கட்டுரைகள்

7. இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்னை பார்த்தும் பார்க்காதது போல் ஓடி ஓளிபவரை என்ன செய்வது?

அவரை இரண்டு முறை நான் அழைத்த போதும் கூட்டத்திற்குள் தன்னை மறைத்துக்கொள்வதில் குறியாக இருந்தார். தைரியமாக எப்போதும் தன்னை மட்டுமே முன்னிறுத்த விரும்பும் ஆவன்னாரூனா என்றழைக்கப்படும் ஆறுமுகத்தை பார்த்தே விட வேண்டுமென்று அவர் நின்று கொண்டிருந்த கூட்டத்தை நோக்கி முன்னேறிச் சென்றேன்.

என் முதலாளி கொடுத்த அவசர வேலையின் காரணமாக டவுன்ஹால் அருகேயிருந்த வணிகவரி அலுவலகத்திற்கு வந்த போது தான் எதிர்பாரத விதமாக ஆறுமுகத்தைப் பார்த்தேன். அந்த நீண்ட வளாகத்திற்குள் நுழைந்து அருகேயிருந்த காவல் நிலையத்திற்கு அருகே என் வாகனத்தை நிறுத்திய போது தான் ஆறுமுகம் தென்பட்டார், அவர் காவல் நிலையத்தின் முன்னால் கூடியிருந்த கூட்டத்திற்குள் நின்று கொண்டிருந்தார்.

நான் கூட்டத்திற்குள் மறைவது போல் மறைந்து பின்னால் போய் நின்று அவர் முதுகை தொட்டபோது திடுக்கிட்டு என்னை திரும்பி பார்த்தார். திரும்பிய ஆறுமுகத்தின் முகம் எனக்கு ஏராளமான அதிர்ச்சியைத் தந்தது. ஓட்டிய கன்னமும் ஒடுங்கிய பள்ளத்தில் எலும்புக்ள் துருத்திக் கொண்டு இருந்தது, பல நாட்கள் சவரம் செய்யப்படாத தாடி. கண்களைச் சுற்றிலும் கரு வளையம். அவர் ஜீவனில்லாமல் சிரித்த போது பற்களில் நிக்கோடின் கறை தெரிந்தது. ஆறுமுகம் போட்டடிருந்த ஆடைகள் அழுக்காய் இருந்தது.

என்ன நடந்தது?

நான் திருப்பூருக்குள் உள்  நுழைந்த நேரம். அம்மா கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

” உன்னுடன் படித்த முருகேசனும் நீ இருக்கும் அதே கொங்கு நகரில் தான் பணிபுரிகின்றான். பழகி வைத்துக்கொள் “. முருகேசன் பனிரெண்டாம் வகுப்பில் இரண்டு வருடங்கள் கணக்கு பாட பிரிவில் படித்தவன். நான் படித்தது அறிவியல் பிரிவு. மொழி படங்களுக்காக மொத்த மாணவர்களும் ஒன்றாய் அமரும் போது எனக்கு படபடப்பு தான் அதிகமாய் இருக்கும். கணக்குப் பிரிவில் உள்ளவர்கள் முரட்டுத் தனமாய் இருப்பார்கள். ஆசிரியரை பாடம் நடத்த விடாமல் படுத்தி எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

இந்த முருகேசனும் அந்தக்கூட்டத்தில் ஒருவனாக இருந்தான். ஆனால் முருகேசன் பேசும் வார்த்தைகள் கூட மென்மையாகத் தான் வெளியே வரும்., அவனைப் பற்றித்தான் அம்மா தெரிவித்திருந்தார்கள். ஒரு ஞாயிறுக்கிழமை அன்று தனலெஷமி திரை அரங்கு பின்னால் சென்று, உள்ளே அலைந்து திரிந்து அவனுடைய இருப்பிடத்தைக் கண்ட போது எனக்கு திகைப்பாய் இருந்தது.

முருகேசனை நான் பார்த்த போது முக்கி முக்கி துணி மூட்டையை தூக்கிக்கொண்டிருந்தான்? அப்போது தான் முதல் முதலாக அந்த எந்திரத்தை பார்த்தேன். சாயமேற்றிய துணியை சுருக்கம் நீக்கி, தேவையான அளவிற்கு சுத்தமும் அளவுமாய் மடிப்பு கலையாமல் தரும் எந்திரம். அதை ஸ்டீம் காலண்டரிங் மிசின் என்றான்.

எந்திரத்தின் அருகே விறகு போட்டு எரிக்கத் தேவைப்படும் கொதிகலன் இருந்தது, தீயினால் கொதிக்க வைக்கப்பட்ட சுடுநீர் ஆவியால் ஸ்டீம் காலண்டரிங் மிஷின் செயல்பட்டுக் கொண்டுருந்தது. ஏற்றுமதிக்கென்று இருக்கும் எந்திரங்களைப் போலவே இது உள்நாட்டு வியாபாரத்திற்கு எளிமையாக வடிவமைக்கப்பட்ட எந்திரம்.

