கட்டுரைகள்

பூமிக்கு வருகை தராமலேயே மனிதனை விட அறிவில் விஞ்சிய வேற்றுக்கிரக வாசிகளால் (ஏலியன்களால்) எமது பூமியில் பேரழிவை ஏற்படுத்த முடியும் என ஹவாயை சேர்ந்த வானியல் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

அதாவது நட்புக் கொள்வது போல் அல்லது அச்சுறுத்துவது போன்ற தகவல்களை அல்லது சமிக்ஞைகளை Malware எனப்படும் செயற்கை அறிவுக்கு (AI) இற்கு அழிவைத் தரும் குறியீடுகளாக இந்த ஏலியன்களால் அனுப்ப முடியுமாம். இதனால் இவ்வாறு சந்தேகத்துக்கு இடமான செய்திகளை அவதானித்தால் அவற்றைத் திறந்து பார்வையிடாது அழிப்பதே உகந்தது என்றும் நிபணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மால்வேர் ஆனது மனித இனத்தின் சக்தி மற்றும் தகவல் தொழிநுட்பத்தை முடக்குவதோடு மாத்திரம் நின்று விடாது பிரபஞ்சத்தில் பூமியையும் அதில் வாழும் மனிதனின் முக்கிய இருப்பிடங்களையும் கூட ஏலியன்களுக்குக் காட்டிக் கொடுத்து விடும் என்றும் இவர்கள் கூறுகின்றனர். Interstellar comunication என்ற ஆய்வுக் கல்வி மூலமே இத்தகவல்கள் வெளியிடப் பட்டுள்ளன. இதில் உதாரணமாக ஏலியன்கள் மனிதனுக்கு அச்சத்தை ஏற்படுத்தவென உங்கள் சூரியனை நாளைக்கே நாம் சூப்பர் நோவாவாக வெடிக்கச் செய்து விடுவோம் என்ற சாத்தியமற்ற மால்வேர் செய்திகளையும் அனுப்ப வாய்ப்புள்ளதாம்.

இதேவேளை ஸ்டீஃபன் ஹாவ்கிங் போன்ற முக்கிய வான் பௌதிகவியல் விஞ்ஞானிகளின் ஒருமித்த கருத்தாக ஏலியன்களுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்துவது என்பது மனித இனத்துக்கு ஆபத்தாகவே முடியும் என்றும் அவர்கள் பூமியை ஆக்கிரமித்துத் தமது காலனியாக்க வழி வகுத்து விடும் என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.