Top Stories

Grid List

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவர் அரசியலமைப்புக்கு புறம்பாக நியமித்துள்ள ராஜபக்ஷ அரசாங்கத்தினரும் நாட்டு மக்களை நாளுக்கு நாள் பைத்தியக்காரர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களில் இரண்டு தடவைகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை 120க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதனை, அறிவித்து சபாநாயகர் கரு ஜயசூரிய எழுதிய கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. 

தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் தேர்ந்தெடுத்த ‘சமூக நீதி’க்கான இடர்நிறைந்த பாதையில் வெற்றிகரமாகப் பயணித்த கலைஞர் மு.கருணாநிதி, தான் மறைந்த பின்னும் போராட்டத்தின் வழியே தனக்கான உரிமையை மீட்டிருக்கின்றார். அதாவது, மெரீனா கடற்கரையில் அண்ணாவின் அரவணைப்பில் மீளாத்துயில் கொள்ள வேண்டும் என்கிற தன்னுடைய இறுதி ஆசைக்காக அவர் சட்டப் போராட்டம் நடத்தி வென்றிருக்கிறார். இப்போது, அவர் அண்ணாவின் அரவணைப்பில் அமைதியாக உறங்குவார். 

வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சராக பா.டெனீஸ்வரன் தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கான இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) பிறப்பித்திருக்கின்றது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்திருக்கின்றார்கள். 

Top Stories

Grid List

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகின்றது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இன்று வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் நேற்று வியாழக்கிழமை இரவு சந்தித்துப் பேசியுள்ளதாக கூறப்படுகின்றது. 

சட்டரீதியான அரசாங்கமொன்றை உருவாக்குவதே ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையாகும் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வைச் சேர்ந்தவருமான வி.செந்தில் பாலாஜி, தமது ஆதரவாளர்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்துள்ளார். 

ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்ட சபைத் தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வியடைந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகளை பணிவுடன் ஏற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதாக் கட்சியின் பின்னடவைக் காட்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 

 இன்று துருக்கியில் அதிவேக ரயில் மற்றொரு என்ஜின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். 

வரலாற்றில் முதன் முதலாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (UAE) செல்லும் பாப்பாண்டவராக போப் பிரான்சிஸ் விரைவில் பெருமை பெறவுள்ளார்.

சீனாவின் பன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாய் இன் அதிபர் ரென் ஜெங்பெய் இன் மகளும் அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ் கனடாவில் கைது செய்யப் பட்டுள்ளார்.

4 ஆண்டுகளுக்கும் அதிகமாக நடைபெற்று வரும் யேமென் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பேச்சுவார்த்தை தற்போது சுவீடனில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றது.

Top Stories

Grid List

இந்திய மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் குவஹாதியில் தொடங்கிய முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 47 பந்துகள் மீதமிருந்த போது வெற்றியை தனதாக்கியது.

இன்று ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இடம்பெற்ற ஃபிபா உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் 4 இற்கு 2 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணியை வீழ்த்தி பிரான்ஸ் 2 ஆவது முறையும் சேம்பியன் பட்டம் வென்றுள்ளது பிரான்ஸ்.

இம்முறை லீக் சுற்றுப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த அணியான பெல்ஜியம் சனிக்கிழமை மாலை 2 இற்கு 0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி 3 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

சற்று முன்பு நடந்து முடிந்த இங்கிலாந்து மற்றும் குரோஷிய அணிகளுக்கான கால் பந்தாட்டப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக 2 ஆவது எக்ஸ்ட்ரா டைம் வரை சென்றது.

வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் மறைவுக்கு தமிழகத்தை சேர்ந்த அத்தனை தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவிட்டார்கள்.

‘இமைக்கா நொடிகள்’ படத்தில் ஏகப்பட்ட செலவுகளை இழுத்துவிட்டுவிட்டதாக அப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து மீது குற்றச்சாட்டுகள் உண்டு

சமீபத்தில் சிறுத்தை சிவாவை சந்தித்த அஜீத், “தளபதி படம் எப்போ ஸ்டார்ட் பண்றீங்க?” என்று கேட்டிருக்கிறார்.