என்னைக் கண்டதும் முருகேசன் ஓடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டான். இருவரும் ஒரே பள்ளியில் படித்த போதிலும் அதிக பழக்கமில்லை. பனிரென்டாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்ற காரணத்தால் தேவகோட்டை ரஸ்தாவில் உள்ள தொழில் நுட்ப பயிற்சிக்கூடத்தில் சேர்ந்திருந்தான். என்னைப் போலவே எங்கங்கோ சுற்றி கடைசியில் திருப்பூர் வந்து சேர்ந்திருந்தான்.

அவனுடன் பேசிக்கொண்டிருந்த போது அவனுடைய முதலாளி எதிரே வந்தார். எனக்கு அவரை முருகேசன் அறிமுகம் செய்து வைத்த போது நான் மயங்கி விழாத குறையாக தடுமாறி நின்றேன். அவர் பெயர் ஆறுமுகம். முருகேசனும் நானும் படித்த பள்ளியில் எங்களுக்கு மூன்று வருடம் பின்னால் படித்துக் கொண்டிருந்தவர். எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். ஊர்ப்பழக்கத்தில் ஆறுமுகம் என்ற பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களை வைத்து அழைப்பது போல் ஆவன்ரூனா என்று ஊரில் அறிமுகமாகியிருந்தவர்.

குட்டை உருவமும் அதே உருண்டை முகமும் சுருண்ட கேசமுமாய மாறாத தோற்றத்தில் இருந்தார். என்னைப் பார்த்ததும் ஊர் வழக்கப்படி எங்கள் குடும்பப் பெயரைச் சொல்லி மரியாதையாய் அழைத்து சாப்பிட அழைத்துச் சென்றார்.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு அறையில் இருந்து அடுத்த அறைக்கு அவசர காரணங்களால் மாற்றப்படுவதுண்டு. ஒவ்வொரு முறையும் இந்த ஆறுமுகத்தை பார்த்து இருக்கின்றேன். வெளியே கொட்டி வைத்துள்ள மணலில் முட்டி போட்டுக்கொண்டிருக்கும் மாணவர்கள் கண்களுக்குத் தெரிவார்கள். எல்லா நாட்களும் இந்த ஆறுமுகம் மட்டும் ஒருமுகமாக நின்று கொண்டிருப்பார்.

தமிழ் கூட ததிங்கிணித்தோம் போடும் மாணவர்கள் வரிசையில் இருந்த ஆறுமுகம் ஒரு நிறுவனத்தின் முதலாளி என்ற போது வாழ்க்கை என்னைப் பார்த்துச் சிரித்தது? படிப்பு என்பதற்கும், வாழ்க்கை கொடுக்கும் அனுபவ படிப்பிற்கும் உள்ள வித்யாசங்களை அன்று தான் முதல் முதலாக கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். ஒன்பது பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்ற கலந்தர், காளீஸ்வர ஜெயக்குமார் இருவரும் இன்று வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கை எனக்கு வேறொரு வித்யாச பாடத்தைக் காட்டியது.

கலந்தர் ரோட்டுக் கடை மூலமாக பிரயாணி விற்றுக்கொண்டிருக்கிறார். ஜெயக்குமார் துரித அஞ்சல் சேவையை தனியாக நடத்த முற்பட்டு வாழ்க்கையை தொலைத்து டெல்லியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர்கள் கற்ற கல்வி எந்தப் பாதையுமே அவர்களுக்கு காண்பிக்கவில்லை. பெற்ற அனுபவக் கல்வி மட்டுமே இங்கு பல பேருக்கு நல்ல பொருளாதார வாழ்க்கையை அறிமுகப் படுத்தியுள்ளது? அதுவும் திருப்பூரில் வருட வருடம் எகிறிக்கொண்டிருக்கும் மில்லியன் பில்லியன் அந்நியச்செலவாணி வரைபட குறியீடு அத்தனையுமே அனுபவம் மட்டுமே தந்த வெற்றியாகும்.

திருப்பூரில் எவருமே மெத்தப்படித்தவர்கள் அல்ல. எந்த நிர்வாக மேலாண்மைக் கல்லூரிகளிலும் படித்தவர்களும் அல்ல. தொடர்ச்சியான உழைப்பு. சாத்தியமான திட்டங்கள். உறக்கம் மறந்த செயற்பாடுகள், தொழிலுக்காகவே தங்களை அர்பணித்த வாழ்க்கை. இந்த குணாதிசியங்கள் தான் இங்கு ஒவ்வொரு நபரையும் தொழில் அதிபர்களாக வளர்த்துள்ளது.

மனிதர்களின் வாழ்க்கையில் வெற்றி மட்டுமே முக்கியம். அவரவர் வந்த பாதைகள் எதுவும் இங்கு முக்கியமல்ல. நாம் வெற்றியாளனா? இல்லை வெற்றி பெற்றபவனைப் பார்த்து புழுங்கிக்கொண்டுருப்பவனா? இரண்டே கேள்விகள் தான்? முருகேசனின் முதலாளி ஆறுமுகத்தைப் பார்த்ததும் இப்படித்தான் என் மனதில் ஓடியது. அதற்குப் பிறகு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் முருகேசன் என்னை வரவழைத்து பேசிக் கொண்டிருப்பான்.

ஒவ்வொரு முறையும் முருகேசனை சந்தித்து விடைபெறும் போது ஆறுமுகத்தின் வளர்ச்சிகளைப் பற்றி என்னிடம் தெரிவிப்பான். நான் வியந்தபடியே வந்து விடுவேன். மும்பை நாரிமன் பகுதி போல் திருப்பூரிலும் முக்கிய பகுதி ஒன்று உண்டு. அந்த இடத்திற்குப் பெயர் லஷ்மி நகர். திருப்பூர் லஷ்மி நகரில் கிடைத்த ஒட்டுச்சந்தில் ஆறுமுகம் தொடங்கிய அலுவலகமென்பது அவருக்கு அதிர்ஷ்டத்தின் தொடக்கமாய் இருந்தது.

ஏற்றுமதி வர்த்தகம் போல் இங்கு ஈரோடு சந்தைக்கென்றே தனியான உலகமுண்டு. எளிமையான விலை. தரமோ தராதரமோ தேவையில்லை. ஒரு தடவை துவைத்தாலே உதிர்ந்து விடும் சாயம் பற்றிக் கூட கவலைப்பட தேவையில்லை. ஏற்றுமதிக்குப் பிறகு மிச்சமான அனைத்து கச்சடா சமாச்சாரமும் லஷ்மி நகரில் கிடைக்கும். இந்த தொழிலை சார்ந்து கோடிக்கணக்கான ரூபாய்கள் தினந்தோறும் புழங்கிக் கொண்டிருக்கும்.

நேரிடையான ஏற்றுமதியாளர்கள் சம்பாரிக்காத பணத்தை இந்த துறையில் இருப்பவர்கள் மிக எளிதில் சம்பாரிப்பதுண்டு. கையில் காசு? வாயில் தோசை? எளிமையான எதார்த்தமான தொழில் சூத்திரங்கள். கையில் பணம் இருந்தால் போதும். ஒவ்வொரு நிறுவனத்திலும் ஏறி இறங்கி அலைய வேண்டும், அவமானங்கள் தாங்கிக் கொள்ளும் மனம் இருந்தால் மிக விரைவில் முன்னேறிவிடலாம். இப்படித்தான் ஆறுமுகம் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் ஆறுமுகத்தின் பார்வை இதிலும் புத்திசாலித்தனமாய் யோசித்து இருந்தது.

ஒவ்வொரு ஏற்றுமதி நிறுவனங்களிலிருந்தும் கிடைக்கும் மிச்சமான துணி வகைகளுக்கென்று ஒரு அலுவலகம். ஈரோடு சந்தைக்கென்று ஒரு தனியான அலுவலகம். இரண்டு அலுவலகத்திற்கும் தனியான பங்குதாரர்கள். ஆறுமுகம் எதிர்பார்த்ததை விட தொழில் வாழ்க்கை சிறப்பாக மேலேறத் தொடங்கியது.

வெற்றி மேல் வெற்றி வர புதிதான இரண்டு சக்கர வண்டிகள் வந்தது. அதுவே மூன்று வருடத்திற்குள் வெளிநாட்டு வாகனங்கள் வரைக்கும் கொண்டு வந்து சேர்த்தது, ஒவ்வொரு நிலையிலும் ஜெயித்து வந்த ஆறுமுகம் தைரியமாக சிறிய அளவில் ஜட்டி பனியன் தயாரிக்கும் தொழிற் கூடத்தையும் உருவாக்கினார். ஏற்கனவே சிறிய அளவில் கையால் ஓடிக் கொண்டுருந்த சாயமேற்றும் எந்திரத்தை மாற்றி லட்சக்கணக்கான முதலீட்டில் நவீன தொழில் நுட்ப எந்திரங்களை வாங்க வங்கி கடன் தரும் அளவிற்கு வளர்ந்தார்.

ஆறுமுகத்திற்கு எல்லாவற்றிலும் வந்த துணிவு வீட்டுக்கு அருகில் இருந்த அடுத்தவன் மனைவி மேல் ஆசையையும் உருவாக்கியது. 15 வருடத்திற்குள் ஒருவனின் சொத்து மதிப்பு 100 கோடி என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

முருகேசன் என்னிடம் சொன்ன போது என்க்கு வியப்பேதுமில்லை. முருகேசன் பார்வையில் ஆறுமுகத்தின் வளர்ச்சி ஆச்சரியமாய் இருந்தது. ஆனால் என்னுடைய பார்வையில் உள்நாட்டு வர்த்தகத்தில் வந்த தொகை என்பதாகத்தான் ஆச்சரியமளித்தது.

ஆறுமுகத்திற்கு எத்தனை அதிர்ஷ்டங்கள் என்றாலும் ஒவ்வொன்றுக்கும் பின்னால் மகத்தான் உழைப்பு இருந்தது. அவர் தொட்ட அனைத்தும் துலங்கிய கால காட்டத்தில் அமைந்தது என்ற போதிலும் அத்தனைக்கும் பின்னாலும் படிப்பறிவு இல்லாத அனுபவ அறிவே ஆறுமுகத்தை உயர்த்தியது.

தென் மாவட்டங்கள் அனைத்துக்குமே திருப்பூர் என்றால் சொர்க்கலோகம். ஆனால் திருப்பூரின் உள்ளே வந்தவர்களுக்குத் தான் தெரியும்? 24 மணிநேரமும் உழைக்கத் தைரியம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் சொர்க்கலோகமாய் இருக்கும்.

ஆறுமுகம் பத்தாம் வகுப்பு கூட எட்டிப்பார்க்காமல் திருப்பூர் வந்தவர். ஆனால் வந்த இடத்தில் உண்மையான உழைப்பை காட்ட வெகு எளிதாக உயர முடிந்தது. கூடா நட்பும், பிறன்மனை நோக்கலும் தவறென்று ஆறுமுகத்திற்கு புரியவில்லை. காரணம் அவருக்குப் புரியாத தமிழ் பாடத்தைப் போலவே வாழ்க்கையில் கிடைத்த வசதிகள் அதிக மிதப்பை தந்தது. தினமும் குடியும் கும்மாளுமும் இருந்தார். அதுவும் ஒரு நாள் முடிவுக்கு வந்தது.

கழுதையாய் சுமந்த கல்லீரல் ஒரு நாள் உன் கணக்கு முடிந்து விட்டது என்று சொல்லி, ஆறுமுகம் துப்பிய எச்சிலில் இரத்தம் வடிந்தது. பிறன் மனையாள் தந்த சுகம் தொழில் வாழ்க்கையை முடக்கி வைத்தது. வாங்கிப் போட்டிருந்த இடங்கள் அனைத்தும் அவள் பெயரில் பத்திரமாக மாறத் தொடங்கியது. ஆறுமுகம் அவளை எதிர்த்து கேட்ட போது அப்போது அவளுடன் ஓட்டி இருந்தவன் “ உன்னை வெட்டிக் கொன்று விடுவேன் “என்று அடிக்க ஓடி வர ஆறுமுகம் அமைதியாக ஒதுங்க வேண்டியதாகிவிட்டது.

ஆனால் ஆறுமுகத்திற்கு அதிர்ஷ்டம் வேறொரு வகையில் உதவியது, இத்தனை பிரச்சனைகளுக்கிடையேயும் தன்னை ஒதுக்காமல் தொடர்ந்து கொண்டிருக்கும் ஆறுமுகத்தின் மனைவி ஆதரவாய் நின்றார். இதன் காரணமாகவே ஆறுமுகம் கடன் வாங்கிய நபர்களால் உருவான பிரச்சனைகளுக்காக தினந்தோறும் காவல் நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் வந்து போய்க் கொண்டிருக்கிறார். மொத்தத்தில் மனைவி தாங்கிப் பிடிக்க தன்னுடைய அடுத்த கட்ட பயணத்திற்காக இன்று ஆறுமுகம் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இன்று வரையிலும் திருப்பூருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையில், பெண்களின் அர்பணிப்பு உணர்வு தான் இந்திய குடும்ப கலாச்சாரத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த பெண்கள் ஒவ்வொரு நிறுவனத்திலும் பணிபுரியும் போது படக்கூடிய அவஸ்த்தைகள் சொல்லி மாளாது. இதை விட ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் குழந்தைகள் ஏற்றுமதி நிறுவனங்களில் இரவு பகல் பாராமல் வேலை செய்து கொண்டிருப்பவர்களை கணக்கில் கொண்டு வர முடியாது.

காத்திருப்போம்...

- 4தமிழ்மீடியாவுக்காக: திருப்பூர் ஜோதிஜி

டாலர் நகரம் - 6

நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடிகை’யை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானர் 35 வயது இயக்குநர் நாக் அஷ்வின்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது