிக்குத் திட்டமிடப் பட்ட சந்திராயன் 2 இன் ஏவுகை திடீர் தொழிநுட்பக் கோளாறினால் விண்ணில் ஏவ 56 நிமிடங்கள் இருந்த நிலையில் கைவிடப் பட்டுள்ளது.

ஜூலை 18 ஆம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ப்லோரல் பார்க் பகுதியில் இந்து மத குருவான ஹரிஸ் சந்தர் புரி என்பவர் வீதியில் நடந்து கொண்டிருந்த போது 52 வயது மதிக்கத்தக்க இன்னொரு நபரால் அவர் கடுமையாகத் தாக்கப் பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் இராணுவத்தால் சிறை பிடிக்கப் பட்ட ஸ்டெனா இம்பெரோ என்ற பிரிட்டனைச் சேர்ந்த எண்ணெய் சரக்குக் கப்பலில் 18 இந்திய மாலுமிகள் கைப்பற்றப் பட்டதை பிடிஐ என்ற செய்தி நிறுவனம் உறுதிப் படுத்தியுள்ளது.

ஜப்பானின் ஹோன்சு தீவிலுள்ள கியோட்டோ என்ற நகரில் அமைந்துள்ள 3 தளங்களுடன் கூடிய மிகப் பெரிய கட்டட அமைப்பைக் கொண்ட கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோவில் இரு தினங்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இன்று ஜூலை 20 ஆம் திகதி சந்திரனில் மனிதன் முதன் முதல் கால் பதித்து 50 வருடங்கள் பூர்த்தியடைகின்றது.

Top Stories

Grid List

இன்று ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்வருடத்துக்கான ஐசிசி உலகக் கிண்ணக் கோப்பைப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்றிருந்த நிலையில் சூப்பர் ஓவர் வழங்கப் பட்டு அதிலும் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்ற நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியான இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை மழை காரணமாக இடை நிறுத்தப் பட்டு இன்று புதன்கிழமை மீண்டும் ஆரம்பமான இந்திய நியூசிலாந்து அணிகளுக்கான அரையிறுதிப் போட்டியில் இந்தியா அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.

சனிக்கிழமை இங்கிலாந்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியை இந்தியா அணி 7 விக்கெட்டுக்களாலும் அவுஸ்திரேலிய அணியைத் தென்னாப்பிரிக்க அணி 10 ரன்களாலும் வெற்றி கொண்டுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை எட்ஜ்பஸ்டொன் மைதானத்தில் இந்திய வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை இந்தியா 28 ரன்களால் வெற்றி கொண்டுள்ளது.

இன்னும் படமே துவங்கவில்லை. அதற்குள் மூன்று முறை ‘மாநாடு’ படப்பிடிப்பை தள்ளி தள்ளி வைத்துவிட்டார் சிம்பு.

சிவாஜி, கந்தசாமி என்று ஸ்ரேயாவுக்காக பெரும் ரசிகர் கூட்டம் விசிலடித்து பரவசப்பட்ட காலம் ஒன்று இருந்தது.

‘சிந்துபாத்’ ரிலீஸ் நேரத்தில் பெரும் நெருக்கடிக்கு ஆளானது அப்படம். நாலாபுறத்திலும் கை நீட்டிதான் படத்தையே வெளியிட்டார்கள்.

லெஜன்ட் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் சினிமா ஹீரோவாகிவிட்டார்.

நியோன் சர்வதேச திரைப்பட விழாவான «Visions du Réel» (உண்மையின் தரிசனங்கள்) இன் 50வது வருட கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த 9 நாட்களின் பின்னர் நேற்றுடன் முடிவுக்கு வந்தன. எவ்வருடத்திலும் போலன்றி சுமார் 45’000 க்கும் மேற்பட்ட திரை ஆர்வலர்கள் திரைப்பட விழாவில் கலந்து கொண்டது வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பாலியல் வன்முறை, வன்புணர்வு (Rape) எனும் சொற்கள் எவ்வகையில் அடையாளம் காணப்படுகின்றன? 2012 இல் டெல்லி முனீர்கா நெடுஞ்சாலையில் பேருந்தில் கும்பல்-வன்புணர்வுக்கு உள்ளான அந்த பெண் அனுபவித்த அதே வேதனையை, ஒரு 19 வயதுப் பெண் தான் காதல் வயப்பட்டதாக நம்பும் இளைஞனுடனான முதலாவது உடலுறவு இச்சையிலும் அனுபவித்திருக்க நேர்ந்திருக்கும்.

சர்வதேச ஆவணத் திரைப்பட விழாவான «Visions du Réel, » (உண்மையின் தரிசனங்கள்) ஏப்ரல் 5ம் திகதி, சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில், கோலாகலமாகத் தொடங்கியது.

Him.Her.The Other (அவன், அவள், மற்றும் மற்றையவர்கள்), தமிழில் «மூவர்» எனும் பெயரிலும், சிங்கள மொழியில் «துந்தனெக்» எனும் பெயரிலும், இலங்கையின் மூன்று மிக முக்கிய / கொண்டாடப்படும் திரை இயக்குனர்களான பிரசன்ன விதானகே, விமுக்தி ஜயசுந்தர மற்றும் அசோக ஹந்தகம ஆகியோரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது.

கதவே இல்லாத எலிப்பொறியில், பல்லே இல்லாத எலி சிக்கிய மாதிரி செல்வராகவனின் ஃபேட் அவுட் காலத்தில் அவரிடம் சிக்கியிருக்கிறார் சூர்யா.

இளையராஜாவின் ‘பீக் ஹவர்’ காலத்தில் வாழ்ந்த பதினெட்டு ப்ளஸ்களுக்கு இந்த ஒரு ஜென்மம் போதும்.

“எப்படியிருந்த விவேக் இப்படியாகிட்டாரே...!” டோன்ட் பேனிக். இது பாராட்டுதான்!

தமிழ்சினிமாவை அண்மைக்காலமாக ப்ளூ கலர் வைரஸ்களும், ரெட் கலர் பாக்டீரியாக்களும் அட்டாக் பண்ணி வருவதால், ‘சோ கால்டு’ ஒலக சினிமா படைப்பாளிகளை விட்டு, ரசிகர்கள் பல மைல் தொலைவு தள்ளியிருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (டு லெட், விசாரணை போன்ற உலக சினிமா உருவாகக் காரணமான படைப்பாளிகள் மட்டும் மன்னிப்பீர்களாக!)

அண்மையில் .நா மனித உரிமைகள் கவுன்சிலின் 40வது அமர்வில் திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்ட குறுந்திரைப்படம் இது. «No Fire Zone» ஆவணத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக, இலங்கையின் இறுதியுத்தத்தில் நடந்தவற்றை மீள்பார்வையிட்டபடி  இலங்கை அரசு அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் எப்படி சர்வதேச அழுத்தத்தை தட்டிக்கழிக்கிறது என்பதனைக் காண்பிக்கிறது இக்குறுந்திரைப்படம்.

இன்று எஞ்சியிருக்கும் ஈழத்துச் சனத்துக்கு மரணம் என்ற ஒன்றைத் தவிர மீதி எல்லாவற்றையும் கண்டு கடந்திருக்கும். வயது வேறுபாடில்லாமல் எல்லோருக்குமே பொதுமையான அனுபவம் இது. போர் தின்ற அந்தச் சனங்கள் மரணத்தின் நுனி வரை போய் வந்திருக்கிறார்கள். அந்த வாழ்வியல் அனுபவங்கள் ஏறக்குறைய எல்லோருக்குமே வெவ்வேறான கால கட்டத்தில் நிகழ்ந்தேறியிருக்கின்றன. 

அமைதி நிலவும் இடத்தில் வளர்ச்சி தெரியும் என்பது ஆய்வாளர் கூற்று. அமைதி நிலவும் இடத்தில் ஆற்றல் பெருகும் என்பது ஆன்மீகக் கருதுநிலை.

குறு நிலங்களாகப் பிளவுபட்டிருந்த அம் மலைப்பிரதேசம், பல்வேறு ஆட்சியாளர்களால் பலகாலம் அடிமைப்பட்டுக் கிடந்தது. ஆஸ்திரிய மன்னனால், அடிமைப்பட்டுக்கிடந்த காலமதில், அரச அதிகாரியாகச் செயலாற்றிய ஜெஸ்லர், மலைவாழ் மக்களை மிகவும் கொடுமைப்படுத்தினான்.

ஆக்டோபர் 3 ஆம் திகதி பூமிக்கு மிக அருகே கடக்கும் 2007 FT3 என்ற விண்கல் பூமியுடன் மோதினால் சுமார் 2700 மெகாடன் டி என் டி இற்கு இணையான சக்தியை வெளிப்படுத்தும் என சமீபத்தில் சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வருடம் ஒரு உதைப்பந்தாட்ட மைதானத்தின் விட்டத்தை உடைய மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு அருகே கடக்கவிருப்பதாகவும் அது பூமியுடன் மோத கிட்டத்தட்ட 1/7000 மடங்கு வாய்ப்பு உள்ளதாகவும் நாசா அறிவித்துள்ளது.

எமது பூமிக்கு மிக அருகே 4 ஒளியாண்டு தொலைவில் உள்ள நட்சத்திரமான புரோக்ஸிமா செண்டூரியை (Proxima Centauri) இனை நாம் பூமியில் இருந்து வெறும் கண்ணால் பார்க்க முடிவதில்லை.

இந்தக் கேள்வியை வானியலில் ஆல்பெர்ஸ் முரண்பாடு (Olber's Paradox) என்பர். இக்கேள்வியை முதலில் எழுப்பியது ஆல்பெர் என்ற அறிஞர் என்பதால் இந்த சர்ச்சைக்கு அவர் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

4தமிழ்மீடியாவின் மனமே வசப்படு.

மேலும் மனமே வசப்படு பதிவுகளுக்கு : 
http://www.4tamilmedia.com/spirituality/maname-vasappadu
https://www.facebook.com/ManameVasappadu/

மேலும் மனமே வசப்படு : https://www.facebook.com/ManameVasappadu/

ஜோதிடம்

கடகம்: மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் கடக இராசி அன்பர்களே! நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப்பெயர்ச்சி ?

நிகழும் மங்களகரமான கலியுகாதி 5118 - சாலிவாகன சகாப்தம் 1939 - பசலி 1427 - கொல்லம் 1193ம் ஆண்டு ஸ்வஸ்தி்ஸ்ரீஹேவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 4ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 19.12..2017 சுக்ல ப்ரதமையும் செவ்வாய்கிழமையும் மூலா நக்ஷத்ரமும் வ்ருத்தி நாமயோகமும் பவ கரணமும் அமிர்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 08.45க்கு - காலை 9.59க்கு சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். தனுசு ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். தனுசு ராசிக்கு வரும் சனி பகவான் மகர ராசிக்கு விகாரி வருடம் பங்குனி மாதம் 15ம் தேதி - 28.03.2020 - சனிக்கிழமையன்று உதயாதி நாழிகை 22.54க்கு மாறுகிறார்.

4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் எழுதிய, கடக ராசியினருக்கான விரிவான சனிப் பெயர்ச்சி பலன்களை இங்கே வாசித்துப் பயன் பெறலாம்.

கிரகநிலை: இதுவரை உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி ரண ருண ரோக ஸ்தானத்திற்கு செல்கிறார்.
மூன்றாம் பார்வையால் அஷ்டம ஸ்தானத்தையும், எழாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் தைரிய வீரிய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலன்: இடம் பெயரும் சனி பகவானால் உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பொது நலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும். குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும். உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பங்குச் சந்தை முதலீடு போன்ற இனங்கள் மூலம் திடீர் பண வரவு உண்டாகும்.

ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். நல்ல குருநாதரிடம் தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும்.

உடல்நலனைப் பொறுத்தவரை பலருக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் பணிகள் கசக்கிப் பிழியக் கூடும். இதனால் உடலில் அவ்வப்போது சோர்வு உண்டாகும்.

தனித்து நின்று போட்டிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான காரியங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். உங்கள் நடையில் ஒரு மிடுக்கு உண்டாகும். அவ்வப்போது சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். வசிக்கும் வீட்டை பழுது பார்ப்பதற்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை சாதுர்யமாகச் சமாளிக்க சனி பகவான் உதவுவார். சிலர் புதிய இல்லங்களுக்கு மாறுவார்கள். உங்களுக்கு பேராற்றல் உண்டாகும். புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். சாமர்த்தியசாலி என்று பெயர் எடுப்பீர்கள். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக நடந்து கொள்வார்கள். நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். இதனால் மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள்.

உத்யோகஸ்தர்கள் கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். எப்போதும் நிதானமாகவே பேசி சக ஊழியர்களின் அன்பைப் பெறவும். இதற்குப் பயனும் உண்டு. உங்கள் உடல் உழைப்பிற்கு மேல் இரு மடங்கு வருமானத்தைக் காண்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களும் பலன் தரும்.

வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளையும் துணிந்து செய்யலாம்.

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். கட்சிப் பிரச்சாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதேசமயம் எவரையும் குறைத்து மதிப்பிடாமல் செயலாற்றவும்.

கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். சில விரையங்களும் அவ்வப்போது உண்டாகும் என்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.


பெண்களுக்குக் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதே சமயம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதி காப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

மாணவமணிகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டைப் பெறுவீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களின் அறிவுரைப்படி நடந்துகொண்டு மேலும் சிறப்படையுங்கள்.

புனர் பூசம் 4ம் பாதம்:
வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும். எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றி கிடைக்கும். யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும். அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம்.

பூசம்:
எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து எடுத்து கொண்ட காரியங்களில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும். அனாவசிய செலவுகளை நீக்கி அத்யாவசிய செலவுகளை மட்டுமே செய்வீர்கள். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.

ஆயில்யம்:
மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
சிறப்பு பரிகாரம்: வேப்பிலையை அருகிலிருக்கும் புற்று அம்மன் கோவிலுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீகர்ப்பாயை நம” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 7
அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், சுக்கிரன், குரு
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

- 4தமிழ்மீடியாவுக்காக: பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)

 

உங்கள் ஜாதகத்தினடிப்படையிலான பிரத்தியேக பலன்களை கட்டண சேவை மூலம் அறிந்து கொள்ளலாம்.  ஜோதிடருன் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

BLOG COMMENTS POWERED BY DISQUS