தனுஷ் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் மாரி2 படத்தில் ஒரு டயலாக்.

Him.Her.The Other (அவன், அவள், மற்றும் மற்றையவர்கள்), தமிழில் «மூவர்» எனும் பெயரிலும், சிங்கள மொழியில் «துந்தனெக்» எனும் பெயரிலும், இலங்கையின் மூன்று மிக முக்கிய / கொண்டாடப்படும் திரை இயக்குனர்களான பிரசன்ன விதானகே, விமுக்தி ஜயசுந்தர மற்றும் அசோக ஹந்தகம ஆகியோரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இது.

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் தங்கச் சிறுத்தை விருதை (Golden Leopard), முதன் முறையாக சிங்கப்பூர் சினிமா திரைப்படம் ஒன்று தட்டிச் சென்றுள்ளது.  A LAND IMAGINED (கற்பனை நிலம்) எனும் திரைப்படத்திற்காக அதன் இயக்குனர் Yeo Siew இவ்விருதை வெற்றி கொண்டுள்ளார்.

இம்முறை லொகார்னோ திரைப்பட விழாவில், Cineasti del Presente எனப்படும் போட்டிப் பிரிவில் பார்த்த சில திரைப்படங்கள் அத்திரைப்பட இயக்குனர்களின் எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திச் சென்றிருக்கின்றன. 

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door பிரிவில் தொடர்ந்து மூன்று வருடமாக மையப்படுத்தப்பட்டு வந்த இந்தியா அல்லாத தெற்காசிய நாடுகளின் நலிந்த சினிமா பார்வை இவ்வருடத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

அமாவாசைக்கு லீவு போட்ட காக்காவுக்கு ஆறு வேளையும் பசி நிச்சயம்.

கையடக்க போனுக்குள் மெய்யடக்கிக் கிடக்கிறது நாடு! சந்தோஷம் மனுஷனுக்கு.

அநேக பெண்களின் ‘கடுப்ப’ங்கரையே, அடுப்பங்கரைதான்! இந்த ‘புகைச்சல்’ மனங்களுக்கு ஒரு புல்லாங்குழல் பீட் போட்டால், அதுதான் ‘காற்றின் மொழி’! ‘என்னால முடியும்’ என்ற மந்திரச் சொல்லை, கிடைக்கிற இடத்திலெல்லாம் பயன் படுத்துங்கள்.

‘தாயம் உருட்டி விளையாடுவதற்கு சி.எம். நாற்காலி என்ன அதிர்ஷ்ட குலுக்கலா?’ என்று அங்கலாய்க்கிற அத்தனை அரசியல்வாதிகளுக்கும், நடுவில் எவன் நுழைந்தாலும் நடு மண்டை சுடுமல்லவா?

இன்று எஞ்சியிருக்கும் ஈழத்துச் சனத்துக்கு மரணம் என்ற ஒன்றைத் தவிர மீதி எல்லாவற்றையும் கண்டு கடந்திருக்கும். வயது வேறுபாடில்லாமல் எல்லோருக்குமே பொதுமையான அனுபவம் இது. போர் தின்ற அந்தச் சனங்கள் மரணத்தின் நுனி வரை போய் வந்திருக்கிறார்கள். அந்த வாழ்வியல் அனுபவங்கள் ஏறக்குறைய எல்லோருக்குமே வெவ்வேறான கால கட்டத்தில் நிகழ்ந்தேறியிருக்கின்றன. 

அமைதி நிலவும் இடத்தில் வளர்ச்சி தெரியும் என்பது ஆய்வாளர் கூற்று. அமைதி நிலவும் இடத்தில் ஆற்றல் பெருகும் என்பது ஆன்மீகக் கருதுநிலை.

குறு நிலங்களாகப் பிளவுபட்டிருந்த அம் மலைப்பிரதேசம், பல்வேறு ஆட்சியாளர்களால் பலகாலம் அடிமைப்பட்டுக் கிடந்தது. ஆஸ்திரிய மன்னனால், அடிமைப்பட்டுக்கிடந்த காலமதில், அரச அதிகாரியாகச் செயலாற்றிய ஜெஸ்லர், மலைவாழ் மக்களை மிகவும் கொடுமைப்படுத்தினான்.

“நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!” 

விண்ணில் பூமியைச் சுற்றி வரும் சர்வதேச நாடுகளின் மிக முக்கிய விண்கலமான சர்வதேச விண்வெளி ஆய்வுகூடத்துடன் ISS தற்போது ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் இணைக்கப் பட்டுள்ளது.

உலகில் கிட்டத்தட்ட 130 வருடங்களாகப் பாவனையில் இருந்த கிலோகிராம், அம்பெயர், கெல்வின் மற்றும் மூல் போன்றவற்றின் வரையறைகள் இன்னமும் திருத்தமாக மாற்றப் பட்டுள்ளன.

அண்மையில் வெளியிடப் பட்ட புதிய ஐ.நா அறிக்கை ஒன்றில் காலநிலை மாற்ற நிபுணர் ஒருவர் வெளியிட்ட தகவலில் தற்போது பூமியின் ஓசோன் மண்டலத்திலுள்ள ஓட்டை மெல்ல மெல்ல அடைக்கப் பட்டு வருவதாகவும் இன்னமும் 50 வருடங்களில் அது பூரணமாக அடைக்கப் பட்டு விடும் என்றும் கூறப் பட்டுள்ளது.

பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான SUPARCO விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஒப்பந்தம் ஒன்றில் சீனாவுடன் கைச்சாத்திட்டுள்ளது.

மேலும் மனமே வசப்படு : https://www.facebook.com/ManameVasappadu/

மேலும் மனமே வசப்படு :   https://www.facebook.com/ManameVasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu

இந்தியா

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பினை கொண்டிருந்தார் என்கிற காரணத்தைக்கூறி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மலேசியாவுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். 

மலேசிய நாட்டுக்கு ஆபத்தானவர்களின் பெயர் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வைகோவின் கடவுசீட்டை பறிமுதல் செய்து, இன்றிரவு விமானத்தில் சென்னைக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியின் மகளின் திருமண வரவேற்பு நிகழச்சியில் கலந்துகொள்ள வைகோ, அங்கு சென்றுள்ளார்.

மலேசிய தூதரகம் கடந்த வாரமே வைகோவுக்கு விசா வழங்கி விட்ட நிலையில், நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.55 மணிக்கு வைகோ தனது செயலாளர் அருணகிரியுடன் மலேசியா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இன்று காலை 6.30 மணிக்கு கோலாலாம்பூர் விமான நிலையத்தை சென்றடைந்த அவரிடம், மலேசிய குடிவரவு சோதனையில் “நீங்கள் மலேசிய நாட்டுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளனர்.

அங்கிருந்த உயர் அதிகாரிகள், “நீங்கள் இலங்கையிலுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்” என்று சொல்லி விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாகப் பல கேள்விகளைக் கேட்டுள்ளனர். அத்துடன், இலங்கையில் உங்கள் மீது பல வழக்குகள் உள்ளதாக கூறியுள்ளனர்.

“இல்லை, நான் இந்தியக் குடிமகன்,” என்று வைகோ கூறி கடவுச் சீட்டைக் காட்டிய போதிலும் அதை அவர்கள் ஏற்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

“மலேசியா நாட்டுக்கு ஆபத்தானவர் என்ற பட்டியலில் உங்கள் பெயர் இருக்கின்றது. எனவே உங்களை மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது” என்று கூறி, வைகோவின் கடவுச் சீட்டை வாங்கி வைத்துக்கொண்டதாக குறித்த சம்பவம் தொடர்பில் மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS