கட்டுரைகள்
Typography

செவ்வாய்க் கிரகத்தின் தரையில் இறங்கி ஆய்வு செய்யும் இன்னொரு விண்வண்டியான 'இன்சைட்' இனை அட்லஸ் வி ராக்கெட் மூலம் சனிக்கிழமை இந்திய நேரப்படி மாலை 4.35 மணிக்கு கலிபோர்னியாவின் வாண்டென்பர்க் விமானப் படைத் தளத்தில் இருந்து நாசா விண்வெளி ஆய்வு மையம் ஏவியுள்ளது.

கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு விண்ணில் பயணித்து எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்தில் இந்த இன்சைட் தரையிறங்கவுள்ளது.

முன்னைய ரோவர் மற்றும் கியூரியோசிட்டி போன்ற விண்வண்டிகளைப் போல் அல்லாது இந்த இன்சைட் விண்வண்டி செவ்வாயின் தரையில் துளையிட்டு அதன் உட்புறப் பண்புகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளது. இதற்கு செவ்வாயின் அதிர்வுகளை அளவிடும் கருவியினை அது பயன்படுத்தவுள்ளது. செவ்வாயின் உட்புறக் கட்டமைப்பைப் பயில இந்த இன்சைட் விண்கலம் ரேடியோ விஞ்ஞான ஆராய்வை மேற்கொள்ளவுள்ளது.

இன்சைட்டின் ஏவுகை முன்னதாக 2016 மார்ச்சில் தீர்மானிக்கப் பட்ட போதும் அதன் போது SEIS என்ற அந்த விண்கலத்தின் பாகம் செயலிழந்ததால் அதன் ஏவுகை தள்ளிப் போடப்பட்டது. தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்ட இன்சைட் விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் மேற்கொள்ளவுள்ள ஆய்வுப் பணியால் செவ்வாயின் புவியியல் கூறு எவ்வாறு பரிணாமம் அடைந்தது என்று அறிய முடியும் என்பதுடன் இது சூரியனைச் சுற்றி வரும் ஏனைய தரை மேற்பரப்பைக் கொண்ட கிரகங்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் மற்றும் பூமியின் நிலவு குறித்தும் புதிய அறிதல்களுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்